Student Centered Teaching (Tamil)
மாணவர் மையக் கற்பித்தல்
அறிமுகம்
மாணவர் மையக்கற்றல் என்பது கற்போர் மையக்கல்வி எனவும் அழைக்கப்படும். இந்தக் கல்வி முறையானது ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, மாணவரிடம் சென்றடைகிறது. உண்மையாகவே இம்முறையானது மாணவர்களை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் தனது கல்விப் பொறுப்புகளை கையில் ஏற்று புதிய கல்வி முறையை மேம்படுத்த பயன்படுகிறது. மாணவர் மையக் கற்றல் மூலம் பல்வேறு திறன்களையும், பயிற்சிகளையும், வாழ்நாள் முழுவதும் தனது அன்றாட பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன்களையும் மாணவர்கள் பெறுகின்றன.
மாணவர் மையக் கற்றல் கோட்பாடானது அறிவு கட்டமைப்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களது அறிவு கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள புதிய தகவல்களும் முந்தைய அனுபவங்களும் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வுலகினில் கற்போர் மையக் கற்பித்தல் அதன் பண்பியல்புகள், அணுகுமுறையின் தேவை, இவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள், மாணவர் மையக் கற்பித்தல் ஆசிரியர் மையக் கற்பித்தல், ஒப்பீடு ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மாணவர் மையக் கற்றலானது மாணவர்களின் ஆர்வத்தையும், திறமையும், திறனையும் மற்றும் கற்றல் பாணிகள் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
கற்போர் மையக் கற்பித்தல் என்றால் என்ன?
கற்போர் மையக் கற்பித்தல் என்பது ஒரு வகையான கற்பித்தல் அணுகுமுறையாகும். மாணவர் மையக் கற்பித்தல் முறையானது உயர் கல்விக்கு வழிவகுக்கிறது. கற்போர் மையக் கற்பித்தலானது ஒரு வழிக் கற்பித்தல் முறையல்ல. இந்த அணுகுமுறையானது மாணவருக்கு ஆசிரியர் தகவலை வழங்குவதை காட்டிலும் மாணவருக்கு தகுந்த கற்றல் வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. கற்போர் மையக் கற்பித்தல் மூலம் மாணவர்கள் எதை கற்கின்றனர் என்பதைக் காட்டிலும் எதைக் கற்றுக் கொள்கின்றனர் என்பதில் முக்கியத்துவம் வாய்க்கின்றது.
கற்போர் மையக் கற்றல் மற்றும் கற்பித்தல்
கல்வியாளர்கள் மூன்று விதமான உத்திகளை இவ்வணுகுமுறையில் கையாண்டனர். கற்போர் மையக் கற்பித்தல் என்பது எவர் ஒருவர் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனரோ அவர்மேல் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகும். கற்போர் மையக் கற்பித்தலானது கற்கும் செயல்பாட்டில் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகும். இவ்விரு உத்திகளும் ஆசிரியருக்கான முறையீடாக அமைந்துள்ளது. ஏனெனில் இவை கற்பித்தலில் ஆசிரியரின் பங்கை அதிகம் அடையாளம் காட்டுகிறது. ஆசிரியர் மையக் கற்றல் செயல்பாட்டு அணுகுமுறையை கற்பிப்போர் அதிகம் விரும்புவதில்லை. ஏனெனில் அவை நுகர்வோர் மேல் அதிக கவனம் காட்டப்படுவதால், ஆசிரியர் பங்கை குறைக்கிறது.
மாணவர் மையக் கற்பித்தலின் சிறப்பியல்புகள் :--
துடிப்புடன் கற்றல், மாணவரின் பங்களிப்பு, ஆர்வம் இதர உத்திகளுடன் கூடிய மாணாக்கர் கற்றல் செயல்பாடே மாணவர் மையக் கற்றலாகும். இதன் அடிப்படையில் ஐந்து சிறப்பம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
1. மாணவர் மையக் கற்பித்தலின் பல்வகைக் கற்றல் பாணிகள் :--
ஆசிரியரானவர் பல்வேறு கற்கும் பாணிகளை மாணவர்களிடையே வழங்குகின்றனர். கற்கும் செயல்பாட்டை மாணவர்கள் அதிகம் நுகர்ந்தாலும் அதில் ஆசிரியர்களின் வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. பல்வேறு கற்கும் செயல்பாட்டின் பாணிகளின் மூலம் மாணவர்கள் தேவையான கற்கும் செயல்திறன்களையும், அறிவையும் பெறுகின்றனர். இதில் ஆசிரியர் பயிற்சி, மாணவரின் பயிற்சியை காட்டிலும் அதிகம் காணப்படுகிறது.
2. மாணவர் மையக் கற்பித்தலில் கற்றல் திறனுக்கான வழிமுறைகள் :--
மாணவர் மையக் கற்பித்தலில் ஆசிரியரானவர் சிந்திக்கும் உத்திகள், பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், மதிப்பிடுதல், தர்க்க ரீதியான விவாதம், ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை கற்பித்தல் மூலமாக மாணவர்கள் அறநெறி ஒழுக்கத்திலும், முதன்மை பெற்று விளங்குகிறது. இவ்வகை செயல்பாட்டின் மூலம் மாணவர்களின் தன்னார்வத்தின் மூலம் வித்தியாசமடைகின்றன. ஆராய்ச்சிகள் கற்கும் செயல்திறன்கள் வெளிப்படையான பாடக்கருத்துக்கள் கற்பிக்கும் முறையில் வேகமடைகின்றது.
3. மாணவர் மையக் கற்பித்தலின் செயல்பாட்டின் ஆக்க சிந்தனையுடன் கற்றல் :-
மாணவர் மையக் கற்றலின் ஆசிரியரின் பல்வேறு கலந்துரையாடல், திட்டமிடும் பணியின் கீழ் பல்வேறு கிளர் வினாக்கள் எழுப்பப்பட்டன. அவை மாணவரின் கற்றல் செயல்பாட்டின் பொறுப்புகளையும், முடிவுகளையும் ஆராய்ச்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது. இதன் முக்கிய இலக்கானது மாணவர்கள் கற்றலின் தத்தம் விழிப்புணர்வு அடைதலும் பல்வேறு கற்றல் திறன்களை பெறுவதும் மற்றும் ஆக்க சிந்தனையுடன் அவற்றின் மேல் செயல்பட்டு வளர்வதாகும்.
4. மாணவர் மையக் கற்பித்தலின் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கட்டுப்பாடுடனான கற்றல் செயல்பாடுகள் :-
ஆசிரியர் பல்வேறு விதமான முடிவுகள் கற்றல் செயல்பாட்டில், மாணவருக்கு வழங்குவர். ஆசிரியர் மாணவர்கள் எதை படிக்க வேண்டும்? எவ்வாறு கற்க வேண்டும்? எது கற்க வேண்டும்? கட்டுப்பாடுடனான கற்றல் நிகழ்வை நிகழத்த வேண்டும், கற்றல் செயல்களில் மாணவர்கள் எதை கற்கின்றனரோ, அவை சரியா? தவறா? என்றறிந்து தாம் என்ன கற்க வேண்டும் என்பதை மாணவர் தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் ஆசிரியர் முடிவுகளையும் கற்றல் ஊக்கிகளை கொண்டு கற்றல் செயல்படுகிறது.
கற்போர் மைய ஆசிரியர் தனது பொறுப்புகளை பல்வேறு விதமான ஆற்றல்களை கொண்டு கையாள்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தனது ஒப்படைப்புகளை சரிவர முடித்து காட்டுபவர் வகுப்பறையில் கலந்துரையாடல் சீராக நடைபெறும் அச்செயலின் போதே, கற்றல் அடைவுகளை மதிப்பிட உதவுகிறது.
5. இணைந்து கற்றலை ஊக்குவிக்கிறது மாணவர் மையக் கற்றல் :--
நேர்மறையான கற்றலை இதன் மூலம் தெளிவாக காணமுடிகிறது. மாணவர்கள் குழுவாக இணைந்து கற்றல் செயலில் ஈடுபட்டு மாணவர் மையக் கற்பிப்போர் அடையாளம் காண முடிகிறது. ஆராய்ச்சிகளை உறுதி செய்து குழுவில் இருக்கும் ஒவ்வொரு மாணவர்களும் பங்கேற்பர்.
இத்துறையின் வல்லுனர்கள் பல்வேறு பரிந்துரைகளை மேற்கொண்டு கற்போர் கற்றல் செயலில் ஈடுபட வாய்ப்பளிக்கின்றனர். கற்போர் மையக் கற்பித்தலின் மூலம் சுயமாகவே சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர். குழுவில் உள்ள அனைத்து மாணவர்களும் தனது எண்ணத்தையும், கருத்துக்களையும் மற்றும் உணர்ச்சிகளையும் பரிமாறிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.
கற்பித்தலில் கற்போர் மைய அணுகுமுறைகளின் தேவை :--
- மாணவர்களிடம் அறிவுக்கான அடிப்படைத் தளத்தை உருவாக்கிடல். ஒருவர் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கும் அறிவு தொகுப்பே அறிவு பெறுவதற்கான அடித்தளமாக செயல்படுகிறது. எனவே மாணவர்களின் அறிவு கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் மாணவர் கற்றல் கற்பித்தலை மேற்கொள்கின்றார்கள்.
- மாணவர்கள் தமது எண்ணங்களையும், நடத்தைகளையும் ஆழ்ந்து சிந்தித்து நெறிப்படுத்திக் கொள்ள உதவுவதே கற்றல் ஆகும். இதன் முக்கிய அம்சம் ஒருவர் தனது எண்ணங்கள் நடத்தைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து நெறிப்படுத்தலாகும். வெற்றிகரமாக திகழும் மாணவர்கள் கற்றலில் துடிப்புடன் திகழ்கிறார்கள்.
- ஊக்கமும், உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் மாணவர் மையக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் ஊக்கமும், மனநிறைவும் அதிகரிக்கின்றன. இவ்விரு வினைபயன்கள் மாணவர்களின் உயர் கல்வியை அடைய வழிகோலுகிறது.
- தனிநபர் மேம்பாடும், தனியாள் வேற்றுமைகளும் இவை மாணவர் மையக் கற்பித்தலில் கருத்தில் கொள்ளப்படுகின்றன. மரபு நிலை காரணிகள் சூழ்நிலைக் காரணிகள் செல்வாக்கினால் நாம் ஒவ்வொருவரும் மனித வளர்ச்சியின் எல்லா பருவ நிலைகளிலும் முன்னேறி செல்கின்றோம். எனவே தான் மாணவர் மையக் கற்பித்தலை ஆசிரியர் நாட வேண்டிய அவசியமாகிறது.
- கற்றலில் சமூக சூழலில் செல்வாக்கு மாணவர்கள் தமது அறிவை கட்டமைத்திடும் செயல்பாட்டில், அதாவது கற்றலில் துடிப்புடன் ஈடுபடுதலும் சமூக இடைவினைகளும் செல்வாக்கு செலுத்துவதாக புரூணர், பியாஜே மற்றும் வைகாட்ஸ்கி முன்மொழிந்த கற்றல் கொள்கைகள் உரைக்கின்றன.
ஆசிரியர் மையக் கற்பித்தலின் நன்மைகள்
- மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துகிறது.
- மாணவர்கள் பயின்றவற்றை தக்க வைக்கின்றது.
- மாணவர்களின் சுய மதிப்பீட்டை மேம்படுத்துகிறது.
- மாணவர்களுக்கு இடையேயான இடைவினைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதோடு, சிந்திக்கும் திறனை அதிகரித்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண உதவுகிறது.
- காரணம் அறியும் தன்மையை வேகப்படுத்துகிறது.
கற்போர் மையக் கற்பித்தலின் உத்திகள் மற்றும் நன்மைகள்
ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப உத்திகள் ஆனவை கற்போர் மையக் கற்பித்தலில் பெரும் விளைவை ஏற்படுத்துகிறது. தொழில் நுட்பமானது புதிய மற்றும் மாறுபட்ட வாய்ப்புகளை மாணவர் - ஆசிரியர் இடைவினைக்கு வழங்குகிறது. அத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த கற்றலானது மாணவருக்கு இடையே கணினி பற்றிய அடிப்படை புரிதல்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஆதாரப்பூர்வமான முடிவுகள் தொழில்நுட்ப பயன்பாட்டினால் மாணவர்களின் புரிதல் நிலைகளை மதிப்பீடு செய்ய பெரிதும் உதவுகிறது.
1. தொழில்நுட்ப தேர்வுக்கான வழிமுறைகள்
கற்றல் செயல்பாட்டில் பரந்து விரிந்து காணப்படும் தொழில்நுட்ப அமைப்பில் மென்பொருள் நிகழ்வு வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகள் முதன்மை இடம் பெறுகின்றன. இதன் வாயிலாக பாடங்கள் பல்வேறு விதமான வடிவமைக்கப்பட்ட சாயல்களில் வழங்கப்படுகின்றன. அஃது கலைச்சொற்கள் விரிவாக்கம், இலக்கிய வடிவமைப்புகள் ஆகியவை உலக நடப்புகளுக்கு ஏற்ற வகையில் தகுந்த அனுபவங்களை மாணவர்களுக்கு அளிக்கின்றன. கற்போர் பல பதிவுகளை பல்வேறு வேகங்களிலும் மாறுதல்களிலும் பதிவு செய்து தத்தம் மொழியினை தாமே கேட்டுணர்ந்து செயல்படுகின்றனர். மென்பொருள் ஆனது புதிய வடிவங்களை கொண்ட காரணிகளை கொண்டு ஐக்கிய நாடுகள் பயிற்சி மேலாண்மை மதிப்பீட்டு நுணுக்கங்களையும் வழங்குகிறது.
2. ஒருங்கிணைந்த பயன்கள்
ஒருங்கிணைந்த கற்றல் மூலம் தொழில்நுட்ப சேவைகள் அடிப்படையான பாடப்பொருளை கொண்டு வகுப்பறைகள் ஆய்வரங்கம் பள்ளிக்கு வெளியே கற்றல் (உதாரணமாக, வீடுகளிலும், நூலகங்களிலும், சமூக மையங்களிலும்) ஆசிரியர் இல்லாமலே கற்க முடிகிறது.
தொழில்நுட்பங்களிலும் தரமாகவே ஒருங்கிணைந்து மென்பொருளை உள்ளடக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்படும்.Computer Mediated Communication (CMC) இதன் மூலம் மாணவர்களிடையே இடைவினை, இணையம் வழியாக தரமாகவே கற்க இயல்கிறது. கற்றல் நிகழ்வுகள் அமைப்புகள் வலைதளம் மூலம் கற்றல் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அவையாவன, வலைதள வழிக்கற்றல், செயல்திட்ட வழிக்கற்றல் போன்றவை.
3. இணையம் மூலம் கற்றல்
இணையவழிக் கற்றலின் மூலம் ஆசிரியர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவுவர். கற்போரும் கற்பிப்போரும் சந்தித்து கலந்துரைப்பது மிக கடினம். தொடர்பு இடைவினையாற்றுவது இணையம் வழி மூலம் சீராக நடைபெறும். இணையவழிக் கற்றலின் முக்கியத்துவங்களாக,
- பல்வகை பிரச்சனைகள் இதன் மூலம் தீர்க்கப்படுகின்றன.
- முதியோர் கல்விக்கு மிகவும் துணைபுரிகின்றன.
- மூன்று வகையான பயன்கள் (1. ஒருங்கிணைந்து, 2. இணைய தளம், 3. வளையதளம் வழிக்கற்றல்)
மாணவர் மையக்கற்றலின் பலங்கள் மற்றும் பலவீனங்கள்
பலங்கள்
- இது ஜனநாயக வழியில் அமைந்த கற்றலாகும். இது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு சவாலை உருவாக்குகின்றது. அர்த்தமுள்ள படைப்பாற்றல் சிந்தனையை தூண்டுகிறது.
- சுதந்திரமாக சிந்தித்து செயல்படும் ஆற்றலை மாணவரிடம் உருவாக்குகிறது.
- மாணவர்களின் பன்முக அறிதிறன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
- மாணவர்களின் அறிதிறன் வளர்ச்சியும், நடைமுறை அறிவும் மேம்படுகிறது.
- கற்பித்தல் இலக்குகளுடன் சக மாணவர்கள் கற்பிக்கின்றனர்.
பலவீனங்கள்
- அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
- இது ஆசிரியரின் பணிப்பளுவை அதிகரிக்கிறது.
- குறைந்த நுண்ணறிவு கொண்;ட மாணவர்களுக்கு இக்கற்பித்தல் உத்தி அதிக பயன்தராது.
- மாணவர்கள் வெளிப்படுத்தும் அனைத்து கருத்துக்களையும் திறனாய்வு செய்திடும் ஆற்றல் ஆசிரியரிடம் இருத்தல் அவசியமாகிறது.
- இம்முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. கீழ் வகுப்புக்கு ஏற்றதல்ல.
மாணவர் மையக் கற்பித்தல் மூலம் கற்போர் தொழில்நுட்ப ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் தாமாகவே பிரச்சனைக்கு தீர்வு காணும் திறமையிலும் புலமை பெறுகின்றனர். இது முதியோர் கல்விக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. இவ்வழிக் கற்பித்தல் மூலம் கற்போர் இணையதளத்தை பயன்படுத்தியும், செயல்திட்ட முறைகளை கையாண்டும் தங்களின் கற்றல் அடைவை அடைந்து சுயமாகவே மதிப்பீடு செய்து நிறை, குறைகள் போன்றவற்றை அறிந்துக் கொண்டு நிறைகளை தக்கவைத்தும், குறைகளை அகற்றியும் அவற்றையும் நிறைகளாக மாற்றி கற்றலில் தேர்ச்சி பெறுகின்றனர்.
Comments
Post a Comment