Curriculum for 21st century, challenges and Solutions (in Tamil)
21 ஆம் நூற்றாண்டிற்கான கலைத்திட்டமும் அதன் சவால்களும், தீர்வுகளும் அறிமுகம் கலைத்திட்டம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு வாழ வழிகாட்டுகின்ற கல்வியின் ஒழுங்கமைப்பாகும். பாடசாலையும் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் நிறுவனமாக காணப்படுகிறது. ஆகவே இலங்கை பாடசாலைக் கலைத்திட்டமானது 21ஆம் நூற்றாண்டிற்கான தொழிற்படையினை உருவாக்குவதற்கான போதிய தகைமைகள் வழங்குவதன் ஊடாக உலக சந்தைக்கு பொருத்தமான வினைத்திறனான மனித வளத்தை உருவாக்குவதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தின் பங்களிப்பு அதன் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது. இலங்கை பாடசாலைகளில் காணப்படும் கலைத்திட்டம் கலைத்திட்டம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு வாழ வழிகாட்டுகின்ற கல்வியின் ஒழுங்கமைப்பாகும். அந்தவகையில் பாடசாலையும் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் நிறுவனமாக காணப்படுகிறது. மேலும் கல்வி இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக அமைவதே பாடசாலை கலைத்திட்டமாகும். கோட்பாட்டும் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிம...