Self Learning (Tamil)
சுயகற்றல்
அறிமுகம்
ஆசிரியர் மற்றும் வகுப்பறை கற்றல் இல்லாமல் மாணவர்கள் வீட்டில் தனியாகவே பாடத்தை கற்பது.
ஆசிரியரின் துணையின்றி மாணவர்கள் தானாகவே கற்றுக் கொள்வது.
சுயமான கற்றல் என்பது ஒரு பாடம் அல்லது பாடங்களைப் பற்றி முறையாக கற்றல் இல்லாமல் தானாகவே கற்பதாகும்.
சுயகற்றல் என்பது ஒரு நபர் பாடத்தை சிறிதும் ஆசிரியரின் துணையின்றி கற்பதாகும்.
சுயகற்றலின் முக்கியத்துவம் (Importance of Self - Learning)
சுயகற்றலின் முக்கியத்துவமானது
- எப்படி கற்றுக் கொள்வது என்பதை புரிந்து கொள்ளச் செய்கிறது.
- கற்றலானது எந்தவித வெளிப்புற கருவிகளின்றி நடப்பதாகும்.
- எதிர்காலத்திற்கு தயார் செய்தல்.
ஒரு சுயக்கற்றலில் ஈடுபடும் ஒருவனுடைய நோக்கமானது எல்லாவற்றையும் சிறிதளவாவது தெரிந்து கொள்வது அல்லது அவன் ஒரு பாடத்தில் புலமை பெற கடினமாக உழைப்பதாகும். எவ்வாறாக இருந்தாலும் சுயக்கற்றலானது கற்போருடைய கட்டுப்பாட்டில் நடைபெறவேண்டும். சரியான பாதையில் முயற்சிசெய்து திட்டமிடப்பட்ட சுயகற்றலானது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
சுயகற்றலின் நன்மைகள் (Benefits of Self - Learning)
மாணவர்களை சுயமாக சிந்திப்பவர்களாக உருவாக்குகிறது.
மாணவர்கள் தங்களுடைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தெரிந்து கொள்கிறார்கள்.
சுயகற்றலின் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக தடைகளின்றி கற்கிறார்கள்.
நம்பகத்தன்மையை பெறுகிறார்கள்.
உள்ளார்ந்த மதிப்புகள், நல்உணர்வுகளை வளர்க்க சுயகற்றல் உதவுகிறது.
சுயகற்றல் மாணவர்கள் நல்ல தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு தேர்வை நன்றாக எழுதுவதற்கு உதவுகின்றது.
பெற்றோர்களின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்வதை விட சுயகற்றலின் மூலம் அதிகமாக மனதில் பதியவைக்க முடிகிறது.
தங்களின் கல்வியில் இடைவெளியிருந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் எதையாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தாங்களாகவே கற்றுக்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்களாகவே தைரியத்துடன் மூழ்கி கற்றுக்கொள்வர்.
ஊக்கம் மற்றும் திட்டமிடுதலுக்கான தேவை வரும்போது மாணவர்கள் தங்களைத் தாங்கள் கல்லூரி வகுப்பிற்கு தயார் செய்வதாகும்.
வேலை நெறிமுறைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது.
மாணவர்களை தங்கள் பாடங்களில் ஆழமாக கற்க அனுமதிக்கவும் அவற்றை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
கற்போரை குறைந்த அளவே கற்க ஊக்குவிக்கிறது
சுயகற்றலானது குடும்பத்தை நிறுவனமாக கருதாமல் குடும்பத்தை குடும்பமாகவே இயங்க அனுமதிக்கிறது.
ஒருவனுடைய ஆற்றலை அடையாமல் போவதற்கான அனைத்து அனுமதிகளையும் முடியறிக்கிறது.
ஒரு மாணவன் கற்காவிட்டால் அது மற்றவர்களின் பிழையாகாது. கற்பிப்பதைவிட சுயகற்றலே அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது.
சுயகற்றல் என்பது ஆசிரியரின் கையேடு மற்றும் பாடப்புத்தகத்தை விட தாமாகவே மிக உயரிய நூல்களை படிப்பதாகும்.
அதிகப்படியான தகவல்கள் விரல்நுனியில் கிடைப்பதால், இப்போது சுயகற்றல் என்பது எதிர்கால அலைகளாக இருக்கிறது.
மழலைகள் மற்றும் குழந்தைகள் தங்கள் தாயிடம் அதிக கவனத்தை பெறுவதே சுயகற்றலாகும்.
Comments
Post a Comment