Problems of Adolescents in Learning (Tamil)
கட்டிளமைப் பருவத்தினர் கற்றலில் எதிர்கொள்ளும பிரச்சினைகள்
அறிமுகம்
வளரிளம் பருவம் மனித வாழ்வில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் ஒருவர் குழந்தை நிலையிலிருந்து வளரிளம் பருவத்திற்கு மாற்றமடைகிறார். இந்த பருவத்தில் தான் உடல் வளர்ச்சி அதிகமாகிறது. உளவியலாளர்கள் இந்த பருவத்தை வாழ்கையின் வளர்ச்சி பருவமாக கருதுகிறார்கள். ஏனெனில் இது தனித்தன்மை உடல் மொழி திறன்கள், ஆர்வம், நுண்ணறிவு, அறிவுத்திறன் ஆளுமைதிறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
இப்பருவமானது மாணவர்களிடையே பாரிய மாற்றங்களை உருவாக்குகின்ற பருவமாகக் காணப்படுவதோடு பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் காணப்படுகின்றது. இப்பருவத்தை ஆசிரியர்கள், பெற்றோர் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நோக்குவோம்.
1. வளரிளம் பருவத்தினரின் கடமை தவறுதல் (Delinquency in adolescence)
இப்பருவத்தினர் ஆர்ப்பாட்டம் கொண்டு செயல்படுவதோடு பள்ளி விதிகள் ஆகியவைகளின் கட்டுபாடுகளை பின்பற்றுவதில்லை. இவர்கள் ஆபத்தான சைகளை வெளிப்படுத்துவர். இவர்களின் இத்தகைய செயல்களை பெற்றோரிடமும், ஆசிரியர் கல்வி நிர்வாகத்தினரிடமும் வெளிப்படுத்துவர்.
இப்பருவத்தினர் அதிக பகல்கனவு காண்பர். குறிப்பாக சராசரி அறிவுத்திறனுடையவர்களின் வளரிளம் பருவத்தினரின் பகல்கனவு புதைக்கப்படுகிறது. அவர்களின் பல்வேறுவித பகல்கனவுகள், விருப்பத்திற்கேற்ப அமைகிறது. கனவுகளில் அழகிற்காக அதிக செலவு செய்வது இப்பருவத்தினரே.
கல்வி என்பது சிறப்பான வாழ்க்கைக்கான ஒரு கருவியாகும். இன்றைய பொதுவான பிரச்சினை என்பது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கொண்டுள்ள அளவற்ற எதிர்பார்ப்புகளை குழந்தைகளால் நிறைவு செய்ய முடிவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் வளரிளம் பருவத்தினர் தங்களுக்குள் புதைத்து கிடக்கும் திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பதே ஆகும். வளரிளம் பருவத்தினரிடம் அறிவார்ந்த பின்னடைவு கீழ்கண்ட விதங்களில் காணப்படுகிறது.
- கொடுக்கப்பட்ட செயல்பாடுகளை தங்களது திறமைக்கு ஏற்ப செய்யாதிருத்தல்.
- குறிப்பிட்ட பாடத்திட்டத்தை பின்பற்ற சிரமப்படுவர்.
- பிற செயல்பாட்டின் குறுக்கீட்டால் படிப்பில் நாட்டம் இன்றி இருப்பார்.
ஆங்கிலத்தில் “Ragging” என்ற சொல் கேலி, கிண்டல், நகைச்சுவை என தமிழில் பொருள்படும். இச்செயல்பாடு கல்லூரி காலங்களில் வளரிளம் பருவத்தினரால் நிகழ்த்தப்படுவது ஆகும். கல்லூரியில் பயிலும் பழைய மாணவர்கள் புதிதாக வரும் மாணவர்களிடம் மேற்கொள்ளும் கேலி, கிண்டல்களே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது மாணவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க உதவுகிறது. மாணவர்களின் நல்லுறவு என்பது கல்லூரி நிர்வாகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். இருப்பினும் இத்தகைய கேலி-கிண்டல்கள் நன்மை பயப்பதைவிட தீமை பயப்பதாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நன்மையை மட்டுமே தருவதாக இருந்த இச்செயல்பாடுகள் தற்போது மாணவர்களுக்கு தீமை பயக்கும் கொடூரச் செயலாக மாறிவருகிறது. சில நேரங்களில் இவை மாணவர்களிடம் பாலியல் தொல்லை, தற்கொலை போன்ற வெறிச்செயல்களை தூண்டுவதாக அமைந்துவிடுகிறது.
5. தேர்வுப்பயம் (Exam Anxiety)
தேர்வு பயம் என்பது இயற்கையாக, உலக மக்கள் அனைவரிடமும் காணப்படக்கூடிய ஒன்று ஆகும். தேர்வு பயம் மாணவர்களை விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பிற செயல்பாடுகளில் ஈடுப்படுவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த தூண்டுகிறது. இதற்காகவே ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களை தேர்வைக் காட்டி பயமுறுத்துகின்றனர். ஆனால், இத்தகைய பயமானது மாணவர்களின் கல்வி அடைவை பாதிக்கிறது. அதாவது பயத்தின் காரணமாக காய்ச்சல், வாந்தி, தலைவலி, மயக்கம், உதறல், சுவாச கோளாறு போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக மாணவர்கள் தாங்கள் படித்தவற்றை நினைவில் கொள்ள இயலாது தேர்வு எழுத முடியாமல் போகிறது.
6. தற்பெருமை தாழ்வு மனப்பான்மை (Self-pride and Inferiority Complex)
தற்பெருமை என்பது தன்னம்பிக்கையை தோற்றுவித்து, பிரச்சனைகளை எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்க்க உதவுகிறது. இதன் மூலம் ஒப்படைப்புகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆனால், உலகில் பெரும்பான்மையானோரிடம் சுய பெருமை என்பது நிலைபெற்றுள்ளது. ஒருவரின் தாழ்வு மனப்பான்மையானது அவரது முன்னேத்திற்கும் வெற்றிக்கும் தடையாக அமைந்துவிடுகிறது.
7.வளரிளம் பருவத்தினரின் அடையாள நெருக்கடி (Teenage identity crisis)
வளரிளம் பருவம்; என்பது பிரச்சனைகள் நிறைந்த பருவமாக காணப்படுகிறது. வளரிளம் பருவத்தினர் எப்போதும் தன்னைப்பற்றிய குழப்பத்திலேயே இருப்பார். தங்களை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என விரும்புவர். இதனாலேயே தனது பெற்றோர் மூத்தோர் கட்டுப்பாடுகளில் இருந்து விலக முயற்ச்சிப்பர். தன் வயதை ஒத்த, ஒப்பார் குழுவிடம் அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பர்.
8. வளரிளம் பருவத்தினரின் தற்கொலைகள் ;; (Adolescent suicide)
வளரிளம் பருவத்தினரின் தற்கொலைகள் பல நாடுகளில் அதிகளவு காணப்படுகிறது.. பள்ளி தேர்வில் தோல்வி அடைதல்; பெற்றோர் குழப்பத்தினால் தனிமைப்படுத்தப்படுவது காதல் தோல்வி, தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் தன்னம்பிக்கை குறைவு பிறர் முன்னிலையில் கடினமான வார்த்தைகளை பயன்படுத்துதல் கண்டித்தல் தவறாக நடத்துதல் ஆகியவை வளரிளம் பருவத்தினரிடம் தற்கொலை அதிகரிக்க காரணமாகின்றன.
வளரிளம் பருவத்தினரிடம் விரைவான உடல் வளர்ச்சி ஏற்பட்டு தங்களைப் பற்றிய மன குழப்பத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் உடலில் தோன்றும் மாற்றம் அச்சத்தையும், கவலையும் அளிக்கிறது. சுயமாக செயல்படவும் சமூக அங்கீகாரம் பெறவும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பர்.
10. போதைப்பொருள் சார்ந்த பிரச்சனைகள் (Substance related problem)
தங்களின் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் செயல்படுவோர் அதிகளவு போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த பருவத்தில் முக்கியமான பிரச்சனையான போதைக்கு அடிமையாதல், புகை பிடித்தல், குடிப்பழக்கம் அதிகரிக்கிறது.
மாணவர்கள் கட்டிளமைப்பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆசிரியர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளும் மாத்திரத்தில் தான் பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களை வழிப்படுத்த முடிவதோடு நாட்டிற்குத் பொருத்தமான குடிமகனை உருவாக்க முடியும்.
Comments
Post a Comment