Environmental Risks on Children Development (Tamil)
குழந்தைகளின் வளர்ச்சியில் சுற்றுச் சூழலின் பாதிப்பு
1. உட்புறக் காற்று மாசுபாடு (Indoor Pollution)
உலகில் உள்ள பாதி அளவுக்கும் அதிகமான குடும்பங்கள், தங்களது வீடுகளில் உயிரி பொருட்கள், மரக்கட்டை, சாணம் அல்லது பயிர் எச்சங்களை எரிபொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இவை குறிப்பாக கார்பன்-மோனாக்சைடு போன்ற உட்புற மாசுகளை உருவாக்குகின்றன. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) கூற்றுப்படி, ஒரு பில்லியன் மக்களில் குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் உட்புற காற்று மாசுபாட்டால் தினமும் 100 பேர் இறக்கின்றனர். அதிக நேரம் வீட்டின் உட்புறங்களில் சமையல் செய்வதால் ஏற்படும் விஷவாயு சிறு குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 80% வீடுகளில் உயிரி எரிவாயு பயன்படுத்துத்தப்படுகிறது. இதன் விளைவாக 5,00,000 பெண்கள் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் உட்புற காற்று மாசுபாட்டால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அதிக கடுமையான சுவாச தொற்று (Acute Respiratory Infections) ஏற்படுகின்றது. சுற்றுச் சூழலில் புகையை வெளியேற்றுவது காற்று மாசுபாடு, இரசாயன உறுத்தல்கள் குளிர் வானிலை இவை அனைத்தும் உடல் அழற்சி, சுவாசத் தொற்று, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல் போன்ற பாதிப்பகளை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன. புகைப் பழக்கம் இல்லாத குழந்தைகளை விட புகைப் பிடிக்கும் அம்மாக்களால் 70% சுவாசக் கோளாறு மையக் காது தொற்று ஏற்படுகின்றது. சுவாச நோய் (Respiratory disease) உள்ள குழந்தைகளின் உடல் நிலை புகையிலையை புகைக்கும் சூழலால் மிக மோசமாக பாதிப்படைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அசுத்தமான குடிநீர், துப்புரவு பற்றாகுறை, வியாதிகளின் எல்லையை விரிவாக்குகின்றன. இது வாழ்க்கையை அச்சுறுத்துவதோடு, அதிகமான வயிற்றுப்போக்கு வியாதியானது சுற்றுச் சூழல் காரணிகளால் 80% - 90% உருவாகின்றது. மோசமான துப்புரவு நிலை தேவைக்கு குறைந்த ஆட்கள், சமூக சுகாதாரம் இவை அனைத்தும் வயிற்று போக்கு தொற்றை உருவாக்குகின்றன. இருந்த போதிலும், குறிப்பிட்ட முதலீடுகளால் குடிநீர் விநியோகிப்பதில் வளர்ச்சி காணப்பட்டாலும் உலக மக்கள் தொகையில் 20% மக்கள் துப்புரவின்றியும் 18% மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிக்கின்றனர். மேலும் 40% மக்களுக்கு தூய்மையான சுகாதாரம் கிடைப்பதில்லை. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் சேரிகளில் வாழ்கின்றனர்.
தேசங்கள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பயன்படுத்தபடும் அபாயகரமாய் வளர்ந்து வரும் இரசாயனங்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஒடுக்குவதோடு பாதுகாப்பற்ற நீர் மோசமான சுகாதாரத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தொழில்மயம் நவீனமுறை விவசாயம் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்ற போதிலும், அடிக்கடி வெளிப்படும் பூச்சுக் கொல்லிகளினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பொருத்தமற்ற விகிதாசாரம் மற்ற பிரச்சனைகளோடு சேர்ந்து கொள்ளுகின்றன. மீள்சுழற்ச்சி நடவடிக்கையால் வெளியேறும், பாதரசம் நைட்ரேட்ஸ், ஆர்சீனிக், குடிநீரிலுள்ள புளுரைடு இவை அனைத்திலும்; மறைந்திருக்கும் நச்சுக்கள் காணப்படுகின்றன.
சுற்றுசூழல் பாதுகாப்பு குழந்தைகள் காரீய விஷ தடுப்பு கூட்டமைப்பு (Environmental Defense and the Alliance to End Childhood Lead Poisoning) கூற்றுப்படி காரீயம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கான சுற்றுசூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் முதன்மையாக உள்ளது, சிறிதளவு காரீயம் கூட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இரத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு 10மி.கி. காரீயமும், 6 அலகு நுண்ணறிவு இழப்பிற்கு காரணமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரீயம் கலந்த எரிவாயு 80% - 90% காற்றின் மூலம் பரவக்கூடிய மாசுக்களால் பெருநகரங்கள் பாதிக்கப்படுகின்றன. இது மேலும், அப்பகுதியில் வாழும் மக்களின் இரத்தத்தில் காரீயத்தின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த காரீயமானது மண், காற்று, குடிநீர், உணவு போன்ற பொருட்களில் கலப்பதின் மூலம் இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான சவாலாக விளங்குகிறது.
பூச்சிகொல்லி மருந்துகளில் சில வகைகள் வளரும் நாடுகளால் தடை செய்யப்பட்ட போதிலும், வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் அவற்றை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. விவசாயத்தின் போது பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மனிதர்கள் பலவகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. பூச்சிக் கொல்லிகளை நிலத்தில் தெளிப்பதின் மூலம் குடிநீர் மாசு அடைகிறது. எனவே, பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் எரிச்சல், சரும நோய்கள், சுவாசக்
கோளாறு போன்ற அறிகுறிகளைக் கொண்டஇ நீண்ட கால உடல் நல பிரச்சனைகளான புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான முன்மொழிவுகள்
1997-ம் ஆண்டு, G-8 நாடுகள் முதன் முதலாக குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுற்று சூழல் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை பிரகடனப்படுத்தின. மேலும், இது சார்ந்து சர்வதேச, தேசிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளை பாதிக்கும் சுற்றுச் சூழல், சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறப்பு அமைப்புகளை உருவாக்கியது. கூடுதலாக, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக குழந்தைகளை சுற்று சூழல் அழிவிலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான சுற்று சூழலை ஊக்குவிக்கவும் பல்வேறு வகையான செயல் திட்டங்களை வகுத்தன.
சிகரெட்டுகள், சமைக்கும் அடுப்புகள் காற்றினால் ஏற்படும் மாசுகள் இவற்றிலிருந்து வெளிப்படும் மாசுக்களால் ஏற்படும் சுவாசக் கோளாறு ஜன்னி போன்ற மரணங்களை குறைப்பதற்கான யுத்திகளை உருவாக்க வேண்டும். அரசு உட்புற மாசுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளின் மூலம் கூடுதல் ஆற்றலுடைய பாதுகாப்பை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் அடிக்கடி புகையிலை உபயோகிப்பதை நிறுத்த உலகளாவிய சுகாதார வல்லுனர்கள் சட்டமன்ற தலையீடுகளோடு இணைந்த கல்வித் திட்டங்களை பரிந்துரைக்கின்றனர்.
வயிற்றுப் போக்கால் ஏற்பட்ட மரணங்கள் 1999 - 2000 இடைப்பட்ட காலத்தில் 50% வாய் வழி வறட்சி நீக்கல் சிகிச்சையின் மூலமாக குறைந்துள்ளது. வயிற்றுப் போக்கால் ஏற்படும் வியாதிகள் குறைந்துள்ளது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. உள்நாட்டு சுகாதாரம் துப்புரவு வசதிகள,; சுத்தமான குடிநீரை அதிகரித்தல், ஊட்டச் சத்ததை வளர்த்தல், பால் கொடுக்கும் பழக்கம், இவற்றுடன் வயிற்றுப் போக்குக்கான மருத்துவ சிகிச்சை வயிற்று போக்கு எனும் நோயை முறியடிக்கும். நீர் ஆதாரம் துப்புரவு தேவைகளை வளர்த்தாலே வயிற்றுப் போக்கை 20% - 26% வரை குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நல்ல சுகாதார பழக்கமான, “தினமும் கைகளை சுத்தமாக கழுவுதல்”; மூலம் வயிற்றுப் போக்கு பிரச்சனையை 35% வரை குறைக்க முடியும்.
காரீயம் கலந்த பெட்ரோலை உலக அளவில் 50 நாடுகள் பயன்படுத்துகின்றன. அதில் குறிப்பாக 20க்கும் மேலான வளர்ச்சியில் பின் தங்கியுள்ள நாடுகள் படிப்படியாக, நல்ல பயிற்சியுடன் மாற்றத்திற்கான குடிமைப் பாங்கினை ஊக்குவித்து குழந்தைப் பருவ காரீய விஷத்திற்க்கு முடிவை கொண்டுவரும் பொருட்டு காரீயம் கலந்த பெட்ரோலை குறைக்கவோ அல்லது தடுக்கவோ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் வாழ்கின்ற, விளையாடுகின்ற வேலை செய்கின்ற இடங்களில் இராசயனங்களின் வெளிப்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளை பயமுறுத்தும், குறிப்பாக அபாயகரமான இடங்களில் செய்கின்ற வேலைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்களின் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் சகித்து கொள்ள முடியாத அபாயகரமான சூழலில் வேலை செய்கின்ற குழந்தைகளை அடையாளம் கண்ட கண்காணிப்பு அமைப்புகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக மோசமான நிலையில் குழந்தை தொழிளார்களாக உள்ளனர் என்பதை 120 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே அவற்றைக் களைவதற்கான முனைப்புக்களை நாடுகள் முன்னெடுக்க வேண்டும்.
Comments
Post a Comment