Behavioral Changes of Adolescence (Tamil)
கட்டிளமைப் பருவத்தினரின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்
அறிமுகம்
கட்டியமைப் பருவம் மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையான இடத்தை பிடித்துள்ளது. தனியாளின் உடல் மனம் சமூக மதிப்புகளை மற்றவர் பார்வையில் இருந்து மதிப்பு மாற்றங்களாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்பருவ நிகழ்வாக குறுகி விடுகிறது. இது பல்வேறு பரிமாணங்களை தனியாள் வளர்ச்சியின் மூலமாக ஏற்படுத்துகிறது.
1. உடல் முன்னேற்றம்
வளரிளம் பருவ நிகழ்வானது பல்வேறு உடல் மாற்றங்களை உள்ளடக்கியது. இதில் உடல் வளர்ச்சியானது மாற்றமடைகிறது. முதல், இரண்டாம் நிலை பால் வளர்ச்சி ஏற்படுகிறது. உடல் வளர்ச்சியானது உளவியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திடீரென ஏற்பட்ட தனிபட்ட வளர்ச்சியானது இருபால் ஆண் பெண்; உயரமானது அதிகரிக்கும். பெண்கள் ஆண்களை விட உயரமாக காட்சியளிப்பர். பெண்கள் சராசரி உயரத்தினை அடைவர். ஆண், பெண் தனித்தனி பால் பற்றிய தெளிவான அறிவினை பெற்றிருப்பார்.
2. அறிவுசார் முன்னேற்றம்
அறிவுசார் திறன்களான சிந்தித்தல், நினைவு, பொதுமைபடுத்துதல் கருத்துகளையும் சிக்கல்களையும் சிந்தித்து அறியும் திறன் சமூக முன்னேற்றம் ஏற்பட ஆலோசித்தல் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட வழிசெய்யும். நீண்ட கால நினைவுத் திறனும் தெளிவான அறிவின் பழமையான முறையும், தெளிவான அறிவின் வழியே பிரச்சனைக்கு உரிய தீர்வினை கண்டறியும் திறன், பன்னாட்டு பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல்; வளரிளம் பருவத்தில் அதிகரித்து காணப்படும். ஒரு உண்மையை ஆராய்வதற்கு அதை பற்றிய அறிவில் முன்னேற்றம் ஏற்பட பொதுமைபடுத்தி சிறந்த வழியை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வளரும் குழந்தைகளின் சிந்தனையானது சிக்கல் நிறைந்தது. பிரச்சினைகளை வரிசைபடுத்தி மாற்றம், முன்னேற்றம் ஏற்பட சிந்தனை செய்யும்.
3. ஓழுக்க வளர்ச்சி
உறுதியான ஒழுக்க வளர்ச்சியானது முதன் முறையாக வளரிளம் பருவத்தில் ஏற்படுகிறது. இந்த நிலையில் தனி மனித ஆளுமை புதிய சிந்தனை சுய கட்டுபாட்டுடன் பல்வேறு வளரிளம் பருவத்தினர் பிறருடைய தவறுகளிலிருந்து தன்னுடைய தவறுகளை திருத்திகொள்வர். பிறரின் குற்றங்களை பெரிதுபடுத்துவதில்லை.
4. சமூக முன்னேற்றம்
எரிக்சன் என்பவரின் வரையறைப்படி, குழந்தை பருவத்திலிருந்து வளரிளம் பருவத்தில் உடல்;, உள முன்னேற்றமானது தன் கையில் இருந்து மற்றொரு கைக்கு மாற்றுவது போல அமையும் முறையாகும். மேலும் இது தனிச்சிறப்புடன் அமைதியான முறையில் சூழ்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இதன் மூலம் புதிய சிந்தனைகளையும், சமூக உணர்ச்சிகளையும், மதிப்புகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். எரிக்சனின் கூற்றுபடி இது ஒற்றுமையுணர்வுடன் சூழ்நிலையோடு இணைந்து செயல்பட வைக்கிறது. சக குழு சமூக மாற்றம் சமூக குழு புதிய நட்பு வட்டாரம் புதிய மதிப்புகளையும் தலைசிறந்த தலைவனை தேர்தெடுக்கும் ஆற்றலை பெற்றுக் கொள்வர். குழுக்களை வழிநடத்தி செல்ல நட்புணர்வுடன் செயல்படுவர்.
5. மனவெழுச்சி வளர்ச்சி
இந்த கால கட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளை கட்டுப்படுத்தி சமூக மதிப்புகளை பெற வேண்டும். தனித்தன்மை வாய்ந்த பால் வேறுபாடு அல்லாத ஆண், பெண் பாகுபாடு குறைய வேண்டும். உணர்ச்சிகளை மெதுவாகவும், இயல்பாகவும் கட்டுபடுத்த வேண்டும். மன எண்ணங்களை உள்வாங்கி கொண்டு தெளிவான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைளையும் முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வளரிளம் பருவத்தில் உருவாகும் பொதுவான இயல்புகள்
1. பதற்றம்
பெற்றோரின் பாதுகாப்பு, அரவணைப்பு பொருளாதார சார்பு போன்றவை தான் வயது வந்ததும் தனக்கென தனித்த கருத்துகளும் உண்டு என்பதை ஒப்புகொள்ளும் தன்மை பற்றிய குழப்பத்தில் இருந்து விடுபடாமல் பதற்றமாக உணர்தல் ஆகும்.
2. மன உளைச்சல்
வளரிளம் பருவம் நிலையான மன இயல்பை கொண்டிருக்காது. சில சமயம் மிகுந்த மகிழ்ச்சியும் சில சமயம் மிகுந்த மன அழுத்தமும் ஏற்படலாம். இது உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றம் தூண்டுதலால் ஏற்படுகிறது.
3. குழப்பம்
எரிக்சனின் மனவளர்ச்சி கோட்பாட்டின் படி வளரிளம்பருவம் அமைதியற்ற பருவமாகும். காரண காரிய தொடர்பின்றி ஏற்படும் மனவெழுச்சி வளரிளம் பருவத்தினரிடம் சிக்கல்களை தோற்றுவிக்கும், தகுதி, திறமை இவற்றிற்கு மேலான விருப்பங்களை அடைய முடியாத நிலையில் மன முறிவிற்கு ஆளாகின்றனர். வளரிளம் பருவமானது உண்மை நிலையை அறியாத பருவம் ஆகும்.
4. சோம்பேறித்தனம்
வளரிளம் பருவத்தில் தங்களது தனித்தன்மையை நிலைநாட்டும் முயற்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பதும், சமூக மரபுகளை மீறுவதும் சக நண்பர்களை பின்பற்ற முயற்சி செய்தல் சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சி செய்வதாகும்.
5. கோபம், எரிச்சல்
வளரிளம் பருவத்தினர் தங்கள் முடிவுகளை தாங்களே கண்டறிவர். கிண்டல், கேலி, பிறருடன் ஒப்பிட்டு பேசுதல் போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்தும். தோல்வியில் இருந்து வெற்றியை கண்டறிய முயற்சி செய்வர். மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை எனில் அதிக கோபம் ஏற்படுகிறது
பெற்றோராக வளரிளம் பருவத்தினரைப் புரிந்து கொள்ளுதல்
எத்தனை வயதானவர்களாக இருந்தாலும், அவர்கள் பெற்றோருக்கு மட்டும் உதவி புரிதலுக்காக தொடர்ந்து இயங்குவதன் காரணமாக உணர்ச்சிவசப்பட்ட குழந்தைகள் போலவே இருக்கிறார்கள். உண்மையாக வயது வந்தவர்கள் அவர்களது மதிப்பு தனது சொந்த முடிவுகளை தேர்வு செய்வதன் மூலமாக தங்களது சொந்த வாழ்கையும் வாழ்கின்றனர். பெற்றோர்களின் அதிகாரத்திற்கு குழந்தை பருவத்திலிருந்து முதிர்ச்சியடைந்த வளர்ச்சிக்கு குழந்தைகளை கொண்டுவர பெற்றோர்களின் சில முக்கியப் பொறுப்புகள் தேவைப்படுகின்றன.
- வளரிளம் பருவத்திலுள்ள குழந்தைகளிடம் நெருங்கிய உறவுக் கொண்டு அவர்களை புரிந்துக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.
- சக தோழர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முயற்சித்தல், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை அறிதல்.
- சமூக கலாச்சாரத்தை அறிய செய்தல், சமூகக் கொடுமைகளிலிருந்து வளரிளம் பருவத்தினரை பாதுகாத்தல்.
- குடிப்பழக்கம் போதைப்பழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக திகழவேண்டும்.
Comments
Post a Comment