Lesson Plan - Geography (in Tamil)
பாடத்திட்டமிடல் - புவியியல்
1. திகதி :.......
2. பாடம் : புவியியல்
3. தரம் : 7
4. பாடவேளை : 1
5. நேரம் : 8.40 – 9.20
6. பாட அலகு : இயற்கை இடர்களும் அனர்த்தங்களும்.
7. பாட விடயம் : அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தல்.
8. மாணவர் தொகை : 20
9. தேர்ச்சி : வாழ்வின் சவால்மிக்க சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள உதவும் சிறப்பான உயிர்ப்பாதுகாப்பு திறன்களை பயன்படுத்துவார்.
10. தேர்ச்சி மட்டம் : இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் விதம் தொடர்பான தகவல்களை முன்வைப்பார்.
11. நடத்தைசார் நோக்கங்கள்
அறிகையாட்சி நோக்கங்கள
- மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன? என்பது தொடர்பில் விளக்குவர்.
- மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவத்தின் மூன்று கட்டங்களை பெயரிடுவர்.
- மாணவர்கள் அனர்த்த நிலமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ கட்டங்களுக்கமைய பட்டியல்படுத்துவர்;.
உளவியக்க ஆட்சி நோக்கங்கள்
- மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவ கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அனர்த்த நிலமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வகிபாகமேற்று நடித்துக்காட்டுவார்.
மனவெழுச்சியாட்சி
- மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மூலம் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புக்களை இயலுமான அளவு குறைக்கலாம் என ஏற்றுக்கொள்வார்.
12. கற்பித்தல் முறைகள் கலந்துரையாடல் முறை, குழுமுறை, வினாக்கேட்டல்.
13. கற்பித்தல் துணைச்சாதனம் :
அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன?,
அனர்த்த முகாமைத்துவத்தின் பிரதான கட்டங்களை உள்ளடக்கிய சுவரொட்டி, அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிப்படுத்தும் காணொளி
படி – 1
பாடப்பிரவேசம்
மாணவர்களிடம் அனர்த்த நிலைமைகளின் போது உஙகளை பாதுகாக்க நீங்கள் எவ்வாறான நடவடிக்கைளை கையாள்வீர்கள் என வினாக்களை வினவி கலந்துரையாடி பாடவிடயத்துடன் தொடர்புபடுத்துவார்.
படி – 2
மாணவர்களை குழுச்செயற்பாட்டில் ஈடுபட வழிப்படுத்துவார்.
அறிவுறுத்தல் படிவம்
- வகுப்பில் உள்ள மாணவர்களை 5 பேர் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்படுவார்.
- ஓவ்வொரு குழுவிற்கு வழங்கப்படும் அனர்த்தங்களுக்கு பொருத்தமான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை, அனர்த்த முகாமைத்துவ கட்டங்களுக்கமைய வகுப்பறையில் குழுவாக கண்டறிய வழிப்படுத்துவார்.
- ஒவ்வொரு குழுவிற்கும் செயற்பாட்டிற்கு 4 நிமிடங்களும் முன்வைப்பிற்கு 3 நிமிடங்களும் வழங்கப்படும்.
செயற்பாட்டுப்பத்திரம்
குழுக்கள் |
வழங்கப்படும் செயற்பாடுகள் |
குழு 1 |
வரட்சிக்கு பொருத்தமான முன்னாயத்த நிலை, பதிலிறுத்தல் நிலை மற்றும் மீண்டெழும் நிலை ஆகிய படிகள் தொடர்பில் விளக்குவர் |
குழு 2 |
வெள்ள அனர்த்தத்துக்கு பொருத்தமான முன்னாயத்த நிலை, பதிலிறுத்தல் நிலை மற்றும் மீண்டெழும் நிலை ஆகிய படிகள் தொடர்பில் விளக்குவர் |
குழு 3 |
நிலநடுக்கத்திற்கு பொருத்தமான முன்னாயத்த நிலை, பதிலிறுத்தல் நிலை மற்றும் மீண்டெழும் நிலை ஆகிய படிகள் தொடர்பில் விளக்குவர் |
குழு 4 |
மாணவர்கள் அனர்த்த நிலமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வகிபாகமேற்று நடித்துக்காட்டுவார்.. |
படி – 3
படி 2 இல் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட குழுச்செயற்பாடுகளை முன்வைக்க சந்தர்ப்பமளிப்பார். ஒவ்வொரு குழுவும் முன்வைத்த பின்பு அதிலுள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி, சிறப்பாக செயற்பட்ட மாணவர்களை பாராட்டி, ஏனைய மாணவர்களினது கருத்துக்களையும் கேட்டறிந்து மாணவர்களுக்கு இது தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குவார்.
படி – 4
மாணவர்களிடம் அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன? அதன் பிரதான கட்டங்கள், அனர்த்த முகாமைத்துவ கட்டங்கள் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களிடம் வினாக்களை வினவி பாடச்சுருக்கத்தை மேற்கொள்வார்.
படி – 5
பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமான விடை தருக.
- அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன ?
- அனர்த்த முகாமைத்துவத்தின் பிரதான 3 படிகளையும் தருக.
- சூறாவளி ஏற்பட முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைளைக் கூறுக?
- இடி மின்னல் அனர்த்த நிலமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கூறுக?.
Comments
Post a Comment