Child Centered Curriculum (Tamil)
குழந்தை மையக் கலைத்திட்டம்
மாணவர் மையக் கலைத்திட்டத்தில் ஒரு வடிவமைப்பாக குழந்தை மையக் கலைத்திட்டத்தினைக் குறிப்பிட முடியும். அந்தவகையில் குழந்தை மையக் கலைத்திட்டம் என்பது குழந்தைகள் தமது ஆர்வங்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப இயற்கை சூழலில் பல்வேறு செயல்களில் திறன்களையும் மேம்படுத்தித் கொள்வதற்கு வழிவகுக்கின்ற கலைத்திட்டமாகும். அதாவது குழந்தை மையக் கலைத்திட்டத்தில் குழந்தைகள் தங்களது உடலையும் அனைத்துவித உணர்வுகளையும் பயன்படுத்தி மனதாலும் உடல்ரீதியாகவும் சுறுசுறுப்பாக அவர்கள் உலகத்தை ஆராய்ந்து கற்றுக் கொள்கிறார்கள். மேலும் குழந்தைகளின் உள்ளார்ந்த தேவைகள் மற்றும் ஆர்வங்களை மையப்படுத்தியதாக கற்றல் இடம் பெறுவதை குழந்தை மையக் கலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
குழந்தையின் மனப்பாங்குக்கு ஏற்றவாறும் கற்பிப்பவரின் திறன்களையும் வளர்ப்பது குழந்தை மைய கற்றலின் நோக்கமாகும். அதாவது குழந்தையானது தானாகவே கருத்துக்களை அல்லது திறன்களை தன் திறனுக்கும், கற்றல் வேகத்திற்கும் ஏற்ப கற்று முன்னேற்றுவதற்கும் மற்றும் கற்பித்தலை விட கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து ஆசிரியர் ஒரு வழிகாட்டியாகவும் வாய்ப்புகளை அளிப்பவராகவும் மற்றும் மேற்பார்வையாளராகவும் விளங்குவதே குழந்தமையக் கலைத்திட்டத்தின் அடிப்படையாகும். ஜனநாயக சிந்தனை, ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்த தனிநபராகக் கருதுவதால், கல்வித்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு குழந்தையும் தனிக்கவனமும் உரிய வாய்ப்புகளும் பெற்று தனது தனித்திறன்களையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதே குழந்தைமையக் கல்வியாகும். இதனடிப்படையில் ஜோன்டூயி, பிளேட்டோ, மகாத்மா காந்தி, தாகூர், பாலோ ஆகியோர் குழந்தைமையக் கலைத்திட்டம் குறித்து கூறியுள்ளனர்.
பெச்டலோசி, புரோபல் என்பவர்களது கருத்துப்படி குழந்தைகள் சமூகப் பணிகள் மற்றும் சமூக சேவைகளில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலமாக ஆத்ம ஞானம் பெற முடியும் என குறிப்பிப்பிட்டனர். மேலும் கற்றலில் குழந்தையின் இயல்பான தன்மைகளை அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு போதனை முறையை தெரிவு செய்ய முடியும் என பார்கர் வலியுறுத்துகிறார். மேலும் குழந்தைகள் சொல் முறைமையினைப் பயன்படுத்தியும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்களிடம் கற்கும் பழக்கத்தினை வளர்ப்பதற்கு குழந்தைகளை உரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதை ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும். ருசோவின் கருத்துப்படி இயற்கையில் இருந்த வயது வந்தவர்களிடம் இருந்து எந்தவொரு தலையீடும் இல்லாமல் இயற்கையான முறையில் கற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், அவரின் தனிப்பட்ட தன்மை மதிக்கப்பட வேண்டும், நிலை மற்றும் ஆர்வத்தை கல்விக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும், குழந்தையின் புலன் உணர்வு மற்றும் இயற்கை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார். குழந்தை மையக்கலைத்திட்டத்தில் குழந்தையின் தனித்தன்மையும் ஆளுமையும் ஒத்திசைவாகவும் முற்போக்காகவும் தொடர்ந்து வளர்ந்து கொண்டெ இருக்கும் என்றும் குமருப்பருவம் அதிகமான செயல்திறன்களோடும் விவேகத்தோடும் இருப்பதால் இந்தப் பருவம் கருத்தியல் படிப்பிற்கு ஏற்றது என்று குழந்தை மையக் கலைத்திட்டம் வலியுறுத்துகிறது.
குழந்தை மைய கற்றல் பண்புகள்
குழந்தை மைய கற்பித்தல் மாணவர்களை சுறுசுறுப்பாக வைக்கின்றன.
குழந்தையின் தேவைகள் மற்றும் ஆர்வங்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
பழங்கால கற்பித்தல் முறை பின்பற்றப்படுவதில்லை.
குழந்தை மைய கற்றலில் திறன் சார்ந்த கற்பித்தலின் போது குழந்தைகள் எவ்வாறு சிந்திப்பது, பிரச்சினையை தீர்த்தல், சரியாக கற்றலை மதிப்பிடுதல், விளக்கத்தை பகுப்பாய்வு செய்தல், அனுமானத்தை உறுதி செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
குழந்தைகளின் இயல்பூக்கங்களையும் தற்போதைய மனப்போக்குகளையும் வைத்தே கல்வியை தொடங்குவது முக்கியம்.
குழந்தையின் வளர்ச்சி நிலை, ஆர்வங்கள், உள்ளார்ந்த திறன்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப கல்விச் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
கல்விச் செயன்முறைகள் யாவும் குழந்தையையும் அதன் தனித்தன்மையையும் மையமாக வைத்தே அமைத்தல் வேண்டும்.
குழந்தை மையக் கலைத்திட்டத்தில் குழந்தையின் தனித்தன்மை மதிக்கப்படுகிறது. குழந்தையின் தனிப்பட்ட மற்றும் சமூக குணங்களை நன்றாக வளர்ப்பதற்கு உதவுகிறது.
குழந்தைகள் தாம் விரும்பியவாறு கற்கவும் தமது படைப்பாற்றல்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரப்படுகின்றன.
குழந்தை மைய கலைத்திட்டத்தின் நன்மைகள்
சுதந்திரம்:- குழந்தை மைய கலைத்திட்டத்தில் குழந்தைகளுக்கு மற்றும் கற்றலில் சுதந ;திரம் இருக்கும். புத்தகங்கள் மூலம் நேரடியாக தகவல் பெறுவதை விட கண்டறிதல் முறை மூலம் தகவல் பெற குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கப்படுகின்றது. கற்பதற்கும் உருவாக்குவதற்கும் குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கப்படுகின்றது.
சுய நடவடிக்கைகள்:- குழந்தை மைய கலைத்திட்டமானது சுய நடவடிக்கைகளை தூண்டுகின்றது.
உதாரணமாக நாடகங்கள், விளையாட்டுக்கள், பாடல்கள்
தன்னியல்பான வளர்ச்சி செயன்முறை:- குழந்தை பாடத்தில் தன் சொந்த வேகத்தில் முன்னேற்றமடைய உதவும், தானாகவே சிந்தித்து செயல்படும் திறனை குழந்தைகள் தானாகவே பெற்றுக் கொள்ள இவ் குழந்தை மைய கலைத்திட்டம் உதவுகின்றது.
ஆர்வம் மற்றும் தேவையில் முன்னேற்றம்:- குழந்தையின் தேவையை ஆர்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றது. குழந்தையின் உடல், சமூக, தார்மீக மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு குழந்தை மைய கலைத்திட்டம் உதவுகின்றது.
கல்வி அனுபவம் சார்ந்தது :- குழந்தை மையக் கலைத்திட்டமானது பாடங்களை அனுபவம் சார்ந்ததாகவும் குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் அமைக்கப்படுகின்றது. ஆகவே அனுபவ சார்ந்த கல்வியை வழங்க குழந்தை மையக் கலைத்திட்டம் உதவுகின்றது.
குழந்தை மையக் கலைத்திட்டத்தின் சவால்கள்
குழந்தை மையக் கலைத்திட்டத்தின் பலவீனங்களில் முக்கியமானது தவறான புரிதலுக்கான சாத்தியக்கூறாகும். அதாவது குழந்தையின் ஆர்வம் மற்றும் தேவைகள் பொருத்தமற்றதாக இருக்கும் போது குழந்தை தவறான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும்.
ஆசிரியர்கள் சில சமயங்களில் குழந்தை வளர்ச்சியின் மாறுப்பட்ட கருத்துகளுக்கு ஏற்ப தயாராக இருப்பதில்லை.
பாடசாலையை நிறுவுவதற்கான நோக்கங்கள் குழந்தை மைய கலைத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்றது. செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பது கடினம்
பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை செயற்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் பாடங்கள் புறக்கணிக்கப்படுதல்.
பாடசாலை மதிப்புகள் புறக்கணிக்கப்படுதல்.
குழந்தைகளின் தேவைகளை முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது.
குழந்தை மைய கலைத்திட்டமானது உளவியலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதால் பாடப்பொருள் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படாமை
குழந்தைகளின் ஆர்வம் முக்கியத்துவம் உடையதாகும் நிலையானதாகவும் இருக்காது. ஏனெனில் ஆர்வம் மாறக்கூடியது மற்றும் தற்காலிகமானது.
ஆசிரியர் - மாணவர் இடைவினை தொடர்பு குறைவாக காணப்பட வாய்ப்புண்டு.
இக்கற்றலில் ஆசிரியர் வகிபாகம் குறைந்த மட்டத்தில் காணப்படும்.
Comments
Post a Comment