Vygotsky’s Socio - Cultural Theory (Tamil)
வைகாட்ஸ்கியின் சமூக - கலாச்சாரக் கோட்பாடு
அறிமுகம்
சமீபகாலத்தில் குழந்தை வளர்ச்சி துறையில் மாணவர்களின் கலாச்சார சூழல் (Cultural Context) பற்றிய ஆய்வுகள் வேகமாக அதிகரித்துள்ளன. மாறுபட்ட கலாச்சாரத்தை பின்பற்றுபவர் ஒரே கலாச்சாரத்தைச் சார்ந்த வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய ஆய்வுகள், வளர்ச்சி வழிமுறைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலில் உள்ளவருக்கு மட்டும் பொருந்துமா என்பதைப் பற்றி இவ்வாய்வுகள் ஆழ்ந்த கருத்துக்களை தருகின்றன (Goodnow, 2010). அவற்றில் சில,
- வைகாட்ஸ்கியின் கோட்பாட்டின்படி, சமூகத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளுதல் சிந்தனை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதாகும்.
- ஒரு தனிப்பட்ட குழந்தையைப் பற்றி கருதவில்லை. ஆயினும் சமுதாயத்தடன் தொடர்பு கொள்ளல் மூலம், குறிப்பாக வயது வந்தோருடன் உருவாக்கப்பட்ட குழந்தையை கருத்தில் கொண்டு கவனம் செலுத்துதல்.
- குழந்தை தனக்குத்தானே பேசுவதைவிட மற்றோருடன் கலந்து பேசுவதை விரும்புகிறது.
- வெவ்வேறு கலாச்சாரத்தை சார்ந்தவர்கள் வெகுவாக மாறிய முறையில் சிந்திக்கின்றனர்.
சமூக - கலாச்சாரக் கோட்பாடு (Socio-Cultural Theory)
வைகாட்ஸ்கி (Vygotsky, 1934 - 1987), குழந்தைகள் தம் சமூக சூழலை எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதைப் பற்றியே முதன்மையாகக் கருதினார். கற்றல் என்பது படிப்படியாக குழந்தைகளுக்கு, பெற்றோர், ஆசிரியர், அக்கலாச்சாரத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் படிப்படியாக நிகழும் விளைவு என கருதினார். வைகாட்ஸ்கியின் கருத்துப்படி, சமூக கற்றல் என்பது குழந்தைகள், தற்சமயம் செயல்படுத்தக்கூடிய திறன்களுக்கும், அதிக அனுபவம்; மிக்கவர்களிடமிருந்து வழிகாட்டுதல் பெற்று செய்யக்கூடிய செயல்களுக்கும் இடையே உள்ள மேம்பட்ட வளர்ச்சி மண்டல பகுதியில் நிகழ்கிறது என்பதை வலியுறுத்தினார். தற்சமயம் உள்ள குழந்தையின் திறன், அறிவுக்கு தக்கபடி கற்பித்தலை அமைத்தல் ஆகியவை ‘சாரக்கட்டு’ (Scaffolding) வகை போதனைகளாக இருந்து வருகிறது.
Vygotsky’s Socio - Cultural Theory
குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி (Children’s Thinking Development)
சமூக கலாச்சார கோட்பாடு எனப்படும் வைகாட்ஸ்கியின் நோக்கு, ஒரு சமுதாயத்தில் நற்பண்புகள் (Values), நம்பிக்கைகள் (Beliefs), வழக்கங்கள் (Customs) திறன்கள் (Skills) எவ்வாறு மற்ற வம்சாவளியினருக்கு மாற்றப்படுகின்றன என்பதை முக்கியமாக கருதுகிறது. இவருடைய கருத்தின்படி, சமுதாயத்தில் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளல் - குறிப்பாக குழந்தைகளுக்கும், அறிவு மிகுந்த சமுதாய அங்கத்தினர்களுக்கும் இடையே நிகழும் பேச்சு, குழந்தைகள் அந்த சமுதாயத்தில் சிந்தனை, நடத்தை இவற்றை கற்றுக்கொள்ள அவசியம் தேவை என்பதாகும். வயது வந்தோரும், திறன் மிக்க சக மாணவர்களும், குழந்தைகளுக்கு, பொருள் நிறைந்த கலாச்சார செயல்களை, நன்றாக செய்ய உதவும் போது, அவர்களிடையே நடக்கும் கருத்துப் பரிமாற்றம், குழந்தைகளின் சிந்தiiயில் ஒரு பகுதியாக ஆகிறது என வைகாட்ஸ்கி நம்பினார்.
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி (Child’s Language Development)
வைகாட்ஸ்கியின் கோட்பாட்டின்படி, குழந்தைகள் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களை அடைகின்றனர். உதாரணமாக, அவர்கள் மொழியை கற்கும்போது, மற்றவர்களுடன்; உரையாடலில் பங்கு கொள்ளும் திறனை பெறுகின்றனர். மேலும் கலாச்சார திறன்களை வேகமாக கற்கின்றனர். குழந்தைகள் பள்ளியை அடையும் போது, அவர்கள் மொழி, கல்வியறிவு பிற கல்வி சார்ந்த கருத்துக்களைப் பற்றி கலந்துரையாடுவதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் தங்கள் பிரச்சினைக்கான தீர்வு, காரணங்களைப் பற்றி சிந்தித்தல் போன்ற திறன்களில் விரைவாக முன்னேற்றம் அடைகின்றனர்.
முடிவுரை
வைகாட்ஸ்கி குழந்தையின் முன்னேற்றத்தில், கலாச்சாரம், நண்பர்கள், வயது வந்தோர் இவற்றின் தாக்கத்தை வலியுறுத்துகிறார். அறிவு மிகுந்தவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், ஒரு கலாச்சாரத்தில் அடங்கியுள்ளவற்றை, சிந்திக்கும் திறன், நடந்து கொள்ளும் முறைகளை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். சமூக தொடர்புகள், குழந்தையின் எண்ணங்கள், நடத்தை இவற்றில் படிப்படியான மாற்றங்களை உண்டாக்குகின்றன. இவை ஒரு கலாச்சாரத்திற்கும் மற்றொரு கலாச்சாரத்திற்கும் இடையே மாற்றம் உள்ளதாக இருக்கும். வைகாட்ஸ்கி, தனது கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ளவர்களிடம் பெற்றோர் தம் குழந்தைகளை பலதரப்பட்ட சமூக சூழ்நிலைகளில் ஈடுபடுத்த அறிவுறுத்துகிறார். ஏனெனில் ஒவ்வொரு சூழலும், ஒரு கற்றல் அனுபவமாக கருதப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளை, அவர்களின் அப்போதைய நிலைக்கு மேல் உள்ள மக்களின் கருத்துக்களைப் பார்க்கச்செய்து, புதிய கருத்துக்களையும், எண்ணங்களையும் அறியச்செய்தல் மிக முக்கியமானது. மற்றவர்களிடம் பார்ப்பதைப் போல், தாமும் செய்து விடைகளை அறிய குழந்தைகளை ஊக்குவிப்பது, கட்டளைகளைக் கேட்டு, ஒரு குழுவின் பகுதியாக செயல்படுதல் ஆகியவை அவர்களின் தகுதியை விரிவு செய்ய உதவும். வைகாட்ஸ்கியின் கருத்துக்கள் சரி எனில், வளர்ச்சியானது இறப்பு வரை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதால், பெற்றோர் தாமும், கற்றலுக்கும், வளர்ச்சிக்கும் ஆன வாய்ப்புகளை எதிர்கொள்ள விரும்புவர்.
Comments
Post a Comment