Kohler's Insight Learning Theory (Tamil)
மாணவர்களின் அறிதிறன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய கருவியாக உட்காட்சிவழிக் கற்றல் முறை அமைகிறது. கற்பவர் பெற்றுள்ள அறிவைப் பயன்படுத்தி அறியப்படாத அறிவின் திறனை பெறுதல் அல்லது உணர்தல் உட்காட்சி வழிக்கற்றல் செயல் ஆகும். மாணவரோ, கற்பவரோ தங்களிடம் உள்ள அறிதிறன், அறிவுத்திறன், அனுபவங்களை பயன்படுத்தி பிரச்சினை, செயலுக்கான தீர்வை கண்டறிவதே உட்காட்சி வழிக்கற்றல் முறை ஆகும்.
கோஹ்லரின் உட்காட்சி வழிக்கற்றல் சோதனை
உட்காட்சி வழிக்கற்றல் முறையில் கோய்லரின் மனிதக்குரங்கு சோதனைகள் மிகவும் முக்கியமானவை. அவ்வாறு அவர் செய்த குரங்கு சோதனைகளில் “சுல்தான்” என்ற மனிதக்குரங்கைக் கொண்டு கோய்லர் மேற்கொண்ட சோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சோதனையின் முதல் நிகழ்வாக சுல்தான் குரங்கு பசியுடன் ஒரு அறையினுள் புஇட்டப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு வெளியே ஒரு குலை வாழைப்பழம் குரங்கின் கண்ணில் தோன்றும் வண்ணம் வைக்கப்பட்டது. குரங்கு புஇட்டி வைக்கப்பட்ட அறையினுள் ஒரு பெரிய கோலும், சிறிய கோலும் வைக்கப்பட்டது. வாழைப்பழத்தை கண்ட குரங்கு அதை பெற முற்பட்டபோது அதனால் அறையை விட்டு சென்று வாழைப்பழத்தை பெறுவதற்கு இயலவில்லை. எனவே சுல்தான் அறையினுள் இருந்த கோலைக் எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் பெரிய கோலைக் கொண்டு பழத்தை எடுக்க முயற்சி செய்தது. பெரியகோலும், சிறிய கோலும் ஒன்றுடன் ஒன்று இருகோலின் முனைகளின் வழியே இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சுல்தான் சிறிய கோலைக் கொண்டு பழத்தை எடுக்க முயன்றது. அந்த முயற்சியிலும் பழத்தினை பெறுவதில் தோல்வி கண்டது. எனவே அறையில் அமர்ந்து இரண்டு கோல்களையும் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது தற்செயலாக சிறிய கோலின் முனையானது பெரிய கோலின் முனையில் உள்ள துளையில் பதிந்தது. சுல்தான் இதனை உற்றுநோக்கியது இதன் விளைவாக இரண்டு கோல்களையும் சரிவரப் பொருத்தியது. கோல்கள் இரண்டும் இணைத்ததால் நீண்ட கோலின் உதவியுடன் அறையின் வெளியில் இருந்த வாழைப்பழத்தை சுல்தான் குரங்கு எடுத்து உண்டது. இந்த சோதனையில் குரங்கு பிரச்சினையை படிப்படியாக புரிந்து கொண்டு, பிரச்சினைக்கான பின்புலத்தையும் தானே முயன்று பல்வேறு தவறுகளுக்குப் பின்பு சரியான துலங்களை வெளிக்கொண்டு வந்தது.
உட்காட்சி வழிக் கற்றல் என்பது கற்பவர் கற்றல் செயல்முறையை தானே பொருளுணர்ந்து கற்றல் செயலில் ஈடுபடவேண்டும் என்ற மூற்றினை வலியுறுத்துகின்றது. கல்வியின் நோக்கமானது கற்பவர் தன்னுடைய சுய அறிவு, ஆற்றல், சிந்தனை மூலம் பிரச்சனை, சிக்கலின் பொருளினை உணர்ந்து கற்பவர் தானே கற்றலுக்கான துலங்களை ஏற்படுத்த உந்து கருவியாக இம்முறை அமைந்தது. பாடப்பொருளுக்கு ஏற்ப கற்றல் நிகழ்வுகளை ஏற்படுத்தி தீர்வைக் காண முயற்சிப்பதை ஊக்குவிக்கின்றது. மாணவர்களின் அறிவுத்திறன் அவர்கள் கற்றலின் போது தானே முயன்று, தவறி கற்பதன் மூலம் கற்பவரின் திறமை வெளிக்கொணரப்படுகிறது. முயற்சியின் முக்கியத்துவத்தினை கற்போரும், மாணவர்களும் புரிந்து கொண்டு கற்றலில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்கின்றது. தொடர்சியாக ஒரு செயலை விடா முயற்சியுடன் கற்பவர் தன்னை ஈடுபடுத்திகொள்ள உட்காட்சி வழிக் கற்றல்முறை பயன்படுகின்றது. பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் சோர்வினை பொருட்படுத்தக்கூடாது என கற்பவருக்கு புரியச் செய்கின்றது. கற்பவர் தன்னுடைய திறன்களை ஒருசேர பயன்டுத்த உதவி புரிகின்றது.
உட்காட்சி வழிக்கற்றலின் பண்புகள்
- கற்பவர் பெற வேண்டிய தீர்வு முடிவுக்கான அடிப்படைக் காரணியாக செயல்படும்.
- நுண்ணறிவுத்திறன் மிகுந்தோர் இக்கற்றலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.
- ஒரு செயலுக்கான தீர்வையோ அல்லது முடிவையோ பெறுவதற்கு பலமுறை முயற்சி செய்வதால் அனுபவ அறிவினை வளர்க்கின்றது.
- தனக்கு அறிந்த பொருளையோ, திறனையோ புதிய அறிவாக மாற்றம் செய்திடவும் அறிவுத்திறனை பயன்படுத்தவும் உதவுகின்றது.
- கற்பவரை தானே முயற்சி செய்து தன்னை முழுமையாக கற்றல் செயலில் ஈடுபடுத்திக் கொள்வதால் கற்பது நிலைத்த தன்மையுடன் கற்பவரிடம் இருக்கும் நிலைமை உருவாக்குகின்றது.
Comments
Post a Comment