Gagne's Hierarchy of Learning (Tamil)
காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு /எட்டுவகை அறிவுசார் திறன்
அறிமுகம்
எளிய கற்றலிலிருந்து சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்க கற்றுக் கொள்வது வரை கற்றலில் எட்டு வகைகள் உள்ளன. அவர் கூறிய எட்டுவகைக் கற்றல்களையும் அவற்றிற்கான விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
கற்றல் வகைகள்
1. குறியீடுகள் அல்லது அடையாளங்களைக் கற்பது
பாவ்லாவ் குறிப்பிட்ட நிபந்தனைக் கற்றலில் ஒருவன் ஒரு குறியீட்டுக்கு ஒரு துலங்கல் மட்டுமே வெளிப்படுத்துவதைக் கற்கிறான். உதாரணமாக மணியோசையைக் கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரத்தல்.
2. தூண்டல் துலங்கல் இணைப்பைக் கற்றல் (S-R Learning)
தோர்ண்டைக் குறிப்பிட்ட தூண்டல் துலங்கல் தொடர்பு : ஸ்கின்னர் குறிப்பிடும் செயல் தொடர்புள்ள துலங்கல். இது கற்றலுக்கான தன்னார்வ பதிலாகும், இது வாய்மொழி திறன்கள் மற்றும் உடல் இயக்கங்களைப் பெறுவதற்குப் பயன்படும். ஆசிரியர்; ஆழ்ந்த சிந்தனைக்காக கற்பிப்பவரைப் பாராட்டும்போது அல்லது ஆக்கபூர்வமான விமர்சனத்தை வழங்கும்போது இந்த வகை கற்றல் ஏற்படலாம்.
3. உடலியக்க தொடர் இணைப்பு (Chain Learning)
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தூண்டல் துலங்கல் தொடர்புகளை இணைப்பது. குறிப்பாக சிறு சிறு உடல் திறன்களை இணைத்து சிக்கலான செயல்திறனை அடைவது. மிகவும் சிக்கலான உடலியக்கத்; திறன்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை இயற்கையாகவே நிகழ்கின்றன உதாரணமாக சப்பாத்துக் கயிறு கட்டுவது அல்லது சட்டையின் பட்டன் பூட்டுவது.
4. சொற்கள் இணைத்தலைக் கற்றல் (Verbal Chaining)
சொற்களைப் மொத்தமாக இணைத்தலைக் கற்றுக் கொள்வதன் மூலம் மொழிப் பயிற்சியைப் பெறுதல். மொழி திறன் வளர்ச்சியின் முக்கிய செயல்முறையாகும். உதாரணமாக ஒரு மாணவர் செவிலியர் மருத்துவ சொற்களை வரையறுத்து அதை மருத்துவ சூழ்நிலைக்கு பயன்படுத்துதல்.
5. வேற்றுமையறிதல் (Discriminative Learning)
ஒரே மாதிரியாகக் காணப்படும் பல்வேறு தூண்டல்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை கண்டு உணர்ந்து ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான வேறுபட்ட துலங்கல்களை வெளியிடுவது. உதாரணமாக, நோயாளி வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிற்று வலியைப் புகார் செய்கிறார். இந்த வலியை வாயு, உட்புற இரத்தப்போக்கு, கீறல் வலி அல்லது தொற்றுநோயிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை மருத்துவ மாணவர் கற்றுக்கொள்ளல்.
6. பொதுமைக் கருத்துக்களைக் கற்றல் (Concept Learning)
ஒரே வகையைச் சேர்ந்த பல்வேறு தூண்டல்களுக்கு இடையே காணப்படும் பொதுப் பண்பை கண்டறிந்து அப்பொதுப் பண்பைப் பெற்ற அனைத்துத் தூண்டல்களுக்கும் ஒரே மாதிரியான துலங்கலை வெளிப்படுத்துவது. ஒரு கற்றல் முறையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பில் ஒழுங்கமைக்க மற்றும் ஆழ்ந்த கற்றலை வளர்ப்பதற்கு கற்றுக்கொள்ளும் செயல்முறை இது. மாணவரின் நடத்தை ஒவ்வொரு தூண்டுதலின் கருத்துப் பண்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
7. விதியைக் கற்றல் (Rule Learning)
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பொதுமைக் கருத்துக்களை இணைப்பதற்கான வழிமுறைகளைக் கற்றல். மற்றும் புதிய அல்லது பழைய வௌ;வேறு சூழ்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இது பொது விதிகள் அல்லது செயல்முறைகளைக் கற்றுக்கொள்வதற்கான அடிப்படையாகும்.
8. பிரச்சினையைத் தீர்க்கக் கற்றல் (Problem Solving)
பொருத்தமான உத்திகளைப் பயன்படுத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணுதல். ஒரு குறிப்பிட்ட பிரச்சினை மற்றும் இதே போன்ற இயற்கையின் பிற பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்திற்காக ஒரு சிக்கலான விதி அல்லது நடைமுறையைக் கண்டுபிடிக்கும் திறனை வளர்ப்பதை உள்ளடக்கியது
உதாரணமாக
கணிதப்பிரச்சினை அதாவது கணக்கு ஒன்றிற்கான விடையை காண்பதற்கானத் திறனைப் பெறவேண்டுமானால், அக்கணக்குத் தொடர்பான விதிகளையும், சூத்திரங்களையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
எனவே கீழ்வரிசை திறன்களில் தேர்ச்சியடையச் செய்து, உயர்நிலைக் கற்றல் கற்பித்தல் முறையை காக்னேயின் கோட்பாடு வலியுறுத்துகிறது.
இதேபோன்று பொருளுணர்ந்து சரளமாக சரியான ஒலியுடன் படித்தல் என்ற உயர்நிலையை அடைவதற்கான காக்னே படிநிலையை பின்வருமாறு குறிப்பிடலாம்.


 
 
 
 
 
Comments
Post a Comment