Howard Gardner's Multiple Intelligences (Tamil)

 ஹவார்ட் கார்ட்னரின் பன்முக நுண்மதிக்கோட்பாடு

அறிமுகம்

நுண்மதியின் வரைவிலக்கணங்கள் 

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதைச் சரியான முறையில் பயன்படுத்துதல். நுண்ணறிவு என்பது சரியான வழியில், சரியான நேரத்தில் சரியான அர்த்தத்தை அறியும் ஆற்றல் என்பதாகும்.

வெஸ்லர் (Wechsler) – “நுண்ணறிவு என்பது ஒருவன் நோக்கத்தோடு செயல்படல், பகுத்தறிவோடு சிந்தித்தல், சூழ்நிலையை திறமையாக சமாளித்தல் போன்றவைகள் சேர்ந்த ஒரு கூட்டு செயலாற்றல்” ஆகும்.

ஸ்டொடார்ட் (Stoddard) - “நுண்ணறிவு என்பது ஒருவன் கடினமான, சிக்கலான, புதுமையான,பயனுள்ள உயர்வான செயல்களைத் தொடங்கி குறுக்கிடுகளுக்கிடையேயும் தொடர்ந்து நிகழ்த்த உதவும் ஆற்றல்”

நுண்ணறிவின் இலக்கணம் (Theories of Intelligence) பற்றிப் பல கருத்துகள் உளவியல் உலகில் நிலவுவது போலவே, நுண்ணறிவின் அமைப்பு பற்றியும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிக முக்கிய கோட்பாடாக பன்முக நுண்மதி குறித்த கோட்பாடு 1983 ம் ஆண்டு ர்ழறயசன நுயசட புயசனநெச என்ற அமெரிக்க உளவிருத்தி உளவியலாளரால் தனது Frames of Mind: The Theory of Multiple Intelligences  என்ற நூலின் ஊடாக முன்வைக்கப்பட்டது.

கார்ட்னர் மனித ஆற்றலின் துறைகளை அல்லது அவனது பன்முக நுண்மதிகளை அடையாளம் காண்பதற்கு எட்டு வகையான நிபந்தனைகளை கருத்திற் கொள்கிறார். இந்த நிபந்தனைகள் உயிரியல், உளவியல், வரலாறு, கலாச்சாரம் என பல்வேறு பகுதிகளை கவனத்தில் கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இந்த நிபந்தனைகளிற்குட்பட்டே அவர் மனித ஆற்றல்களை அல்லது நுண்மதிகளை வகைப்படுத்தியுள்ளார். அவையாவன,

  • மொழி சார்ந்த நுண்மதி (Verbal-linguistic intelligence)
  • இசை சார்ந்த நுண்மதி(Musical intelligences)
  • தர்க்க-கணித நுண்மதி (Logical-Mathematical intelligence)
  • கட்புலன் சார் நுண்மதி (Spatial-Visual intelligence)
  • உடல்சார் நுண்மதி (Bodily-Kinesthetic intelligence)
  • ஆளிடைத்தொடர்பு சார் நுண்மதி (Interpersonal Intelligence)
  • தன்னிலை சார் நுண்மதி (Intrapersonal intelligences)
  • இயற்கை சார் நுண்மதி (Naturalist intelligence)

கார்ட்னரின் நுண்மதிகளும் அவற்றை விருத்தி செய்வதற்கான வழிகளும்

மொழி சார்ந்த நுண்மதி - இது சொற்களை கையாள்வதற்கும் விளங்குவதற்கும் முன்வைப்பதற்குமான ஆற்றலைக் குறிக்கும். இவ்வகையான ஆற்றல் கொண்டவர்கள் செவிமடுத்தல், பேச்சு, கதை கூறல், கட்டுரை எழுதுதல் போன்ற திறன்களை அதிகம் பெற்றிருப்பர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • குறிப்பிட்ட விடயத்தை  வாசித்தல், அதனை செவிமடுத்தல், எழுத வைத்தல் அது குறித்து பேசச் செய்தல்
  • வகுப்பறையில் சொல் அகராதிகள் பயன்பாட்டை வலியுறுத்தல்.
  • எழுத்தாக்கங்களை செய்து பிரசுரிக்கத் தூண்டுதல்.
  • மன்றங்கள், கருத்தரங்குளை நடாத்தல்.
  • சொற்கள் ஆராய்ச்சியிற்கு தூண்டுதல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் வழக்கறிஞர், பேச்சாளர்/தொகுப்பாளர், நூலாசிரியர், பத்திரிகையாளர் ஆகிய தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

இசை சார்ந்த நுண்மதி - இது ஓசைகளை வேறுபிரித்தறியும் இரசிக்கும் உருவாக்கும் ஆற்றல். இந்த ஆற்றல் கொண்டவர்கள் இசையில், இராகத்தில், பாடலில், இசைக் கருவிகளை கையாள்வதில் அதிக திறன் கொண்டவர்களாக இருப்பர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • விடயங்களை விளக்குவதற்கு பாடல், கவிதை, செய்யுள் என்பவற்றை பயன்படுத்தல்.
  • பாட உள்ளடக்கத்தை ஓசை நயத்துடன் பாடச் செய்தல்.
  • ஒலியமைப்பில் கற்பதை வலியுறுத்தல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் பாடகர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் ஆகிய தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

தர்க்க-கணித நுண்மதி - இது இலக்கங்களை கையாளும், காரணம் காணும், தர்க்க ரீதியாக விடயங்களை அணுகும் ஆற்றல். இந்த ஆற்றல் கொண்டவர்கள் கணித பிரச்சினைகளை தீர்ப்பதில், பிரச்சினைகளை தர்க்க ரீதியாக அணுகுவதில், விடயங்களை பகுத்து தொகுத்துப் பார்ப்பதில் ,ஆய்வு செய்வதில்…அதிக திறன் கொண்டவர்களாக இருப்பர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • தர்க்கித்து விவாதம் செய்து விடயங்களை விளங்கிக் கொள்ள வசதியளித்தல்.
  • எண்களை அதிகம் பயன்படுத்தல்.
  • பிரச்சினை தீர்க்கும் ஆற்றலை வளர்க்கும் வகையில் புதிர் வினாக்களை, சம்பவ பகுப்பாய்வுகளை வழங்குதல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் கணிதவியலாளர், கணக்காளர், புள்ளிவிபரவியல் நிபுணர், விஞ்ஞானி, கணினி ஆய்வாளர் ஆகிய  தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

கட்புலன் சார் நுண்மதி - விடயங்களை காட்சிகளாக, வடிவங்களாக, தோற்றங்களாக விளங்குவதற்கும் , நினைவு படுத்துவதற்கும் முன் வைப்பதற்குமான ஆற்றல். இந்த ஆற்றல் கொண்டவர்கள் விடயங்களை பாரத்து விளங்குதல், தோற்றங்களை நினைவில் வைத்தல், வரைபடங்களை உருவாக்குதல், வரைதல், காட்சிப் படுத்தல், காடசியாக முன்வைத்தல் போன்ற விடயங்களில் அதிக திறன் கொண்டவர்களாக இருப்பர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • கற்பித்தலில் படங்கள் வரைபுகள் காட்சிகளை பயன்படுத்தல்.
  • வர்ணங்களை கற்றலுக்காக பயன்படுத்த தூண்டல்.
  • வர்ணப் பேனைகளை பயன்படுத்தி வெண்பலகையில் எழுதுதல்.
  • Multimedia பயன்பாட்டை அதிகரித்தல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் விமானி, அறுவை சிகிச்சை நிபுணர், கட்டட வடிவமைப்பாளர், கிராஃபிக் கலைஞர் ஆகிய தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

உடல்சார் நுண்மதி - இதனை உடல் ஆற்றல் என குறிப்பிடலாம். எந்த விடயத்தையும் ஓடி ஆடி செய்கின்ற, விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்ற, உடல் வலுவை, இயக்கத்தை அதிகம் பயன்படுத்தி செய்கின்ற காரியங்களை செய்கின்ற, நடிக்கின்ற திறன்கள் அதிகம் கொண்டவர்களாக இருப்பர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • வகுப்பறையில் எழுந்து, அசைந்து செய்கின்ற செய்றபாடுகளில் முன்னுரிமையளித்தல்.
  • நடிப்பு, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு தூண்டுதல் வழங்குதல்.
  • வெளிக்களச் செயற்பாடுகளில் முன்னுரிமை வழங்கல்.
  • விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஊக்குவித்தல்.

இந்நுண்மதி கொண்டவர்கள்; நடனமாடுபவர், தடகள விளையாட்டு வீரர், அறுவை சிகிச்சை நிபுணர், பொறிமுறையாளர், தச்சன், உடல் சிகிச்சை நிபுணர் தொழில்வாண்மையாளர்களாகக் காணப்படுவார்கள்.

ஆளிடைத் தொடர்பு சார் நுண்மதி - இது பிறரது மனவெழுச்சி, ஊக்கம், விருப்புக்கள், இயலுமைகளை சரியாக இணங்கண்டு கையாளும் ஆற்றல். இந்த ஆற்றல் கொண்டவர்கள் சமூகத் தொடர்புகளை கையாளுதல், தலைமைத்துவம் வழங்குதல், குழுச் செயற்பாடு, அடுத்வர்களது பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல் போன்ற விடயங்களில் அதிக திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்களை பல போது புறமுகிகள் என்று குறிப்பிடுகிறார்.சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு இத்திறன் அதிகம் அவசியப்படுகின்றது. இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • இணைந்து செயற்படும் வகையில் பயிற்சிகளை வழங்குதல்.
  • குழுக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து வழங்குதல்.
  • நேர்காணல் வினாக்களை வழங்கி மாதிரி நேர்காணல்களை நிகழ்த்தச் செய்தல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் ஆசிரியர், உளவியலாளர், மேலாளர், விற்பனையாளர்கள்; ஆகிய தொழில்வாண்மையாளர்களாகக் காணப்படுவார்கள்.

தன்னிலை சார் நுண்மதி - தனது சொந்த மனவெழுச்சிகள், ஆற்றல்கள், நம்பிக்கைள் என்பவற்றை இனம் கண்டு செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த ஆற்றல் கொண்டவர்கள் சுயமாக கருமமாற்றும், சுயமுனைப்புக் கொண்ட செயற்பாடுகளில் ஈடுபடும் திறன் பெற்றவர்களாக இருப்பர். இவர்களை அகமுகிகள் என்று குறிப்பிடுவர். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • சுயசரிதை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஊக்குவித்தல்
  • கற்பித்த உள்ளடக்கம் தொடர்பாக விமர்சனப் பாரவையை முன்வைக்க இடமளித்தல்.
  • பாட ஆரம்பத்தில் Brain Storming வினாக்களை வழங்குதல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் சிகிச்சையாளர, உளவியலாளர், ஆலோசகர், தொழிலதிபர், மதகுருக்கள் ஆகிய தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

இயற்கை சார் நுண்மதி - மனிதன், பிரபஞம், உயிரிகளின் இருப்புக் குறித்த பெரும் வினாக்களுக்கு விடை தேடும் ஆற்றல் என குறிப்பிடலாம். ஆன்மீக நுண்மதியை தனியாக அடையாளப்படுத்திய போதும் அதனை ஆராய்ந்ததன் பின்னர் நுண்மதிகளை வேறுபிரித்தறிவதற்கான தனது வரையறைகளை வைத்து அதனை இருப்பியல் நுண்மதிக்குள் உள்ளடக்கலாம் என கார்ட்னர் பின்னர் குறிப்பிடுகிறார். இது நான் யார்? எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கு செல்லப் போகிறேன்? எனது மரணத்தின் பின்னரான வாழ்வு என்ன? போன்ற பிரபஞ்சத்தின் பெரும் கேள்விகளுக்கு விடை தேடும் ஆற்றல் என குறிப்பிடலாம். இவற்றை விருத்தி செய்வதற்கு கற்பித்தல் செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டியவை,

  • சூழலுடன் தொடர்பான விடயங்களில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • இயற்கை வளங்களை அறிமுகம் செய்வதற்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல்.
  • தோட்டச் செய்கை, பராமரிப்பு என்பவற்றை ஊக்குவித்தல்.
  • உயிரினங்களுடன் தொடர்புபட்டு இயங்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.

இந்நுண்மதி கொண்டவர்கள் தாவரவியலாளர், உயிரியலாளர், வானியலாளர், வானிலை ஆய்வாளர், புவியியலாளர் ஆகிய தொழில்வாண்மை உடையவர்களாகக் காணப்படுவார்கள்.

கற்பித்தல் நுண்மதி - கற்பித்தலிலும், பிறருக்கு வழிகாட்டுவதிலும் சிலர் சிறப்பான ஆற்றல் பெற்றிருக்கின்றனர். இது தனியான ஒரு ஆற்றலாக இனம் காணப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக தான் ஆராய்ந்து வருவதாகவும் அண்மையில் (2013) இடம் பெற்ற ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கார்ட்னர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

கார்டினரின் கோட்பாடு கல்வியின் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததோடு அது கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. நுண்மதி தொடர்பான பலஉளவியற் கொள்கைகளை விட வேறுபட்டதாகவும் ஆராய்ச்சி மற்றும் மனித உளவியல் பற்றி சிந்திக்கும் பல்வேறு வழிகளில் கதவுகளை திறந்துவிட்டது. மாணவர் சிந்திக்கவும், பல வழிகளில் கற்றுக் கொள்ளவும், கல்வி கற்பிப்பாளர்களின் தினசரி அனுபவத்தை மதிப்பிடுவதால்; இக்கோட்பாடு மிகவும் பிரபலமாக உள்ளது என ஆராய்ச்சியாளர் ஆiனெல டு. முழசnhயடிநச கூறியுள்ளார். பாடத்திட்ட மதிப்பீடு மற்றும் கற்பிக்கும் நடைமுறைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இந்த பிரதிபலிப்பு, பல வகுப்பறைகளில் உள்ள பயிற்றுவிப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புதிய அணுகுமுறைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது.



Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)