Sigmund Freud’s Personality Theory (Tamil)
ஆளுமை என்பதன் பொருள்
Personality எனும் சொல், லத்தீன் வார்த்தையான persona என்பதிலிருந்து தோன்றுகிறது. இதற்கு நாடகத்தில் போடப்படும் வேடம் அல்லது முகமூடி என்று பொருள். ஆளுமை என்பது ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம் எனக் கருதப்பட்டது. ஆனால் இன்று, அதன் பொருள் வேறுபடுகின்றது. குறிப்பிட்ட பண்பில் சிறந்து விளங்குபவன் சிறந்த ஆளுமையுடையோன் எனப்படுகிறான். பலர் இவ்வார்த்தை, உடல் கவர்ச்சியை, உருவத்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே, ஆளுமை என்பது மிகவும் பரந்த பொருளுடையதாகும். ஒருவர் அவருடைய நிலையில் சமுதாயத்தின் தூண்டலுக்கு வெளிப்படுத்தும் தனிப்பட்ட மதிப்பே ஆளுமை எனப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க பண்புகளுண்டு. இப்பண்புகளின் காரணமாக வௌ;வேறு சூழலிலும் குறிப்பிட்ட நடத்தை வெளிப்படுகின்றது. இந்நடத்தைக் கோலங்கள் ஒருவனின் ஆளுமை தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒருவனின் மனவெழுச்சி, திறன், நுண்ணறிவு,அனுபவம், புலன்காட்சி, இயல்பூக்கம், நினைவாற்றல், படைப்பாற்றல், எண்ணங்கள், பழக்கங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பே ஆளுமையாகும்.
வரைவிலக்கணங்கள்
Guilford என்பவர் ஆளுமை என்பது ஒருவனின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று வரையறுக்கின்றார்.
Woodworth, கருத்தின்படி, "மனிதன் பாரம்பரியத்தாலும், சூழ்நிலையாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மனப்போக்குகள், உளத்துடிப்புகள், செயல்முறைகள், உடல் வேட்கைகள், இயல்பூக்கம் ஆகியவற்றின் தொகுப்பே ஆளுமை”.
G.W. Allport, “மனப்பண்புகள் சேர்ந்து, ஒருங்கமைந்திருக்கும். இந்த ஒருங்கமைப்பின் இயல்பு, மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனிமனிதன் தன் சூழலில் எவ்வாறு செயல்படுகிறான் என்பது ஒருங்கமைப்பின் தன்மையை பொருத்தது. இத்தகைய உடல் உள்ளப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பே ஆளுமையாகும்” என்று விளக்குகின்றார். இவ்வாறு ஆளுமை பல்வேறு வகையில் வரையறுக்கப்பட்டாலும் பொதுவாக ஆளுமை உருவாக்குவதில் பாரம்பரியத்திற்கும், சூழ்நிலைக்கும் பங்குண்டு மேலும் ஆளுமை தனித்தன்மையானது.
சிக்மன் புறொய்ட் (Sigmund Freud’s) இன் ஆளுமைக்கோட்பாடு
சுவிஸ்லாந் நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான சிக்மன் புறொயிட் என்பவரால் முன்வைக்கப்பட்ட உளவியல் முறை “உளப்பகுப்பு வாதம்” எனப்படும். இவரால் முன்வைக்கப்பட்ட இக்கோட்பாடு உளமருத்துவமுறை என்றும் கூறப்படலாம்.
இக்கோட்பாட்டில்.
உளத்துறை/ஆய்வு Psycho Analysis
ஆளுமை பற்றிய கருத்துக்கள் Theory of personality
பாலுணர்ச்சி பற்றிய கொள்கை Theory of Sex
கனவுகள் பற்றிய கொள்கை Theory of Dreams. போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஒருவரது நடத்தைக்குக் காரணமான நோக்கங்களை ஆழ்ந்து ஆராய்வதன் மூலம் உருவான கொள்கையாகும். இது நனவிலி மனச்செயல்களின் (Unconscious) செல்வாக்கினைக் குறிப்பிடுகின்றது. நனவிலி மனம் பண்படா ஊக்கிகள், மனவெழுச்சிகளின் இருப்பிடம். இவை ஒருவனது சிந்தனை, செயல் இவற்றினடிப்படையில் உருவாகும் ஆளுமையை நிர்ணயிக்கின்றன. ஆளுமை அமைப்பு மூன்று முக்கிய உள்ளமைப்புகளைக் கொண்டது. இவை ஒவ்வொன்றின் செயலும் தனிப்பட்டவை எனினும், இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், இடைவினையாற்றியும் நடத்தையைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆளுமையின் உள்ளமைப்புகள்
- இட் எனப்படும் அடித்தளநிலை
- ஈகோ எனப்படும் தன்னுணர்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட ஈகோ நிலை
- சுப்பர் ஈகோ எனப்படும் அடுத்த உயர்நிலை அல்லது மேன்மனநிலை
இட் (Id)
ஆளுமையின் அடித்தளம் Id. இதிலிருந்து பின்னர் Ego மற்றும் Super Ego எனப்படும் மேல்மனங்கள் எழுகின்றன. மரபுவழி பெறப்படும் எல்லா ஊக்கிகளும் இவற்றுள் அடங்கும். புற நிலைகளின் இயக்கத்திற்குத் தேவைப்படும் லிபிடோ எனப்படும் சக்தியினைக் கொண்டது. இச்சக்திகள் கீழ்த்தர மகிழ்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டவை. இந்நிலை நனவிலி மனதில் இருக்கும் இது வெளியில் தெரிவதில்லை. தன்னுணர் நிலையான Ego இதிலிருப்பதில்லை. பின்னர் சூழ்நிலையுடன் நடத்தை பொருந்திப் போக வேண்டியிருப்பதால், தேவையின் காரணமாக Ego எழுகின்றது. எனவே இதன் செயல்கள் உண்மை நிலைமை கொள்கையைச் சார்ந்து அமைபவை. இட்டின் இயல்புகளாக,
- இட் நனவிலி நிலையில் செயற்படும் சக்தியாகும்.
- இது பிறப்பிலே உள்ள சக்தியாகும்.
- இன்பம் அனுபவிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இட் செயற்படுவதாக புறொய்ட் குறிப்பிடுகின்றார்.
- இட், தான் விரும்பியவாறு செயற்படத் தொடங்குமாயின் அவனது சமூக விழுமியங்களை விட அது மேல் நோக்கி நிற்கும்.
- நன்மை – தீமை, நல்லது – கெட்டது என்பவை கருதாது திருப்தி அடிப்படையிலே செயற்படும் சக்தி ஆகும்.
- இட் நிலை பொதுவாக குழந்தைகளிடத்தில் காணப்படும்.
- இட் மிருக உணர்விற்கு ஒப்பானதாக இருக்கும்.
ஈகோ (Ego)
Id-ன் நனவிலி மனதின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது உயர் நிலையான நுபழ ஆகும். மேனிலை மனமான Super Ego மற்றும் Id இவை இரண்டினையும் எவ்வாறு சமநிலைப் படுத்தலாம் என்பதிலும், Ego முக்கியப்பங்கு பெற்று ஆளுமையைத் தீர்மானிக்கின்றது.
ஈகோ யதார்த்தமான கொள்கையின்படி செயல்படுகிறது, கோரிக்கைகளை திருப்தி செய்வதற்கான யதார்த்தமான வழிகளை உருவாக்குகிறது, சமூகத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக திருப்தியை அடிக்கடி சமரசம் செய்து அல்லது ஒத்திசைய வைக்கிறது. ஈகோ சமூக யதார்த்தங்கள் மற்றும் விதிமுறைகள், ஆசாரம் மற்றும் விதிகளில் எப்படி நடந்துகொள்வது என்பதைத் தீர்மானிக்கிறது.
Id ஐப் போலவே, ஈகோ மகிழ்ச்சியைத் தேடுகிறது (அதாவது, பதற்றம் குறைதல்) மற்றும் வலியைத் தவிர்க்கிறது, ஆனால் Id ஐப் போலல்லாமல், ஈகோ இன்பத்தைப் பெற ஒரு யதார்த்தமான மூலோபாயத்தை வகுப்பதில் அக்கறை கொண்டுள்ளது. ஈகோவுக்கு சரி அல்லது தவறு என்ற கருத்து இல்லை தனக்கு அல்லது Id க்கு தீங்கு விளைவிக்காமல் திருப்திகரமான முடிவை அடைவதை நோக்காகக் கொள்ளும்.
ஈகோ இரண்டாம் நிலை செயல்முறை சிந்தனையில் ஈடுபடுகிறது, இது பகுத்தறிவு, யதார்த்தம் மற்றும் சிக்கல் தீர்க்கும் நோக்குடன் உள்ளது. ஒரு செயல் திட்டம் செயல்படவில்லை என்றால், ஒரு தீர்வு கிடைக்கும் வரை அது மீண்டும் சிந்திக்கும். நபர் தனது தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தவும், தன்னம்பிக்கையை நிரூபிக்கவும், ஈகோ தனது பொறிமுறை மூலம் முயற்சி செய்யும். இவற்றின் இயல்புகளாக
- Ego உள்ளத்தின் தர்க்கிக்கும் பகுதியாகும்.
- இது Id, Super Ego ஆகிய இரண்டிற்குமிடையில் சமனிலை ஏற்படுத்த முயலுகின்றது.
இந்த வகையில் Ego எந்த அளவிற்கு Id, Super Ego ஆகியவற்றின் முரண்பாடான தேவைகளை நடுநிலைப்படுத்துகின்றதோ அந்த அளவிற்கு நிதர்சனமான போக்குடைய ஒரு மனிதன் உருவாகின்றான்.
சுப்பர் ஈகோ (Super Ego)
மேல்நிலையான Super Ego 6 வயதில் துவங்குகின்றது. ஆசிரியர் பெற்றோரால் வலியுறுத்தப்படும் சமூக மதிப்புகள், தங்கள் அறக்கோட்பாடுகள் ஆகியவற்றை குழந்தை மனதில் கொள்வதால், இம்மேனிலை மனம் தோன்றுகின்றது. மனச்சாட்சி, வாழ்க்கை, குறிக்கோள் போன்றன மேனிலை மனத்தின் கூறுகள். சமூகம் ஏற்காத Id-ன் பண்புகளை தடைசெய்வது, நற்பண்புகளை மேற்கொள்ள Ego-வைத் தூண்டுவது, நிறைவினைப் பெறுவதை இலக்காகக் கொள்வது போன்றன மேனிலை மனத்தின் செயல்களாகும்.
சூப்பர்-ஈகோ நாம் பெருமையாக உணர வைப்பதன் மூலம் 'ஒழுங்காக' நடந்து கொள்ளும்போது இலட்சிய சுயத்தின் மூலம் நமக்கு வெகுமதி அளிக்கச் செய்யும். சிறந்த சுயமும் மனசாட்சியும் குழந்தை பருவத்தில் பெற்றோரின் மதிப்புகளிலிருந்தும், நீங்கள் எப்படி வளர்க்கப்பட்டீர்கள் என்பதிலிருந்தும் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றின் இயல்புகளாக,
- சுப்பர் ஈகோ மனச்சாட்சி போன்றது.
- மதநம்பிக்கைகள், பெரியோர் ஆலோசனைகள், சமூக நியமங்கள் ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்டதாகும்.
முடிவுரை
Id தானாகவே செயற்பட்டால் மிருகத்தைப் போல செயற்பட முடியும். Super Ego சொல்வது போல் செயற்பட்டால் தியாகமும் நேர்மையும் உள்ள துறவி போல் செயற்பட முடியும். இவ்விரண்டுமே சமூகத்திற்கு பொருந்தக் கூடியவை அல்ல. எனவே இவ்விரண்டிற்குமிடையே சமநிலை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு சக்தியாக Ego இருப்பதாக புறொய்ட் குறிப்பிடுகின்றார். Id, Ego, Super Ego ஆகிய மூன்றும் இணைந்து செயலாற்றினால்தான் ஆளுமைச் சமநிலை ஏற்படும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு செயல்பட்டால், ஆளுமைச் சீர்கேடு ஏற்படும். இணைந்து செயல்படுவதே இசைவான ஆளுமை எனப்படுகின்றது.
Comments
Post a Comment