Posts

Developing Creativity of Students (Tamil)

Image
  படைப்பாற்றல் சிந்தனையை வளர்த்தல் அறிமுகம் படைப்பாற்றல் என்பது பள்ளி மற்றும் வாழ்வில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டிய முக்கியமான திறமையாகும். இது சிக்கலைத் தீர்க்க உதவுகிறது, வாழ்க்கையில் எங்கள் திருப்தியை ஊக்குவிக்கிறது, மேலும் நமக்கு ஒரு நோக்க உணர்வை அளிக்கிறது. ஆக்கப்பூர்வமாக இருப்பது நமக்கு ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஆக்கத்திறன் (Creativity) என்பது புதியனவற்றை படைக்கும் ஆகும். தொழில்நுட்ப சமுதாய வளர்ச்சிக்கு புதிய கருத்துகளும், கண்டுபிடிப்புகளும் தேவைப்படுகின்றன. இதற்கு அடிப்படை ஆக்கச் சிந்தனையே. ஆக்கச் சிந்தனையின் விளைவு புதுமை ( Novelty ) உடையதாக இருக்கும். பயனுள்ள முறையில் ஆக்கச் சிந்தனை அமைவதற்கு உதவக் கூடிய பல்வேறு பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பை நாம் ஆக்கத்திறன் எனக் குறிப்பிடலாம். பழைய எண்ணங்களை புது வடிவத்தில் அமைப்புறச் செய்தலும், பழைய எண்ணங்களிடையே புதுத்தொடர்புகளைக் காணுதலும், ஆக்கச் சிந்தனையினனால் உருவாதலாகும். ஸி.ஆர். ரோஜர்ஸ் ( C.R. Rogers ) வரையறைப்படி, ஆக்கச் சிந்தனை என்பது ஒருவரது தனித்தன்மைக்கும், அவரது வாழ்வில...

Motivations for Students in Teaching (Tamil)

Image
  கற்பித்தலில் மாணவர்களிற்கான ஊக்கங்கள் ஊக்கம் இலக்கு நோக்கிய நடத்தையை தொடங்கி வைத்தலிலும், தொடங்கிய நடத்தை தொடர்ந்து இயங்குவதற்கும், இறுதியில், இந்நடத்தை முடிவு பெறுவதற்கும் காரணமாக இருப்பது ஊக்கமாகும். இவ்வாறு ஊக்கம் என்ற செயல் அதாவது ஊக்குவித்தல் நடைபெற தூண்டும் காரணிகளை ஊக்கிகள்; ( Motives ) என்று குறிப்பிடுகிறோம். திட்டவட்டமான சில செயல்களில் ஓர் உயிரியின் நடத்தை அமைய ஊக்கிகள் அதனைத் தூண்டுகின்றன. இவ்வூக்கிகள் உயிரியின் உள்ளிருந்து செயல்பட்டு அதன் நடத்தையைக் கட்டுப்படுத்தும். இவ்வூக்கிகள் உடல் சார்ந்தவையாகவோ,உள்ளத்தைச் சார்ந்தவையாகவோ இருக்கலாம். ஊக்கத்தின் பணிகள் எந்த ஒரு செயலிலும் ஊக்கம் அதிகரித்துக் காணப்பட்டால், அதைச் செய்வதில் அதிக ஆர்வமும், அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஏதோ ஒரு வகை ஊக்கி எல்லா கற்றல் நிலைமைகளிலும் இருத்தல் இன்றியமையாதது என்கிறார் கெல்லி (Kelly) என்பவர். பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்களது கற்பித்தல் முயற்சி பலதடவை எதிர்பார்க்கப்படும் பயனை அளிக்காமல் வீணாவதற்கு மாணாக்கர்களிடம் போதிய ஊக்கம் இன்மையே காரணமாகும். இதன் விளைவாக மாணவர்க...

Sigmund Freud’s Personality Theory (Tamil)

Image
  சிக்மன் புறொய்ட்டின் ஆளுமைக் கொள்கை ஆளுமை என்பதன் பொருள் Personality  எனும் சொல், லத்தீன் வார்த்தையான  persona  என்பதிலிருந்து தோன்றுகிறது. இதற்கு நாடகத்தில் போடப்படும் வேடம் அல்லது முகமூடி என்று பொருள். ஆளுமை என்பது ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம் எனக் கருதப்பட்டது. ஆனால் இன்று, அதன் பொருள் வேறுபடுகின்றது. குறிப்பிட்ட பண்பில் சிறந்து விளங்குபவன் சிறந்த ஆளுமையுடையோன் எனப்படுகிறான். பலர் இவ்வார்த்தை, உடல் கவர்ச்சியை, உருவத்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே, ஆளுமை என்பது மிகவும் பரந்த பொருளுடையதாகும். ஒருவர் அவருடைய நிலையில் சமுதாயத்தின் தூண்டலுக்கு வெளிப்படுத்தும் தனிப்பட்ட மதிப்பே ஆளுமை எனப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க பண்புகளுண்டு. இப்பண்புகளின் காரணமாக வௌ;வேறு சூழலிலும் குறிப்பிட்ட நடத்தை வெளிப்படுகின்றது. இந்நடத்தைக் கோலங்கள் ஒருவனின் ஆளுமை தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒருவனின் மனவெழுச்சி, திறன், நுண்ணறிவு,அனுபவம், புலன்காட்சி, இயல்பூக்கம், நினைவாற்றல், படைப்பாற்றல், எண்ணங்கள், பழக்கங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பே...

Howard Gardner's Multiple Intelligences (Tamil)

Image
  ஹவார்ட் கார்ட்னரின் பன்முக நுண்மதிக்கோட்பாடு அறிமுகம் நுண்மதியின் வரைவிலக்கணங்கள்  சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதைச் சரியான முறையில் பயன்படுத்துதல். நுண்ணறிவு என்பது சரியான வழியில், சரியான நேரத்தில் சரியான அர்த்தத்தை அறியும் ஆற்றல் என்பதாகும். வெஸ்லர் ( Wechsler ) – “நுண்ணறிவு என்பது ஒருவன் நோக்கத்தோடு செயல்படல், பகுத்தறிவோடு சிந்தித்தல், சூழ்நிலையை திறமையாக சமாளித்தல் போன்றவைகள் சேர்ந்த ஒரு கூட்டு செயலாற்றல்” ஆகும். ஸ்டொடார்ட் ( Stoddard ) - “நுண்ணறிவு என்பது ஒருவன் கடினமான, சிக்கலான, புதுமையான,பயனுள்ள உயர்வான செயல்களைத் தொடங்கி குறுக்கிடுகளுக்கிடையேயும் தொடர்ந்து நிகழ்த்த உதவும் ஆற்றல்” நுண்ணறிவின் இலக்கணம் ( Theories of Intelligence ) பற்றிப் பல கருத்துகள் உளவியல் உலகில் நிலவுவது போலவே, நுண்ணறிவின் அமைப்பு பற்றியும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிக முக்கிய கோட்பாடாக பன்முக நுண்மதி குறித்த கோட்பாடு 1983 ம் ஆண்டு ர்ழறயசன நுயசட புயசனநெச என்ற அமெரிக்க உளவிருத்தி உளவியலாளரால் தனது  Frames of Mind: The Theory of Multiple Intelligences   என்ற நூலின் ஊடா...

Teachers in Finland Educational System (Tamil)

Image
  பின்லாந்துக் கல்வி முறைமையில் ஆசிரியர்கள் அறிமுகம் வடக்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்லாந்து இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி. வல்லரசாகப் பாராட்டப்படுகின்றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்லாந்தில் இருப்பதாகவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்கா கூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது. உலக கல்வி முறைத் தரத்தில் 2017 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி பின்லாந்து 3 ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் சுவிட்சர்லாந்துக்கும் இரண்டாம் இடம் சிங்கப்பூருக்கும் கிடைத்துள்ளது. 2006 இல் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் பின்லாந்து முதலிடம் பெற்றது. உலகிலேயே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முன்னணியில் இருக்கின்றது. 100 வீதம் குழந்தைகள் பாடசாலை செல்லும் நாடாக பின்லாந்து விளங்குகின்றது. பல்கலைக்கழகப் பட்டத்தை ஏறத்தாழ எல்லோரும் பெறும் நாடாகவும் அதுவே விளங்குகின்றது. பின்லாந்து மக்கள்...

Education for Poverty Reduction (Tamil)

Image
  வறுமையை ஒழிப்பதற்கான கல்வி அறிமுகம் வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன.  வறுமையை முற்றிலும் வறுமை( absolute poverty ) என்றும், ஒப்பீட்டு வறுமை ( relative poverty ) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா இலங்கை போன்ற ந...

Education for Sustainable Development (Tamil)

Image
 பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி   அறிமுகம் வறுமையை ஒழிக்கவும் எமது பூமியை பாதுகாக்கவும் அனைவருக்கும் சுபீட்சத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2015 செப்டெம்பர் 15 ஆம் திகதி பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளும் அடுத்த 15 வருட காலத்துக்குள் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் இது ஏற்புடையதாக இருப்பதாகும். (புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு உரித்தானவையாகும்) அவ்வாறே அபிவிருத்திக்காக அதிக துறைகளையும் அதிக இலக்குகளையும் கொண்டிருப்பது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அபிவிருத்தியாகும். இதுவரை கலந்துரையாடப்படாத பெண்களை வலுவூட்டல், சமாதானமும் பாதுகாப்பும் மற்றும் நல்லாட்சி போன்ற எண்ணக்கருக்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். எதிர்கால உலகின் அபிவிருத்தி திட்டங்கள் இப்புதிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் இந்த இலக்குகளை தமது அபிவிருத்தி கொள்கைத் தி...

Environmental Pollution and Sustainable Development (Tamil)

Image
 சூழல் மாசடைதலும் பேண்தகு அபிவிருத்தியும் அறிமுகம் இயந்திரமயமான இந்த உலகில் தொழிற்சாலைகளினதும், கைத்தொழில் பேட்டைகளினதும் அதிகரிப்பினால் சுற்றுச்சூழலனானது பல்வேறு வகையான பாதிப்புகளிற்கு உள்ளாகின்றது. சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை வளங்களானவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன. எனவே அரிதான அவ்வளங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி நம் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். அதிகரித்து வரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாரியளவிலான சுற்றுச் சூழல் வளங்களின் உபயோகத்தினையும், அதேநேரம் இதனால் சூழலுக்குள் விடப்படும் பெருமளவிலான கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்தையும் கவனத்தில் எடுக்கும்போது சுற்றுச்சூழலின் தரத்தை பேணிப் பாதுகாப்பதில் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான தேவை முக்கியத்துவமடைகின்றது. அந்தவகையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எனும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நிலைத்து நிற்க...

Gagne's Hierarchy of Learning (Tamil)

Image
  காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு /எட்டுவகை அறிவுசார் திறன்  அறிமுகம் எளிய கற்றலிலிருந்து சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்க கற்றுக் கொள்வது வரை கற்றலில் எட்டு வகைகள் உள்ளன. அவர் கூறிய எட்டுவகைக் கற்றல்களையும் அவற்றிற்கான விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.  கற்றல் வகைகள்  1. குறியீடுகள் அல்லது அடையாளங்களைக் கற்பது பாவ்லாவ் குறிப்பிட்ட நிபந்தனைக் கற்றலில் ஒருவன் ஒரு குறியீட்டுக்கு ஒரு துலங்கல் மட்டுமே வெளிப்படுத்துவதைக் கற்கிறான். உதாரணமாக மணியோசையைக் கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரத்தல். 2. தூண்டல் துலங்கல் இணைப்பைக் கற்றல் ( S-R Learning ) தோர்ண்டைக் குறிப்பிட்ட தூண்டல் துலங்கல் தொடர்பு : ஸ்கின்னர் குறிப்பிடும் செயல் தொடர்புள்ள துலங்கல். இது கற்றலுக்கான தன்னார்வ பதிலாகும், இது வாய்மொழி திறன்கள் மற்றும் உடல் இயக்கங்களைப் பெறுவதற்குப் பயன்படும். ஆசிரியர்; ஆழ்ந்த சிந்தனைக்காக கற்பிப்பவரைப் பாராட்டும்போது அல்லது ஆக்கபூர்வமான விமர்சனத்தை வழங்கும்போது இந்த வகை கற்றல் ஏற்படலாம். 3. உடலியக்க தொடர் இணைப்பு ( Chain Learning ) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தூண...

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)