Sociological Bases of Curriculum (Tamil)
கலைத்திட்ட உருவாக்கத்தில் சமூகவியலின் பங்களிப்பு அறிமுகம் இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் அறிவுப் பொருளாதார உலகிலே சவால்களை எதிர் கொண்டு வாழ்வதற்கு கல்வி இன்றியமையாததாகும். கல்வியின் வெற்றி தோல்வி சிறந்த கலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் தத்துவவியல் சமூகவியல் உளவியல் என்பன செல்வாக்கு செலுத்துகிறது. அவற்றில் சமூகவியலின் செல்வாக்கு அளப்பெரியது. சமூகவியல் என்பது சமூக நடத்தை அதன் தோற்றம் வளர்ச்சி அமைப்பு இசமூகத்தின் ஆய்வு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். கல்வியில் சமூகவியல் என்பது ஒரு கிளையாக கருதப்படுகிறது. கலைத்திட்டத்தினை வடிவமைக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து சமூகம் அதன் சொந்த எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாணவனும் பாடசாலைக் கல்வியை தொடரும் போதும் நிறைவு செய்த பின்னரும் சமூகத்துடன் இணங்கி வாழ வேண்டும். “மனிதன் ஒரு சமூக விலங்கு” என்ற அடிப்படையில் அவன் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். கலைத்திட்டமானது பாடசாலையில் மாணவர்களை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கான திறன் மனப்பாங்கை கட்டியெழுப்ப வேண்டும். கலைத்திட்டத்தை உருவாக...