Lecture Method - Teaching Methodology (Tamil)
விரிவுரை முறை
அறிமுகம்
இது கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், பெரிய வகுப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் ஆசிரியர் மட்டும் பேசுகிறார். மாணவர்கள் அமைதியாக, கேட்டபவர்களாக இருந்து, பாட வளர்ச்சியில், எந்த சிறப்பான பங்கும் வகிப்பதில்லை. மாணவர்கள் கவனிக்கின்றனர், ஆனால் சில நேரங்களில், ஆர்வத்தை இழந்து தூங்கிவிடுகின்றனர். ஆசிரியர் வகுப்பு நேரம் முழுவதும், பேசிக்கொண்டே இருக்கிறார் ஒரு வாயாடி போல. மாணவர்கள் கவனிக்கின்றனரா என்பதை அவர் கவனிப்பதில்லை. மாணவர்கள் ஊட்டப்படுகின்றனர். கற்றலுக்கு தேவையான உற்றுநோக்கல், சிந்தித்தல் போன்ற திறன்கள் இங்கு தேவைப்படாததால் தூண்டப்படுவதில்லை.
ஒருவேளை இம்முறை, அச்சடித்தல் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், எழுத்து வடிவ புத்தகங்கள் மிகக் குறைவாக இருந்தபோது, தோன்றியதாக இருக்கலாம். இந்த விரிவுரை முறை, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் அடிப்படை கல்விச் சாதனம். இதுவே இன்று அநேக ஆசிரியர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. விரிவுரை என்பது, மாணவர்களுக்கு ஆசிரியர் அளிக்க விரும்பும் அறிவு, உண்மைகள், கொள்கைகள் மற்ற விவரங்கள் ஆகியவற்றின் விரிவாக்கம் ஆகும்.
இம்முறையில் நலன்களைவிட, நலமற்றவை அதிகமாக இருந்தபோதிலும், இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. இந்த முறை கீழ் வகுப்புகளுக்கு கற்பிக்க, மிக உதவியாக இருக்காது. இருப்பினும், இது மேல்வகுப்புகளுக்கு, கீழ்கண்டவற்றை நாம் விரும்பும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- மொத்த பாடத்திட்டத்தை விரைவாக முடிக்க.
- சில புதிய கடினமான தலைப்புகளை அறிமுகப்படுத்த.
- மாணவர்களுக்கு முன்பே தெரிந்த உண்மைகளின் அடிப்படையில், பொது கருத்துகளை அடைய.
- உண்மைகள் பற்றிய அறிவினை தெரிவிக்க.
- சில கடினமான பகுதிகளை விளக்க.
- முன்னால் கற்ற பாடத்தை, மீள்பார்வை செய்து சுரூகமாக சொல்ல.
- ஒரு தலைப்புக்கு தேவையான சில விவரங்களை தர.
நல்ல விரிவுரைக்கான திறன்கள்
- செயல்களை பயன்படுத்தல்
- தொடர்புகளை அதிகரிக்கும் சாதனங்களை பயன்படுத்தல்
- தூண்டுதலை மாற்றுதல்
- குரல் மாற்றம்
- தகுந்த மொழியை பயன்படுத்தல்
விரிவுரை முறை பயன்படும் பகுதிகள்
- புதிய கடினமான தலைப்புகளை, அறிமுகம் செய்ய.
- முன்னால் கற்பித்த தலைப்புகளை, மீள் பார்வை செய்ய.
- சில தலைப்புகளின் பின்னணி விவரங்களை தர.
- பெரிய விஞ்ஞானிகளின் வாழ்க்கை சரித்திரம், அவர்களின் போராட்டங்கள், வாழ்வின் சாதனைகள் இவற்றை முன் வைக்க.
- சில வழிமுறைகளை விளக்க.
- உண்மைகள் பற்றிய அறிவை கொடுக்க.
- சில ஆழ்ந்த கருத்துகளை விவரிக்க.
சிறப்புகள்
கவர்ச்சிகரமானது, சுருக்கமானது இது ஆசிரியருக்கும்;, மாணவருக்கும் அதிக சிரமமில்லாமல் பின்பற்ற உதவுகிறது. ஆசிரியர் திருப்தியுடநும், பாதுகாப்புடநும் இருப்பதாக உணர்கிறார்.
சேமிப்புமிக்கது இதற்கு ஆய்வகம் தேவை இல்லை. ஒரு ஆசிரியர், அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.
விரைவானது இம்முறையில், நீண்ட பாடத்திட்டத்தை, குறுகிய காலத்தில் நடத்திவிடலாம்.
உண்மை விவரங்களை கற்றுத்தர பயனுள்ளது
உண்மை விவரங்கள், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை இம்முறையில் எளிதாக கற்றுத்தரலாம்.
தர்க்கரீதியான தொடர் அமைப்பு பயன்படக்கூடியது
பாடத்தில், தர்க்க ரீதியான அம்சங்களை, எளிதாக நிறுத்தி வைக்கலாம். ஆசிரியர் விரிவுரையை, முன்னதாகவே திட்டமிட வேண்டியுள்ளதால், பாட வளர்ச்சியில் இடைவெளிகளோ, திரும்பக் கூறுவதோ இருக்க வாய்ப்பில்லை.
நேரத்தை சேமித்தல்
இந்த முறையில் மாணவர் செயல்பாடோ, செய்துகாட்;டலோ, திட்டச் செயலோ இல்லாமலிருப்பதால், கால விரயம் இல்லை. மேலும் பாடம், வெகு விரைவாக செல்ல இயலும்.
தூண்டுவிக்கும் திறன்
நல்ல விரிவுரை, மாணவர்களை வெகுவாக தூண்டக்கூடியது. சில நேரங்களில் மாணவர்கள், ஆர்வம் மிகுந்து, வாழ்வில் படைப்புச் செயல்களில் ஈடுபடுவர்.
குறைகள்
நினைவு அடிப்படையிலானது
ஞாபகம் வைத்துக்கொள்வதை, இது அதிகமாக வலியுறுத்துகிறது. சோதனைகள் செய்வது, ஒதுக்கப்படுகிறது. உற்றுநோக்கல், பயன்படுத்தப்படுவதில்லை.
தேக்கரண்டியால் ஊட்டல்
இது சுயமாக சிந்திப்பதையும், கண்டறிதல், ஆய்வு செய்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதில்லை. இது ஒரு வகை ஊட்டுவித்தலாக இருப்பதால், குழந்தையின் எல்லா திறன்களையும், வளரவிடுவதில்லை.
ஆசிரியர் மையமானது
ஆசிரியர் விரிவுரையாற்றும்போது, மாணவர்கள் உற்று கவனிக்கின்றனரா, புரிந்துகொண்டார்களா, என்பதை உறுதி செய்ய இயலாது.
மிக வேகமானது
அறிவையும், செய்திகளையும் அளிக்கும் விதம் மிக வேகமாக இருக்கலாம். இதனால் மாணவர்கள், சிந்தனைகளுக்கிடையே உள்ள தொடர்பை, அறிய இயலாமல் போகலாம்.
இது உளவியல் முறைக்கு எதிரானது
இம் முறையில் ஆசிரியர் தீவிரமாக மாணவர்கள் செயலற்ற கேட்பவர்களாக இருக்கின்றனர். இது உளவியல் கொள்கைகளுக்கு எதிரானது. மாணவர்களின் ஆர்வங்கள், திறன்கள், ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை.
அறிவியல் மனப்பான்மை உண்டாக்கப்படுவதில்லை
இது அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவோ, அறிவியல் முறைகளில் பயிற்சி அளிக்கவோ உதவுவதில்லை.
செய்து கற்றல் இல்லை
இம்முறையில் செய்து கற்றலுக்கு வாய்ப்பு இல்லை. அறிவியல் என்பது செயல் நிறைந்தது, எனவே எந்த செயல்களும் செய்யப்படாதபோது, அறிவியலின் அடிப்படையே நீக்கப்படுகிறது.
அதிகாரபூர்வமானது
இது ஜனநாயகம் அற்ற முறை. மாணவர்கள், ஆசிரியரின் ஆளுமையை சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. ஆசிரியரின் கருத்துகளை எதிர்க்க முடியாது.
விமர்சன சிந்தனை இன்மை
ஜனநாயக வாழ்விற்கு மிக அவசியமான விமர்சன சிந்தனையை இது வளர்ப்பதில்லை. கேள்விகள், ஒலி, ஒளிச்சார் கருவிகள் இவற்றைப் பயன்படுத்தும் முறைசாரா பேச்சு, மாணவர்களின் தொடர்ந்த ஆர்வத்தை சிறப்பான கற்றலை உண்டாக்கும்.
உயர் வகுப்புகளுக்கு பயனுள்ளவை
இந்த முறை, கீழ் வகுப்புகளுக்கு கற்பிக்க மிகவும் உதவியாக இருக்காது. இருப்பினும், 11, 12, 13 ஆம் வகுப்புகளுக்கு, உயர்நிலைகளுக்கு கீழ்க்கண்ட காரணங்களுக்காக, மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.
பாடத்திட்டத்தை விரைவாக முடிக்க.
மனிதனின் வளர்ச்சி, காந்தங்களின் கண்டுபிடிப்பு போன்ற புதிய, கடினமான பகுதிகளை அறிமுகப்படுத்த.
மாணவர்கள் சேகரித்த உண்மைகளிலிருந்து, பொதுவான கருத்துக்களை வரவழைக்க.
உண்மைகள் பற்றிய அறிவை வழங்க.
செய்யப்பட்ட அல்லது செய்யப்போகும் செய்து காட்டலை விளக்க.
முன்னால் கற்ற பாடத்தை திரும்பிப்பார்க்க, சுருக்கமாக கூற.
ஒரு தலைப்பு சார்ந்த முன் விவரங்களை தருதல்.
ஒரு அறிவியல் அறிஞரின் வாழ்க்கையைப் பற்றியோ, சில நிகழ்ச்சிகளையோ சொல்லுதல்.
எந்த விரிவுரையும் முன்னதாக திட்டமிடப்படவேண்டும். பாடப்பொருளை தேர்ந்தெடுத்தல், அதை கற்பிப்பதன் குறிக்கோள்கள், விரிவுரையின் அமைப்பு, ஒவ்வொரு நிலையிலும், முடிவிலும் சுருங்கக்கூறல், இவை அனைத்தும் திட்டமிடப்பட வேண்டும்.
குறிப்பு எடுத்தல்
இம்முறையை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு விரிவுரை நிகழும்போது, குறிப்பெடுக்க பயிற்சி கொடுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்களின் வினாக்கள் விரிவுரையின் முடிவில், மாணவர்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும். அவ்வகை கேள்விகளுக்கு, ஆசிரியர் எந்த தயக்கமுமின்றி விடையளிக்க வேண்டும். இந்த வழியில், ஆசிரியர், மாணவர்கள் பாடத்தை புரிந்து கொண்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
முடிவுரை
விரிவுரை முறை, மாணவர்களுக்கு செய்திகளை வழங்க பயனுள்ளது. மாணவர்களின் கருத்துக்களை பெற வாய்ப்பின்மையால், இது குறைவான, பயனுள்ள கற்பித்தல் முறையாகும். அறிவியல் பாடத்தில் ஆய்வுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் செயல்கள் ஆகியவை, ஆசிரியருக்கு விரிவுரை வகுப்பின் பலனை அறிந்துகொள்ள பயன்படும்.
Comments
Post a Comment