Realism in Education (Tamil)
கல்வியில் புற உண்மைக் கொள்கை
மனம் சார்ந்த கருத்துகளே உண்மை என்று கருத்தியல் கொள்கையினரும், சடப்பொருளின் அடிப்படையிலான புற உலகமே உண்மை என்று இயற்கை கொள்கையினரும் ஒருமைக் கொள்கைளின் இரு துருவங்களாக இருக்கும் நிலையில், மனம், சடப்பொருள் ஆகிய இரண்டுமே உண்மையின் அடிப்படை என்ற இருமைக் கொள்கையை ஆதரிப்பது புற உண்மைக் கொள்கை அல்லது “காட்சிப்பொருள் உண்மைக் கொள்கை” என்றழைக்கப்படுகிறது. அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு இடைப்பட்டக் காலத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட 17-ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏதும் காணப்படாமல், வீழ்ச்சியடைந்த நிலையிலேயே புற உண்மைக் கொள்கை காணப்பட்டது. ஜான் லாக் (கி.பி. 1690-1781) இக்கொள்கைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி தத்துவ ஆய்வில் எதையும் ஆராய்ந்தறியும் மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்தார். ஹெர்பார்ட் (Herbert), ஸ்பென்சர் (spencer) ஆகியோர் புற உண்மைக் கொள்கையின் முக்கிய ஆதரவாளர்களாகத் திகழ்ந்தனர். புற உண்மைக் கொள்கைக்கருத்துகள் அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்தே (கி.மு. 383-323) அறியப்பட்டுள்ளன. அரிஸ்டாட்டில் மனித உடலை பருப்பொருளாகவும், மனத்தை வடிவமாகவும் கருதுகிறார்.
புற உண்மைக் கொள்கை- பொருள் மற்றும் வரையறை
உள்ளம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் புற உலகில் உள்ள பொருள்கள் தத்தம் தனித்தன்மையோடு இருந்துவரும் என்று கூறும் தத்துவப் பிரிவே புற உண்மைக் கொள்கையாகும். “இயற்கை உலகம் நமக்கு எவ்வாறு காட்சியளிக்கின்றதோ அதை அப்படியே ஒப்புக்கொள்ளும் அணுகுமுறைதான் புற உண்மைக் கொள்கையாகும்” “நமது புலன்காட்சி அனுபவங்களுக்குப் பின்னும், அவற்றுக்கிணையாக ஒப்பவும் ஓர் உண்மை உலகம் உண்டு என்று வலியுறுத்துவதே புற உண்மைக் கொள்கையாகும்”. - ராஸ்
“மனித மனத்தைச் சார்ந்திராத புறப் பொருள் உலகம் என்பது உண்மையானதே என்று கூறும் தத்துவக் கொள்கையே புற உண்மைக் கொள்கை எனப்படும்.” -கார்டர் ஏ.குட்
புற உண்மைக் கொள்கையின் கோட்பாடுகள்
புற உலகக் காட்சிகளே மனத்தை ஆள்கின்றன. மனம் காட்சியை ஆள்வதில்லை.
பொருள்களால் நிறைந்த புறஉலகம் உண்மையானது.
புறஉலகின் பண்புகள், நாம் புலன் காட்சி வழியே உணர்வது போலவே உள்ளன.
அனுபவ அறிவே மெய்யானது.
அவரவர் பெறும் அனுபவங்களே அவரவர் மதிப்புகளைத் தீர்மானிக்கின்றன.
இயற்கை நிகழ்வுகளையே உற்று நோக்கி உண்மை அறிவைப் பெறுதல் வேண்டும்
மனிதன், சூழ்நிலை இவற்றின் இடைவினையால் தான் வாழ்க்கைத்தத்துவம், கல்வித்தத்துவம் ஆகிய இரண்டும் உருவாகின்றன.
பொருள்கள் மாறாத்தன்மையுடன் இருப்பதைப் போன்றே மதிப்புகளும் மாறாதவை.
உலகம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது.
நம் புலன்களே அறிவைப் பெறும் வாயில்கள்.
இவ்வுலகின் தோற்றத்தை நாம் உணர்ந்தாலும் உணராவிடினும் அது இருந்து கொண்டேதான் இருக்கும்.
புற உண்மைக் கொள்கையின் கல்விக் குறிக்கோள்
கல்வியின் அனைத்துக் கூறுகளும் புற உலக வாழ்க்கையுடன் தொடர்புடையவை என்று இக்கொள்கை கருதுகிறது.
இக்கொள்கையின் முக்கிய நோக்கமே அறவொழுக்கம் ஆகும்.
ஹெர்பார்ட் அறவொழுக்கத்தின் படிநிலைகளாக அகச் சுதந்திரம், முழுமை, பயனுறு தன்மை, நீதி போன்றவற்றை குறிப்பிடுகின்றார்
ஸ்பென்ஸர் என்பாரும் அறவொழுக்கத்தின் அடிப்படையாக சுய பாதுகாப்பு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் பயிற்சி, குழந்தை வளர்ப்புக்கான கல்வி, ஓய்வு நேரத்துக்கான செயல்கள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.
கல்வி என்பது வாழ்க்கையில் ஒருசில வாய்ப்புகளைத் தூண்டுவதாகவும், சவால்களைச் சந்திப்பதாகவும் அமைய வேண்டும் என்று இக்கொள்கை வலியுறுத்துகிறது.
தொழிற் பாங்கினை நோக்கமாகக் கொண்டுள்ள கல்வியே கற்பவர்களுக்குச் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் என ஸ்பென்சர் குறிப்பிடுகிறார்.
எந்தக் கல்விச் செயலும் உடனே துலங்கும் படி எதிர்பார்க்கப்படுகிறது. இக்கொள்கையின் படி செயல்பட எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கொள்கைதான் கல்வியில் அறிவியல் அடிப்படைக்கு வித்திட்டது.
கல்வியானது, வெளி உலகச்செயல்களைக்கற்று அதைப்புரிந்து கொண்டு அதற்கேற்ப தற்கால வாழ்க்கை அமைப்பை உருவாக்கிக்கொள்ள உதவ வேண்டும் என்று இக்கொள்கை வலியுறுத்துகிறது.
புற உண்மைக் கொள்கையின் கல்வி ஏற்பாடு
அறிவியல், கலை மற்றும் கலைப்பாடங்கள், அதனதன் இயல்புகளுக்காகக் கலைத்திட்டத்தில் சேர்க்கப்படாமல், கற்போரின் உண்மை வாழ்க்கை நிலையில், செய்முறை அடிப்படையில் தேவைப்படும் இயல்புகளுக்காகச் சேர்க்கப்பட வேண்டும் என்கின்றது.
கலைத்திட்டத்தில் தாய்மொழிவழிக்கல்வி, புலன்வழிக் கல்வி, தொழிற்க் கல்வி, ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றது.
இலக்கியங்கள் உலகைப்பற்றிய ஒரு முழுக்கருத்தினைப் பெறுவதற்காகவும் இணைக்கப்பட்டுள்ளன.
பொதுகல்விக்கான அனைத்து அறிவுப் பகுதிகளையும் இக்கலைத்திட்டம் தன்னுள் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
உயர்கல்வி நிலையில் தொழிற் கல்வியும் இணைக்கப்பட்டுள்ளது.
அறிவியல், இலக்கியங்கள், ஓவியம், இசை, மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இக்கலைத்திட்டத்தினுள் இடம் பெற்றுள்ளன.
புற உண்மைக் கொள்கையும், கற்பித்தல் முறைகளும்.
புலன் வழி அனுபவங்கள் அளிக்கப்படவேண்டும் என்று கருதுகின்றது.
ஒன்றிற்கு மேற்பட்டபுலன் வழி அறிவு கற்பித்தலுக்கும் அதன் வழி அறிவினைப் பெறுவதையும்
இக்கொள்கை பரிந்துரைக்கின்றது.
தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கும,; உண்மை நிலையிலிருந்து பருப்பொருள் நிலைக்கும் கருத்துகளை படிப்படியாக கற்பிக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது.
தொகுப்பு முறை அல்லது விதிவரு முறையினைச் சிறந்த கற்றல் - கற்பித்தல் முறை என இக்கொள்கை கருதுகின்றன.
கோட்பாடுகளும், கருத்துகளும் அன்றாட வாழ்க்கை நிலையில் பயன்படத்தக்க நிலையினில் கற்பிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றது.
செயல்முறைகள் தொகுப்பாக இல்லாமல், பகுப்பாக இருக்க வேண்டுமென உரைக்கின்றது.
கற்றலை வலுப்படுத்தக் கற்பிக்கப்படும் கருத்துகள் வாழ்க்கையில் செயல்படுத்தப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
புற உண்மைக் கொள்கையும் ஆசிரியரும்
பாடப் பொருள்களைப் புறவயத்திலிருந்தும், பாடச் செயல்களை அகவயத்திலிருந்தும் நோக்கிக்
கற்பிக்கும் திறனை ஆசிரியர் பெற்றிருக்க வேண்டும்.
பாடப் பொருள்களின் மதிப்புகளையும், இன்றியமையாமைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தூண்டல் - துலங்கல் முறைகளைக் கற்பித்தலில் கையாள வேண்டும்.
அறிவியல் கற்பிக்கும் முறைகளைப் பற்றிய தெளிந்த கருத்துகள் கொண்டவராக இருக்க
வேண்டும்.
பரிசோதனைகள் நிகழ்த்தும் மனப்பாங்கு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
குழந்தைகளிடம் காணப்படும் பேராற்றலில் நம்பிக்கை கொண்டவராகவும், அவர்களின்
செயலாக்கம் நிரம்பிய உள்ளத்தினை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
பெரிதும் நலம் பயக்கும் ஆசிரியருடைய அறக்கல்வி இயல்பான பின்விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைத்தல் வேண்டும்.
Comments
Post a Comment