Environmental Pollution and Sustainable Development (Tamil)
சூழல் மாசடைதலும் பேண்தகு அபிவிருத்தியும் அறிமுகம் இயந்திரமயமான இந்த உலகில் தொழிற்சாலைகளினதும், கைத்தொழில் பேட்டைகளினதும் அதிகரிப்பினால் சுற்றுச்சூழலனானது பல்வேறு வகையான பாதிப்புகளிற்கு உள்ளாகின்றது. சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை வளங்களானவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன. எனவே அரிதான அவ்வளங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி நம் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். அதிகரித்து வரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாரியளவிலான சுற்றுச் சூழல் வளங்களின் உபயோகத்தினையும், அதேநேரம் இதனால் சூழலுக்குள் விடப்படும் பெருமளவிலான கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்தையும் கவனத்தில் எடுக்கும்போது சுற்றுச்சூழலின் தரத்தை பேணிப் பாதுகாப்பதில் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான தேவை முக்கியத்துவமடைகின்றது. அந்தவகையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எனும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நிலைத்து நிற்க...