Vygotsky’s Socio - Cultural Theory (Tamil)
வைகாட்ஸ்கியின் சமூக - கலாச்சாரக் கோட்பாடு அறிமுகம் சமீபகாலத்தில் குழந்தை வளர்ச்சி துறையில் மாணவர்களின் கலாச்சார சூழல் ( Cultural Context ) பற்றிய ஆய்வுகள் வேகமாக அதிகரித்துள்ளன. மாறுபட்ட கலாச்சாரத்தை பின்பற்றுபவர் ஒரே கலாச்சாரத்தைச் சார்ந்த வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய ஆய்வுகள், வளர்ச்சி வழிமுறைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலில் உள்ளவருக்கு மட்டும் பொருந்துமா என்பதைப் பற்றி இவ்வாய்வுகள் ஆழ்ந்த கருத்துக்களை தருகின்றன ( Goodnow, 2010). அவற்றில் சில, வைகாட்ஸ்கியின் கோட்பாட்டின்படி, சமூகத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளுதல் சிந்தனை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதாகும். ஒரு தனிப்பட்ட குழந்தையைப் பற்றி கருதவில்லை. ஆயினும் சமுதாயத்தடன் தொடர்பு கொள்ளல் மூலம், குறிப்பாக வயது வந்தோருடன் உருவாக்கப்பட்ட குழந்தையை கருத்தில் கொண்டு கவனம் செலுத்துதல். குழந்தை தனக்குத்தானே பேசுவதைவிட மற்றோருடன் கலந்து பேசுவதை விரும்புகிறது. வெவ்வேறு கலாச்சாரத்தை சார்ந்தவர்கள் வெகுவாக மாறிய முறையில...