Impacts of Media usage by Children and Adolescents (Tamil)
குழந்தைகள், வளரிளம் பருவத்தினரிடையே ஊடக பயன்பாட்டின் தாக்கங்கள்
அறிமுகம்
இன்றைய குழந்தைகள், ஊடக பயன்பாடுகள் அதிகம் நிரம்பிக் காணப்படுகின்ற உலகத்தில் வளர்கின்றனர். சராசரியாக இளம் பருவத்தினர், ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை ஏதேனும் மின்னணு ஊடகத்தில் செலவிடுகின்றனர். இலங்கை இந்திய போன்ற கீழைத்தேய நாடுகளில் குழந்தைகள் இளம் பருவத்தினரின் மீதான ஊடக தாக்கம் சார்ந்த ஆய்வுகள் பெரும்பான்மையாக காணப்படவில்லை என்ற போதிலும், இந்நாட்டுக் குழந்தைகள் தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சியை பார்ப்பத்pல் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, ஊடகங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உடல், மனம், சமூக ரீதியாக எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஊடகத்தின் தாக்கமானது, வன்முறை, கோபம், உடல் பருமன், ஊட்டச் சத்து குறைபாடுகள் உணவு சார்ந்த நோய்கள் போன்ற பாதிப்புகளை உருவாக்குகின்றன.
ஊடகமும் வன்முறையும் (Media and Violence)
- கற்றலில் கோபமான நடத்தை செயல்பாடுகள்.
- வன்முறை சார்ந்த விழிப்புணர்வின்மை.
- வன்முறைக்கு பலியாகி விடுவோம் என்ற பயம்.
பொதுவாக குழந்தைகளுக்கு உண்மைக்கும், கற்பனைக்கும் இடையேயான வேறுபாடுகளை அறியத் தெரிவதில்லை. மேலும் அவர்களிடம், பகுத்தறியும் ஆற்றலுக்கான முதிர்ச்சியின்மையால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காண்பனவற்றை உண்மையானவை என்று நினைத்து தங்களது நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்கின்றனர். சமூக குடும்பங்களால் வன்முறைக்கு உள்ளான இளைஞர்கள் இதன் காரணமாக தங்களையே வன்முறைக்கு ஆளாக்கிக் கொள்கின்றனர்.
குழந்தைகளிடையே காணப்படும் கோபம் வெறித்தனமான நடத்தையை ஊக்குவிப்பதில் ஊடங்களின் பங்கு பெருமளவில் உள்ளது. மேலும், இது போன்று ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற வன்முறைகள், இளம் குழந்தைகளை மனதளவில் வெகுவாக காயப்படுத்துவதோடு பாதிப்படையவும் செய்கிறது.
போதைப் பொருள் பயன்படுத்துதலில் ஊடகத்தின் தாக்கம்
தொலைக் காட்சி விளம்பரங்களில் வரும் மது அருந்துதல் புகைப் பிடித்தல் போன்ற காட்சிகள் இளைஞர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வளரிளம் பருவத்தினரிடையே காணப்படும் புகைப் பிடித்தல் பழக்கத்திற்கும், ஒரு சில வெகுசன ஊடகங்கள் வெளிப்படுத்தும் விளம்பரங்களுக்கும் இடையே வலுவான ஒற்றுமை இருப்பதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஊடகங்கள் நான்கில் ஒரு பங்கு நேரத்தை, இசை படத்தொகுப்புகள், போதைப் பழக்கம் புகையிலை பயன்படுத்துவது போன்ற காட்சிகளை ஒளிபரப்புகின்றன. உதாரணமாக, 50மூ க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரைப்படங்களில் வரும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் காட்சிகளின் மூலமாக தூண்டப்படுகின்றனர் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காட்சிகளின் மூலம் தொடக்க நிலை புகைப் பிடித்தல் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருகின்ற புகைப் பிடித்தல் காட்சிகளுக்கு தடை விதிப்பதில் ஒரு வலுவான நடைமுறை அறிமுகப்படுத்தப்படாத நிலைமையானது தொடர்ச்சியாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பாலியல் முன் தொடக்க பாலியல் ஒழுக்கமின்மை (Media and Risks of early Sexual Initiation and Sexual promiscuity)
வளரிளம் பருவத்தினரிடையே ஆரம்ப பாலியல் தொடக்கத்திற்கு ஊடகங்களின் பாலியல் சார்ந்த வெளிப்பாடுதான் மிக முக்கிய காரணமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக, ஊடகங்களில் பாலியல் ரீதியிலான படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றன. தொலைக் காட்சியில் 50% க்கும் அதிகமாக பாலியல் சார்ந்த காட்சிகளும்;, 66% பாலியல் சார்ந்த முதன்மை காட்சிகளும்; ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இளைஞர்கள் இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதால் தொடர்ச்சியாக பின் தொடர்தல், தொந்தரவு, தேவையற்ற கருத்துக்களை பறிமாறிக் கொள்ளுதல், கண்டிக்கத் தக்க படங்களை இணையத்தில் ஏற்றுதல் போன்ற பிரச்சினைகளை பொதுவாக, சமூக ஊடகங்களின் மூலம் சந்திக்க நேரிடுகிறது.
ஊடகமும் உடல் பருமனும்
இன்றைய குழந்தைகள், அவர்களது ஓய்வு நேரங்களை பெரும்பாலும் உடல் சார்ந்த விளையாட்டுகளில் செலவிடாமல், தொலைக் காட்சி, கணினி கணினி சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவதில் செலவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், உடல் பருமன் அடைவதற்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகள் தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கணினி கைப்பேசியில் விளையாடுவதன் மூலம் அவர்களின் உடல் பருமன் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
21-ம் நூற்றாண்டின் சமூக சூழலில் நிரம்பிக் காணப்படும் வெகுசன ஊடகங்களானது, தினசரி வாழ்வில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது. குழந்தைகள் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் சார்ந்த நடத்தைகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் தீங்கான பாதிப்புகளை வெகுசன ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. எனவே, இதில் பெரும்பான்மையானவர்கள் நிஜத்தையும், கற்பனையையும் பிரித்தறியும் அளவிற்கு முதிரச்;சியடையாதவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விளையாட்டுகள், உடற் பயிற்சிகள், சமூக சேவைகள், கலாச்சார பின்தொடர்தல், குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை ஊடகங்கள் வெகுவாக குறைத்து விட்டன.
குழந்தைகள், வளரிளம் பருவத்தினரிடையே காணப்படும் ஊடக தாக்கத்தினை சரி செய்யும் பொருட்டு கீழ்கண்ட வழிகாட்டி குறிப்புகளை அமெரிக்க குழந்தைகள் கல்வி பயிற்சி நிறுவனம் (AAP-American Academy of Pediatrics) பரிந்துரை செய்துள்ளது.
- படுக்கை அறையில் ஊடக சாதனங்களான, தொலைக்காட்சி, கணிணி இணையத்தை அனுமதிக்காது இருத்தல்.
- சிறந்த ஊடக நிகழ்ச்சிகளை காண்பதற்கு மட்டும் 1-2 மணி நேரம் அனுமதித்தல்.
- இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க செய்தல்.
- உணவு நேரத்தின் போது தொலைக்கட்சியை அணைத்து வைத்தல்.
Comments
Post a Comment