Role of Play in Child Development (Tamil)

 குழந்தை வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு 

அறிமுகம்

விளையாட்டின் மூலமாக குழந்தைகள் நிறைய நன்மைகளைப் பெறுகின்றனர். இதன் மூலம் சிந்தனை திறன், நினைவுகூரும் திறன் பிரச்சனையை தீர்க்கும் திறன்களைப் பெறுகின்றனர். குழந்தைகள் உலகம் பற்றிய தங்களது நம்பிக்கைகளை விளையாட்டுகள் மூலம் சோதித்து பார்க்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. விளையாட்டு மூலம் சீக்கலை தீர்க்கும் திறன் வளர்கிறது. மேலும் விளையாட்டு பல்வகை கற்றலைத் தூண்டுகிறது.

பிறர் விளையாடும் போது குழந்தைகள் பார்ப்;பதால் அவர்களின் சொல்வளம் பெருகுகிறது. குழந்தைகள் அவர்களின் குடும்ப அனுபவத்தை பாவனை விளையாட்டு மூலம் வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் குழந்தைகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் தனித்தனியான பங்களிப்பை தெரிந்து கொள்கின்றனர். இது குழந்தைகள் உலகத்தில் உள்ள வௌ;வேறு பொருட்களின் தன்மையினை அறிந்து கொள்ள உதவுகிறது. 

உலகத்தை புரிந்து கொள்ள விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கிறது. மூளை வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. விளையாட்டு குழந்தைகளின் திறனை வளர்ப்பதோடு மன உறுதியுடன் செயல்படும் திறனையும் அளிக்கிறது. 

பள்ளி வாழ்க்கையில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளிச் சூழலில் குழந்தைகள் தங்களை நிலைநிறுத்தி கொள்ள இது உதவுகிறது. தோல்வி பயம் இல்லாமல் முன்னேற விளையாட்டு உதவுகிறது. பள்ளியில் விளையாடுவதால் சமூகத் திறன் வளர்கிறது. விளையாட்டு, சுயகற்றல் பிறருடன் பழகுதல் சமூகத்தில் தனிமனித பங்கேற்பை அதிகப்படுத்துகிறது. விளையாட்டு குழந்தைகள் தங்களின் சுற்றுச்சூழலை திறம்பட கையாள உதவுகிறது. 

விளையாட்டின் மதிப்புகள் (Values of play)

    1. உடல் சார்ந்த மதிப்பு. 
    2. அறிவு சார்ந்த மதிப்பு. 
    3. ஒழுக்கம் சார்ந்த மதிப்பு. 
    4. கற்பனை சார்ந்த மதிப்பு. 
    5. சிகிச்சை சார்ந்த மதிப்பு. 
    6. சமூகமயமாக்கல். 


உடல் சார்ந்த மதிப்பு (Physical Value)

விளையாட்டு மூலம் தசை, உணர்திறன் வளர்ச்சியடைகிறது. குழந்தை, இளம் குழந்தைகளின் உணர்திறன் புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் அனுபவங்களின் மூலம் வளர்க்கிறது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல். ஆகிய புலன்கள் விருத்தியடைவதோடு பள்ளிக் குழந்தைகள் ஒடுதல், குதித்தல், பந்தய விளையாட்டுகள் மூலம் உடல்திறனை வளர்த்து கொள்கின்றனர்.

அறிவு சார்ந்த மதிப்பு (Knowledge Value

விளையாட்டு மூலம் குழந்தைகள் உருவம், வடிவம், நிறம், அமைப்பு, எண்கள் பொருட்களின் பெயர்களையும் அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கற்றுக் கொள்கின்றனர். விளையாட்டு மூலம் உறவுமுறைகள் பற்றிய அறிவு, சிந்தனை திறன், சிக்கலைக் தீர்க்கும் திறன், வளர்கிறது. குழந்தைகள் இதன் மூலம் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றனர்.

ஒழுக்கம் சார்ந்த மதிப்பு (Discipline Value)

குழந்தைகள் விளையாட்டு மூலம் உண்மை, நேர்மை, திறன் இரக்ககுணம், போன்ற மதிப்புகளை பெறுகின்றனர். தனது நடத்தைக்கு தானே பொறுப்பேற்று குழுவின் மதிப்பை பெறுக்கின்றனர்.

கற்பனை சார்ந்த மதிப்பு (Imaginative Value)

குழந்தைகள் தனித்து விளையாடும் போது அதிக கற்பனை திறனைப் பெறுகின்றனர். களிமண், காகிதம், கலர் பென்சில்களைப் பயன்படுத்தி விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டு மூலம் வெளியுலகத்திற்கு புதிய கண்டுபிடிப்புகளைத் தருகின்றனர்.

சிகிச்சை மதிப்பு (Therapeutic Value)

விளையாட்டு மூலம் மனஅழுத்தம் குறைகிறது. குழந்தைகள் தங்களின் உணர்ச்சிகள் பிரச்சினைகளை விளையாட்டின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை வைத்து அவர்களின் தேவைகள், உணர்வுகள் ஆகியவற்றை கண்டறிகின்றனர். குழந்தைகளின் மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தவும் முறையான பாதுகாப்பான விளையாட்டை மேற்கொள்ளவும் சரியான வழி நடத்துனர் தேவை.

சமூகமயமாக்கல் (Socialization)

விளையாட்டு மூலம் குழந்தைகளின் சமூக, மனவெழுச்சி வளர்ச்சியடைகிறது. குழந்தைகள் பெற்றோர்கள், பெரியவர்கள் ஒத்த பருவத்தினருடன் விளையாடும் போது சமூக உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

முடிவுரை 

குழந்தை வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. விளையாட்டு குழந்தைப் பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. விளையாட்டின் மூலம் சிந்தித்தல், பிரச்சனையை தீர்த்தல் போன்ற திறன்களை பெறுகின்றனர். குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களுக்கிடையே உள்ள உறவு வலுப்பெறுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தை வளர்ச்சி மேம்பாடு அடைகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் பார்வையில் இந்த உலகத்தை பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.



Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)