Education for Sustainable Development (Tamil)
பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி
அறிமுகம்
வறுமையை ஒழிக்கவும் எமது பூமியை பாதுகாக்கவும் அனைவருக்கும் சுபீட்சத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2015 செப்டெம்பர் 15 ஆம் திகதி பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளும் அடுத்த 15 வருட காலத்துக்குள் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் இது ஏற்புடையதாக இருப்பதாகும். (புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு உரித்தானவையாகும்) அவ்வாறே அபிவிருத்திக்காக அதிக துறைகளையும் அதிக இலக்குகளையும் கொண்டிருப்பது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அபிவிருத்தியாகும். இதுவரை கலந்துரையாடப்படாத பெண்களை வலுவூட்டல், சமாதானமும் பாதுகாப்பும் மற்றும் நல்லாட்சி போன்ற எண்ணக்கருக்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எதிர்கால உலகின் அபிவிருத்தி திட்டங்கள் இப்புதிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் இந்த இலக்குகளை தமது அபிவிருத்தி கொள்கைத் திட்டங்களில் உள்ளடக்க வேண்டும். எனினும் இவை ஒரு சவாலாகவே இருக்கும். இந்த இலக்குகளை அடைந்து கொள்ளவேண்டுமானால் இதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யவேண்டியிருக்கும். விளிப்பு நிலை வறுமையை ஒழிப்பதற்காக வருடாந்தம் சுமார் 22 பில்லியன் டொலர் நிதி அவசியம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது இங்குள்ள பிரச்சினையாகும். அந்தந்த நாடுகளின் நிதிகளும் மக்களின் உதவி நிதிகளும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கடந்த ஜூலை மாதம் எத்தியோப்பியாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான நிதியங்களை அமைப்பது கடினமானதொன்று என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தவகையில் புதிய இலக்குகளை அடைந்துகொள்வது சவால் மிக்கதாகும். எனினும் இந்த சவாலை வெற்றிகொண்டு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதனூடான உலகில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதும் உலகின் எதிர்பார்ப்பாகும்.
வறுமையற்ற உலகம், பசி பட்டினியற்ற உலகம், சிறந்த சுகாதாரம், தரமான கல்வி, பால் சமத்துவம், தூய நீர், மீள் புதுப்பிக்கத்தக்க மின்சாரம், சிறந்த தொழில் பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் உட்கட்டமைப்பு, சமத்துவமான சமூகம், பேண்தகு நகரங்களும் சமூகமும், பொறுப்புவாய்ந்த நுகர்வு, காலநிலை நடவடிக்கை, நீரின் கீழ் வாழ்க்கை, பூமியில் வாழ்க்கை, சமாதானமும் நீதியும். இலக்குகளுக்கான பங்காண்மை ஆகியவையே பேண்தகு அபிவிருத்தி இலக்குகளாகும்.
இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள்
17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் 169 துணையிலக்குகளில் 17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் வருமாறு:
- வறுமையை அனைத்து மட்டங்களிலும் அனைத்து இடங்களிலும் ஒழித்தல்.
- பசியால் வாடுதலை முடிவுறுத்தல்.
- ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் அனைத்து வயதிலும் நல்லிருப்பை உறுதிப்படுத்தல்.
- சமமான பரம்பலடைந்த சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக்கிடைக்கக் கூடியவாறு கல்வியை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தலும் அனைவருக்கும் வாழ்நாள் பூராகவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு அதனை மேம்படுத்தல்.
- ஆண், பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண்பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.
- அனைவருக்கும் நீர் கினடத்தல், பேண்தகு அபிவிருத்தி மற்றும் பொது சுகாதார வசதிகள் கினடப்பதை உறுதிசெய்தல்.
- ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகரமான பேண்தகு நவீன வலுச்சக்தி முறைகளுக்கான பிரவேசத்தை சகலருக்கும் உறுதிப்படுத்தல்.
- ஏற்றுக்கொள்ளக்கூடிய, உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி பூரண உற்பத்தித்திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கௌரவமான தொழில்களைப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தல்.
- மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில் மயமாக்க மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தல்.
- நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடயேயும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
- நகர மற்றும் மனித குடியிருப்புக்களை உள்ளீர்த்தல், பாதுகாப்பு, நெகிழ்திறன் மற்றும் பேண்தகு தன்மையாக மாற்றுதல்.
- பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி முறையை உறுதிப்படுத்தல் பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பில் பத்தாண்டு சட்டகத்தை செயற்படுத்தல்.
- காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களை தவிர்ப்பதற்காக துரித நடவடிக்கையெடுத்தல்.
- சமுத்திரம், கடல் மற்றும் சமுத்திர வளங்களை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்காக பயன்படுத்தல்.
- பௌதீக சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல், மீளமைத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டை மேம்படுத்தல், வனங்களை பேண்தகு முறையில் முகாமை செய்தல், பாலைவனமாதலை தடுத்தல், மண்ணரிப்பை நிறுத்தி அதனை மீளமைத்தல் மற்றும் உயிரியல் பன்மைத்துவம் அழிவடைவதனை நிறுத்தல்.
- பேண்தகு அபிவிருத்திக்காக சமாதானமான, உள்ளீர்ப்புக்காக சமூக மேம்படுத்தல் மற்றும் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதற்காக வாய்ப்பை வழங்குதல் மற்றும் வகைக்கூறலுடன் உள்வாங்கப்பட்ட நிறுவனங்களை அனைத்து மட்டங்களிலும் நிறுவுதல்.
- பேண்தகு அபிவிருத்திக்கான பூகோளவியல் ஒத்துழைப்பை அமுல்படுத்தல் மற்றும் புதிய உயிரோட்டத்தை வழங்கும் வழிகளை பலப்படுத்தல்.
பேண்தகு அபிவிருத்தியில் கல்வியின் இலக்கானது நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது “சமமான பரம்பலடைந்த சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக்கிடைக்கக் கூடியவாறு கல்வியை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தலும் அனைவருக்கும் வாழ்நாள் பூராகவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு அதனை மேம்படுத்தல்” இதனைச் சுருக்கமாக “அனைவருக்கும் தரமான கல்வி” எனக் குறிப்பிட முடியும். இதனை அடையும் வகையில் எமது நாட்டுக் கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை ஆராய்வோமானால்,
பாலர் பாடசாலைக் கல்வி முதல் உயர்கல்வி வரை தேவைப்படும் நிதிகளை அரசாங்கம் செவவிட்டு இலவசக் கல்விச் செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதும் அதனை ஒழுங்குபடுத்தத் தேவையான மனித மற்றும் பௌதிக வளங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின்பாற்பட்ட பொறுப்பாகும். அதற்காக மொத்தத் தேசிய உற்பத்தியில் குறைநத் பட்சம் 6% சதவீதமேனும் கல்விக்கு ஒதுக்கப்படும். மட்டுப்பாடுகளின்றி சமூகத்திலுள்ள அனைத்துக் குழுக்களுக்கும் தமது தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் கல்விக்கான சமமான அணுகும் வாய்ப்பிருக்க வேண்டும். பொறுப்பான ஒரு பிரஜை என்ற வகையில் சமூக விதிமுறைகளை ஏற்றுக்கொண்டும் அவற்றுக்கு மதிப்பளித்தும் செயற்படுவதற்கும் தேவையான அறிவையும் திறன்களையும் உளப்பாங்குகளையும் நடைமுறைகளையும் மதிப்பீடுகளையும் கல்வியானது வழங்க வேண்டும்.
கல்வியானது தொழிற்சந்தை மற்றும் கைத்தொழில் தேவையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருத்தலாகாது என்றபோதும், சமூகத் தேவையையும் விளைதிறனையும் அதிகரிக்கக்கூடிய தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதற்கு கல்வியானது பங்களிப்புச் செய்ய வேண்டும். கல்வியின் உள்ளீடானது அனைத்து இனங்களும் உள்ளிட்ட அனைத்துக் கலாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எந்தவொரு சமூகக் குழுவுக்கும் பாரபட்சம் காட்டாததாகவும் அனைத்துக் குழுக்களுக்கும் பாதுகாப்பை வழங்கக்கூடியதாகவும் பண்புத்தரமுள்ளதாகவும் விளங்க வேண்டும்.
தற்போதுள்ள அறிவைப் பெற்றுக்கொள்வதையும் அந்த அறிவைப் பரப்பீடுசெய்வதையும் அதேபோல் புத்தறிவை உருவாக்குவதையும் உள்ளடக்கிய ஒரு செயனமுறையே கல்வியாகும். ஆளொருவர் கல்வியின் ஊடாக அடைந்து கொள்ளும் அனைத்து விதமான அபிவிருத்திகளும் தற்போதைய அனைத்துக் கலாசாரங்களுக்கும் பாரியதொரு பங்களிப்பை வழங்குவதுடன் சமூகத்தினால் பிரஜையின் கல்விக்காக மிக உயர்ந்த செலவொன்று மேற்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் சமூகத்திற்கு பதில்கூறக்கூடிய பிரஜைகளை கல்வியானது உருவாக்க வேண்டும்.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் துறைகளின் பேண்தகு தன்மை, பண்புத்தரம் என்பவற்றை வளர்ப்பது கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒனற் hக இருத்தல் வேண்டும். உலகளாவிய, தேசிய தேவைப்பாடுகளின் அடிப்படையில் வளங்கள் நுகரப்படுவதுடன், எதிர்காலத்திற்கு அவை பாதுகாக்கப்படுகின்ற விதமாக செயலாற்றுவதற்கும் புத்தாக்கச் செயனமுறைகளை ஊக்குவிப்பதற்கும் கல்வியானது துணிய வேண்டும்.
கல்வியானது குறிப்பான ஒரு வயதுப் பிரிவினருடன் மட்டுப்படுத்திவிடக்கூடிய ஒன்றல்ல. அதேபோல், அது ஒரே தடவையில் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு செயன்முறையும் அல்ல. ஆதலால் அடையப்பெற்றுள்ள மிக உயரந்த தகைமை எதுவாயிருப்பினும், ஈடுபடக்கூடிய தொழில் எதுவாயிருப்பினும், வாழ்நாளில் கல்வியைப் பெறக்கூடிய வகையில் அச்செயன்முறை வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கல்வியின் உள்ளீடானது காலத்திற்கும் சமூகத் தேவைப்பாடுகளுக்கும் ஏற்றவாறு நிகழ்நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் உலகளாவிய மற்றும் உள்ளுர்த் தேவைப்பாடுகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டதாக அது அமைந்திருக்க வேண்டும்.
கற்றல் சூழலில் அடிப்படை மனித விழுமியங்களையும் தொடர்புகளையும் போலவே அறிவாதார (Empirical) கற்றல்களையும் மேம்படுத்துவதன் மூலம் தனி மனிதனுள் வாழ்வு பற்றிய ஆழமான பொருளையும் சமுதாயமும் உலகும் பற்றிய பரந்ததொரு நோக்கையும் ஏற்படுத்துவதன் மூலம் கற்றல் பற்றிய பேராவலை உருவாக்க வேண்டும். புத்தறிவை புத்துருவாக்குவதை இலக்காகக்கொண்ட ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், புத்தாக்கம், மேற்பார்வை, மதிப்பீடு, அறிவை விநியோகித்தல் எனப் வற்றுடன் கையகப்படுத்தல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்திக்கொள்ளல் என்பவற்றின் மூலம் புத்தறிவை கையகப்படுத்திக்கொள்வதும் விநியோகிப்பதும் கல்விச் செயன்முறையில் அடங்க வேண்டும்.
IT IS VERY VALUABLE . THANK YOU AND GOD BLESS YOU SIR.
ReplyDelete