Curriculum Changes of Sri Lanka at Colonial period (Tamil)
காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட கலைத்திட்டத்தில் மாற்றங்கள் இலங்கையின் கலைத்திட்டமானது படிப்படியாக விருத்தியடைந்த ஒரு முறைமையாகும். குறிப்பாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய 3 இனத்தவர்களால் இந்நாடானது காலனித்துவ ஆட்சியின் கீழ் உட்பட்டு இருந்தமை நாம் அனைவரும் அறிந்தவொன்றே. அந்தவகையில் நோக்கும்போது இந்நாட்டினுடைய பாரம்பரிய கலைத்திட்டத்தில் மேலைத்தேய நாட்டவரின் செல்வாக்கை எங்களால் இன்று வரைக்கும் அடையாளம் காணமுடியும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியில் இலங்கையின் கலைத்திட்ட விருத்தியில் ஏற்பட்ட மாற்றங்களை நோக்குவோம். போர்த்துக்கேயர் காலக்கல்வி இலங்கையை ஆட்சி செய்த முதல் ஐரோப்பிய இனத்தவராக போர்த்துக்கேயர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். கி.பி 1505ம் ஆண்டு வருகையைத் தொடர்ந்து சுமார் 1 ½ நூற்றாண்டுகளாக போர்த்துக்கேய ஆட்சி தொடர்ந்தது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களிலேயே இவர்களுடைய செல்வாக்கும் நிலைத்திருந்தது. பொதுவாகக் கூறினால் இவர்களது வருகையின் பிற்பாடே இலங்கையின் கல்விக் கட்டமைப்பானது நிறுவனமயப்படுத்தப்பட்டதாக மாறியது. குறிப்பாக வர்த்தகம், மதத்தைப் பரப்புதல் போன்ற அம்சங்களை...