பாடசாலைக்கு வெளியே கற்றலின் நோக்கம்
அறிமுகம்
பாடசாலைக்கு வெளியே கற்றல் என்ற கருத்து 1987-ல் லாரா ரெஸ் நிக்கால் என்பவரால் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் அடங்கிய, அடங்காத பள்ளிக்கு வெளியே ஏற்படும் கற்றல் அனுபவங்கள் இடம் பெறுகின்றன. பள்ளிக்கு வெளியே கற்றல், கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், மாணவர்களின் சிறப்பு திறன்களை வளர்க்கவும், குழுக்களை வலுப்படுத்தவும், கல்வியில் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கவும், உண்மை உலகில் மேலும் கற்கக்கூடிய வாய்ப்புகளை உண்டாக்குகிறது என அவர் சுட்டிக் காட்டுகிறார். பள்ளிக்கு வெளியே கற்றல் என்பது பாடசாலையின் நிர்வாகத்தால் செய்யப்படுவது அல்ல. பாடசாலைக்கு வெளியே கற்றல், சமூக அங்கத்தினர்களாக இருக்கும் அருங்காட்சியகம், விளையாட்டுதிடல்கள், உதவும் நிறுவனங்கள் இவற்றால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடை விடுமுறை வகுப்புகள், கலை கற்பித்தல், விளையாட்டு நிகழ்ச்சிகள், வெளிப்பயணங்கள் போன்றவை பாடசாலைக்கு வெளியே கற்றலுக்கு உதவுகின்றது.
பாடசாலைக்கு வெளியே கற்றலுக்கு சில உதாரணங்கள்
• வீட்டுப்பாடம், வீட்டுப்பாட குழுக்கள்
• கலந்து படித்தல் மற்றும் விரிவான பாடத்திட்டம்
• பெற்றோர், முதியோர் மற்ற மாணவர்கள் மேற்பார்வை செய்தல்
• குடிமகனாக, சமூக சேவை செய்தல்
• பாடசாலை நாட்களிலோ, வார இறுதியிலோ தம் பகுதியில் செய்யும்
செயற்பாடுகள்
• பபாடசாலைக்கு வெளியே கல்வி, சிறப்பு திறன்களை கண்டறியவும்,
வளர்க்கவும் ஒரு வாய்ப்பு என கண்டறியப்பட்டுள்ளது.
கற்றலில் உற்று நோக்களின் முக்கியத்துவம்
உற்று நோக்கி (பார்த்து) கற்றல் என்பது மற்றவரின் நடத்தையை கவனிப்பதன் மூலம் நிகழ்கிறது. அது பல வழிமுறைகளைச் சார்ந்த பல வடிவங்கள் கொண்ட சமூக கற்றல் முறையாகும். மக்களிடையே இதுபோன்ற கற்றல் நிகழ எந்த வலுப்படுத்துதலும் தேவைப்படாது. ஆயின் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர் போன்றோரின் தொடர்பு தேவை. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் உயர்நிலையில் இருப்பவர் அல்லது, ஆளுமை உள்ளவரே மாதிரியாகிறார்.
பாண்டுராவின் சமூக அறிவு சார்ந்த கற்றல் கருத்தின்படி, உற்றுநோக்கி கற்றல் நடத்தையை பல வழிகளில், நல்ல அல்லது கெட்ட விளைவுகளுடன் பாதிக்கும். அது ஒருவருக்கு முழுவதும் மாறுபட்ட நடத்தையை கற்பிக்கலாம். அது கற்றலில் நடத்தை மாற்றம் ஏற்படும் அளவினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
1. யதார்த்தமான கற்றல்
மாணவர்கள் கவனித்து கற்றலை மற்றவர்களின் செயலை கவனிக்கவும், அதை பயன்படுத்தி சில வழிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை நாமாகவே எவ்வாறு செய்யலாம் என அறிய உதவுகிறது.
2. பயிற்சி பெறுதல்
பயிற்சி பெறுபவராக இருக்கும்போது உற்றுநோக்குதல் மற்றும் மாதிரிகளை உருவாக்குதல் இரண்டும் நிகழ்கின்றன. பயிற்சியாளர்கள் தம் தொழிலுள்ள மேலோருடன் சேர்ந்து வேலை செய்வதன் மூலமும் தம்முடன் இருக்கும் மற்ற பயிற்சி மாணவர்களின் வேலைகளில் கவனித்தல், மதிப்பீடு செய்தல் மூலமும் தம் திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர்.
3. சக உடன்பயிலும் மாணவர்களின் தாக்கம்
பலன் அளிக்கக்கூடிய, வலுப்படுத்தக்கூடிய உடன் பயிலும் மாணவர்களில் மாதிரிகள் இருக்கும்போது கவனித்து கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சக மாணவர்கள் எப்போது கற்றலை அதிகரிக்கின்றனர். மாணவர், தம் போன்றவர்களின் நல்ல நடத்தைகளை கவனித்து அதை தாமும் செய்ய முயல்கின்றனர்.
4. கலாச்சார மாறுபாடுகள்
குழந்தைகள் விவரங்களை அறிய வாய்மொழி வேண்டுகோள்கள் இன்றி கவனித்தல் மூலம் மட்டுமே எந்த அளவுக்கு செய்திகளை கற்றுக் கொள்கின்றனர் என்பதில் கலாச்சார வேறுபாடுகளை காணலாம்.
பாடத்திட்ட கற்றலை மாணவர் வசிக்கும் பகுதிக்கும், வகுப்பறைக்கும் வெளியே நீட்டிப்பு செய்தல்
வகுப்பறைக்கு வெளியே கற்றலை, தொடர்ந்து வளரக்கூடிய கல்வியை வளர்க்க பயன்படுத்தலாம். இது பள்ளி விளையாடுமிடம், அவர்கள் வசிக்கும் பகுதி மக்கள், விவசாய நிலங்கள். தொழிற்சாலைகள், அறிவியல் மையங்கள், காடுகள் கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்தல் ஆகியவற்றைக் கொண்டது.
மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை மாறுபட்ட நோக்குகளில் புரிந்து கொள்ள, பாராட்ட வகுப்பறைக்கு வெளியே தக்க சூழலிலுள்ள உயர்ந்த கற்றல் செயல்களை அளிக்க வேண்டும். வகுப்பறைக்கு வெளியே ஏற்படும் அனுபவம், மாணவர்கள் தம் திறன்களை பயன்படுத்தவும், ஆராய்தல், தெளிவுபடுத்துதல் எல்லா சூழ்நிலைகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற திறன்களை பயன்படுத்த வாய்ப்பை கொடுக்கிறது.
ஆயினும், மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் செல்லும்போது கற்றல் செயல்களை கவனத்துடன் திட்டமிடுதல் உடல் நலம், பாதுகாப்புக்கு உள்ள இடையூறுகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டியுள்ளது.
வகுப்பறைக்கு வெளியே கற்றலில் உள்ள பிரச்சினைகள்
- வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கு சாதகமான உதாரணங்கள் இருந்தபோதிலும் இதில் பல முக்கிய பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.
- பெரிய மாணவர் குழுவை மேற்பார்வை செய்தல், அவர்களுக்கு தேவையான உதவியை கொடுத்தல், போன்றவற்றை திட்டமிட்டு செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள்.
- மாணவர்களும் ஆசிரியர்களும் இழக்கின்ற அன்றாட பாடங்கள், பாடசாலை கால அட்டவணையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.
- ஒரு பயனுள்ள பயணத்தை தயாரிக்க நேரம் தேவைப்படுகிறது.
- தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் இவற்றுக்கான செலவுத்தொகை.
- அப்பகுதியைப் பற்றி விவரமான அறிவு இன்மை
- மாணவர்களின் பாதுகாப்பு
இத்தகைய பிரச்சினைகள் இருந்தபோதிலும், மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே பல்வேறு பட்ட சூழல்களை ஆய்வு செய்யும் போது மிக அர்த்தமுள்ள நிலையான கற்றல் நிகழ்கிறது என்பதை மறக்கக்கூடாது. வகுப்புக்கு வெளியே கற்றல், மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருவரையொருவர் கலந்துரையாடி நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
வகுப்புக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் இருபொதுவான அணுகுமுறைகள்
(1) இடங்களைப் பற்றி கற்பித்தல்
(2) இடங்கள் பற்றிய ஆய்வு.
1. இடங்களைப் பற்றி கற்பித்தல்
- தலைப்பைப் பற்றி வகுப்பில் ஆய்வு செய்தல், ஆசிரியரின் பேச்சு, பாடப் புத்தகத்தை படித்தல் குறிப்பு எடுத்தல், வீடியோ காட்சிகளை பார்த்தல் போன்றவை.
- இடங்களை பார்வையிடல் (ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி) தலத்தில் உள்ள விவரங்களை குறித்துக் கொள்ளுதல், சில தல ஆய்வுகள்.
- வகுப்பறைக்கு வந்தபின் - ஒன்றுசேர்ந்து பரிசீலனை செய்தல் விளக்குதல் - இடம் பற்றிய விவரங்களை எழுதுதல்
இதுவே வகுப்பறைக்கு வெளியே கற்பிக்கும் பொதுவான முறை ஆகும். இம்முறையில் மாணவர்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், ஒரு விரிவுணர்வு செய்து, மாணவர்களை குறிப்பு எடுக்கச் செய்தல், இதில் மாணவர்களின் கருத்தை சொல்லவோ, அவர்களின் தாக்கத்தை தெரிவிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்த அணுகுமுறையில் மாணவர்கள் கவனமாக செயல் நடைபெறும் இடத்தை உற்றுநோக்கி, தாம் முன்னால் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் தகுந்த விவரிப்புகளை முன் வைத்தல் இடம் பெறுகிறது. இந்த அணுகுமுறை கற்றல் அனுபவத்தின் முக்கிய பகுதியாக வரையறை செய்யப்பட்ட வழியில் தங்கள் உதாரணங்களை காண வகை செய்கிறது.
2. கள ஆய்வு
- நேரடி கவனித்தல் மூலமோ, வகுப்பு வேலையின் அடிப்படையிலோ அல்லது மாணவர்களின் சிறப்பு ஆர்வத்தினை வழியாகவோ ஒரு பிர்சசினையை கண்டறிதல்.
- படித்தல், கலந்துரையாடல், சிந்தித்தல் மூலம் ஒரு கருதுகோளை உருவாக்குதல்.
- தம் கருதுகோளை சரிபார்க்க இடத்திற்கு சென்று தகவல்களை சேகரித்தல்
- சேகரித்த விவரங்களை ஆய்வு செய்தல், தகவல்களை வகைப்படுத்துதல்
- களத்திலிருந்து சேகரிக்க விவரங்களை பயன்படுத்தி கண்டறிதல் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை கலந்துரையாடி எழுதுதல்.
- கருதுகோளை சோதித்தல் - ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மறுத்தல்
இந்த அணுகுமுறை கற்றலில் உதாரணங்களின் அடிப்படையில் முடிவு செய்யும் வழிமுறையை பயன்படுத்துகிறது. இதில் ஒரு பிரச்சினை தீர்க்க வேண்டி உற்று நோக்கல், விவரித்தல், விளக்கமளித்தல்,ஆகியவை இடம்பெறும். மாணவர்கள், விஞ்ஞானம், வரலாறு பூகோளம் ஆகியவற்றில் பயன்படும் ஆய்வு முறைகளை பயன்படுத்துகின்றனர். இதுவே கள ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் விதிவிலக்கு அனுகுமுறை (Inductive
Approach) எனப்படும்.
வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான வாய்ப்புகள்
• மாணவர்கள் கீழ்க்கண்ட வகையான வெளி சூழல்களிலிருந்து கற்கலாம்.
• பள்ளி விளையாட்டு கூட சூழ்நிலை
• உள்ளுர் சமுதாயம்
• கிராமப்புற, இயற்கை சூழல்கள்
• நகர மையங்கள்.
வகுப்பறைக்கு வெளியே கற்பதிலுள்ள நல்ல அம்சங்கள்
வகுப்பறைக்கு வெளியே கற்றல் மாணவர்களுக்கு உடலை பயன்படுத்துதல், இடம் விட்டும் இடம் செல்தல், சுதந்திரம், ஆரோக்கியமாக உணர்தல் போன்றவை கொண்ட, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வளர்க்க உதவுகிறது.
வகுப்பறைக்கு வெளியே கற்றல் குழந்தைகளுக்கு இயற்கையான உலகுடன் தொடர்பை கொடுக்கிறது. மேலும் மாறுபட்ட (சீதோஸணம்) கால நிலைகள் (Weather) பருவகாலங்கள் இவற்றுடன் நேரடி தொடர்பை உண்டாக்குகிறது.
வெளியே விளையாடுதல், கற்றல் மாணவர்களின் இயற்கை, சுற்றுப்புறம் இவற்றைப் புரிந்து கொள்ளவும், மதிக்கவும், மனிதர்கள், பிராணிகள், தாவரங்கள், வாழ்க்கை சுழற்சி இவை ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
வெளிப்புற விளையாட்டு குழந்தைகளின் பிரச்சினை தீர்க்கும் திறனை வளர்க்கவும், படைப்பாற்றலை அதிகரிக்கவும், செய்வதுடனே அவர்களின் கற்பனைத் திறன் கண்டறியும் திறன், தயாரிப்பு நிலை இவற்றை வளர்க்க வாய்ப்புகளை அளிக்கிறது.
குழந்தைகள் வெளியே செல்லவும் மற்றும் சுற்றிப்பார்த்து ஆராய்ந்து கண்டறியவும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்து தம் உடல் திறன்களை வளர்க்கவும் தகுந்த வெளி சூழ்நிலையை தேவைப்படுகிறது.
சுறுசுறுப்பாக செயல்படுவதன் மூலம் கற்கும் குழந்தைகளுக்கு வெளி சூழல் மிக உகந்ததாக உள்ளது. மிக இளவயது குழந்தைகள் அவர்களின் மூளை, நரம்பு மண்டலம் வளர்ச்சிக்கு உதவும், உடல் மூலமும் உணர்வுகள் மூலமும் அதிகமான கற்கின்றன.
பல குழந்தைகளுக்கு, மிக இளம் வயதில் வெளியே விளையாடுதல் மட்டுமே சுதந்திரமாகவும், பத்திரமாகவும் செயல்படும் வாய்ப்பை கொடுப்பதுடன் ஆபத்துக்களை கண்டறிந்து, அவற்றை சமாளிக்கும் திறனை உண்டாக்குகிறது.
உள்ளும் வெளியிலும் தொடர்ந்து நடைபெறும் கற்றல், ஆர்வம், மகிழ்ச்சி இருக்கும் பொருள்களை திறம்பட பயன்படுத்துதல் ஆகிய திறன்களை வளர்க்கிறது.
குழந்தைகளை தொடர்ந்து வெளியே அழைத்துச் செல்பவர், அவர்கள் சூழலுடன் ஆர்வத்துடன் தொடர்பு கொள்வதால் பெறும் மகிழ்ச்சி, ஆச்சரியப்படுதல் போன்றவற்றை காணமுடிகிறது.
Comments
Post a Comment