Philosophical Bases of Curriculum (Tamil)



கலைத்திட்ட உருவாக்கத்தில் தத்துவத்தின் பங்களிப்பு


அறிமுகம்

கல்வி இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக அமைவதே கலைத்திட்டமாகும். ஒரு புறம் கோட்பாடுகளையும் மறுபுறம் நடைமுறைப் பரிமாணங்களையும் கொண்டமைந்த இயங்கு வடிவமாகக்கலைத்திட்டம் காணப்படுகிறது.

அதே போல் முறைப்படி அலசி ஆராயந்து இப்பேரண்டத்தின் இறுதி உண்மைத் தன்மையைக் கண்டறிய முற்படுவதே தத்துவமாகும். பொருளின் உண்மைத் தன்மைகளை அலசி ஆராய்ந்து சில பொதுவான கோட்பாடுகளையும் கருத்துக்களையும் அடைய முயற்சிப்பதோடு அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் ஒரு தத்துவாதி போல் செயற்படுகின்றனர். ஒரு பொருளின் தோற்றம் மதிப்பைத் தவிர்த்து அதன் உன்மையான மதிப்பைத் தேடுதலே தத்துவமாகும். சொல் பொருள்படி தத்துவமானது கிரேக்கச் சொல்லான பிலோசபி  எனும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது. இதன் பொருளானது ஞானத்தின் பால் வேட்கை கொண்டிருத்தல் ஆகும். 

கலைத்திட்டத்தில் தத்துவவியலானது தனது கொள்கைகளின் ஊடாக கலைத்திட்டத்தை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் இலட்சியவாதம், உண்மைவாதம், பயன்கொள்வாதம் மற்றும் இருத்தியல்வாதம் போன்ற தத்துவங்கள் கலைத்திட்டம் ஒன்றினை கட்டியெழுப்புவதில் இக்கொள்கைகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பாக இச்செயற்றிட்டம் ஆராயப்படுகிறது. உலகம் முழுவதும் காணப்படுகின்ற வகுப்பறைகளில் இந்த கல்வி தத்துவ அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கல்வி தத்துவங்களானது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எதனை கற்பிக்க வேண்டும் மற்றும் கலைத்திட்ட அம்சங்கள் மீது வெகுவாக கவனம்  செலுத்துகின்றது. மாறிவரும் சமுதாயத்தில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு பரிசோதனை முறைகளை பயன்படுத்தி உண்மைகளை பெற்றுக்கொள்ள இக்கலைத்திட்டம் உதவ வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் இலட்சியவாதத்தின் பங்களிப்பு 

அறிவின் திறன் பெருகும் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம், சிந்தனைவாதிகளின் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது. மரபு வழி கல்விக் கோட்பாடுகளில் இலட்சியவாதமும் அடங்குகின்றது. கல்வியில் இலட்சியவாதமும் என்கின்ற சிந்தனை எம்முடைய தத்துவ உலகிற்கு மிகப்பொருத்தமானது. இது கல்வி உலகில் மட்டுமல்லாமல் வாழ்வியலிலும் தனது கருத்துக்களை பதிக்கும் உயர்ந்த தத்துவமாகும். இவ் இலட்சியவாத எண்ணக்கருக்களுடனும் கலைத்திட்டத்துடனும் சோக்கிரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில் உட்பட பலர் பங்களிப்பு செய்துள்ளனர்.

இப்பிரபஞ்சம் ஆன்மாவினால் ஆக்கப்பட்டுள்ளது என்று கூறும் இலட்சியவாதம் இவற்றை அறியும் திறன் மனதிற்கு உண்டு என கூறுகின்றது. ஒரு மனிதனை இயக்கும் சக்தி மனதிலேயே ஊற்றெடுக்கின்றது. எனவே மனதிலே சிந்தனைகளை குவிவுபடுத்தி அதனூடாக உடலையும் செயற்படுத்துகின்ற வழிமுறையை இலட்சியவாதம் முன்மொழிகின்றது. உண்மை, அழகு, நன்மை ஆகிய மூன்று விடயங்களையும் ஆன்மீகப் பெறுமானமுள்ள விடயங்களாக இலட்சியவாதம் நோக்குகின்றது. எனவே பிளேட்டோவின் சிந்தனையில் உதித்த சிறிய கல்வி மனிதரை பண்புள்ளவராயவும் ஞானமிக்கவர்களாக ஆக்கும் கல்வியாகும். இத்தகைய
கருத்துக்கள் இன்றைய கல்விக் கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் மிளிர்வதைக் காணலாம்.

சிந்தனைகளை குவிக்கும் மையமாக கல்வி விளங்குகின்றது. கல்வியானது ஆன்மீகத் தேவை என்றும் பிள்ளையின் பிறப்பிலிருந்து ஏற்படும் மன உந்துதல்களை வழிப்படுத்தி சரியான முறையில் வாழ்க்கைப் பாதையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமாக பிள்ளை தன்னுடைய ஆன்மாவை அறிய உதவுதால் அக்கல்வி சிறந்த முறையில் புகட்ட வேண்டும். எனவும் இலட்சியவாதம் கூறுகின்றது. இலட்சியவாதத்தில் கல்வியின் அடிப்படை நோக்கம் தன்னை உணர்ந்து கொள்வதுடன் ஆன்மீக நடத்தையை தூண்டுவதாகவும் அமைகின்றது. அவ் அடிப்படை நோக்கத்தை அடையும் வழிகளாக 02 வகையான நோக்கங்களை இலட்சியவாதம் முன்வைக்கின்றது. அவையாவன:

  • தனிநபருடைய நல்வாழ்க்கை
  • சமூக நன்மை
இவற்றின் அடிப்படையில் கல்வியானது பிள்ளைகளினுடைய  உயர்வு, நடத்தையை நோக்கிய ஆழமான அகக்காட்சியை மையப்படுத்திய முன்னெடுப்பு இலட்சியவாதத்தில் காணப்படுகின்றது. நமது தற்கால கல்விச் சிந்தனைகளிலும் இவற்றை அடியொட்டியதாக கல்வி நோக்கங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவ்வகையில் தனிமனித வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாவன:

  • ஒழுங்கு
  • கட்டுப்பாடு
  • சிறிய வாழ்க்கைக்கு பிள்ளைகளை தயார்படுத்துவதுடன் சுக வாழ்வுக்குஆயத்தப்படுத்தல்.
  • அறிவைத் தேடும் ஆர்வத்தையும் விமர்சிக்கும்  மனப்பாங்கையும் விருத்தி செய்தல்.
  • சூழல், காலம், மனோபாவம், திறமை என்பவற்றிற்கு ஏற்ப வேலைவாய்ப்புக்களை வழங்குதல்.
  • அறநெறிக்கு ஏற்பவும் ஒழுக்கநெறிக்கு அமைவாகவும் ஒழுங்குப்படுத்தும்
  • வாழ்க்கையை அளித்தல்.
போன்ற தனிநபருடைய நல்வாழ்க்கைப் பற்றியும் தனிமனிதனை சமூகப் பொருத்தப்பாட்டுள்ள முழு மனிதனாக மாற்றுவதுடன் அவனூடாக சமூதாயத்தின் தேவையை நிறைவு செய்யவும் கல்வி மூலம் நிதி, நல்லுணர்வு, ஒற்றுமை என்பவற்றை வழங்கி அதனூடாக நாட்டுப் பற்றை ஏற்படுத்தவும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலை பெற்றுக் கொடுக்கவும், பிறரின் சொத்துக்கள், கருத்துக்கள், வாழ்க்கை முறைகள், கலாசாரம், பண்பாடு என்பவற்றை மதிக்கப் பழக்கவும் முடிகின்றது. இவ்வாறான சமூக நன்மைகனை பெற்றுக்கொடுப்பதனால் இலட்சியவாத சிந்தனைகளின் எண்ணக்கருக்கள் நமது சமகால கல்விக்கான எண்ணக்கருக்களுடன் ஒத்திருப்பதை காணலாம்.

கல்வி தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும் என்பதுடன் முழுமையான ஆளுமைமிக்க சமூகத்தையும் உருவாக்கும் இலட்சியம் பிளேட்டோவிடம் காணப்பட்டது. இவ்விலட்சியத்தை அடைவதற்கான வழிகள் எமது கல்வி நோக்கங்களிலும் கலைதிட்டத்திலும் உள்வாங்கப்பட்டு காணப்படுகின்றன. இவற்றை அடியொட்டியே கலைத்திட்டங்கள் கட்டியெழுப்பட்டுள்ளது. இவ்வகையில் சுய மொழியில் கல்வி கற்றல், ஆங்கிலம், இயைப்பு மொழி, இரண்டாம் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் கற்றல், நல்லிணக்க செயற்பாடுகள் நாட்டின் வரலாறுகளை பாடங்களினூடாக கற்றல், மத வழிப்பாட்டு செயற்பாடுகளும் கொண்டாட்ட நிகழ்வுகளையும் அனுஷ்டித்தல், தேசிய நிகழ்வு அனுஷ்டிப்பு போன்றவை அவற்றுள் சிலவாகும்.கலைத்திட்ட சிந்தனைகள் இலட்சியவாதிகளாலும் முன்மொழியப்பட்டுள்ளன. பிளேட்டோவும் தாய் நாட்டிற்காக தம்மை கல்வி மூலம் அர்பணிக்கும் தன்மையை வளர்ப்பதற்கு ஒழுங்கான கலைத்திட்டமொன்று அவசியம் என்பதை வலியுறுத்தினார் நன்கு திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி அரசினால் வழங்கப்பட வேண்டும் என்று அவரது குடியரசு நூலில் குறிப்பிடுகின்றார். தெளிவாக கற்பித்தல், சிக்கலின்றி கற்பித்தல், ஆளுமை விருத்திற்குரிய கல்வி, சித்த வலுவை மேம்படுத்தும் அறிகை செயற்பாடுகள், பண்பாட்டு மேம்பாடு மானிடவியற் பாடங்களுக்கு முன்னுரிமை தருதல் மனிதரிடத்து உட்பொதிந்துள்ள             ஆற்றல்களை வெளிக்கொண்டுவருதல் முதலியவை இலட்சியவாதக் கலைத்திட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன.

இலட்சியவாதம் சமூகம் சார்ந்தது. இலட்சியவாதிகள் செயற்பாட்டு பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. இலட்சியவாதமானது தனி மாணவரூடாக சமூகத்தை நோக்குகின்றது. ஒரு சமூகம் தன்னை வெளி;படுத்தும் ஊடகமே பாடசாலையாகும். புhடசாலை சூழலானது சமூகத்தின் மன வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதுடன் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த விருத்தியில் செல்வாக்கு செலுத்துவதாக அமைய வேண்டும். இதற்காக பாடசாலையானது தனக்கென
பொருத்தமான பண்புகளையும் கலாசாரங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், நதி, சுதந்திரம் இவற்றை பண்புகளாக கொண்ட பரிபூரண சமூகத்தை உருவாக்குவது இலட்சியவாதிகளின் இலக்காகும். இவற்றை அடியொற்றியதாகவே கல்வியின் பொது நோக்கங்களிலும், சமூகம் சார் தேசம் சார் எண்ணக்கருக்கள் பொது நோக்கங்களாக வகைப்படுத்தப்பட்டு கலைத்திட்டமாக கட்டியெழுப்பட்டு பாடதிட்டமாக செயற்படுவதை அவதானிக்கலாம்.

இவ்வாறாக தத்துவியலின் கொள்கைகளில் ஒன்றான இலட்சியவாதம் எவ்வாறு கலைத்திட்டமொன்றை வடிவமைப்பதில்தில் உதவுகின்றது என்பதை தெளிவாக எடுத்து நோக்கலாம்.

கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் உண்மைவாதத்தின் (யதார்த்தவாதம்) பங்களிப்பு

தத்துவவியலில் உண்மைவாதம் என்பது நாம் வாழும் உலக ஆய்வுடன் தொடர்புடைய கோட்பாடாகவே உள்ளது. அது எவ்வாறு கலைத்திட்டத்துடன் தொடர்புடையது என்பது பற்றி நோக்கும் போது, யதார்த்தவாதமானது கல்வியின் பல்வேறு அம்சங்கள், கலைத்திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் முறை என்பவற்றை அடிப்படையாக கொண்டு விளங்குகிறது. அத்தோடு கற்றவர்களின் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை தீர்க்கவும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவுவதாகவும் அமைகிறது. தத்துவவியல் ஆய்வுப் பாடங்களாக இயற்பியல், வேதியல், உயிரியல், ஜோதிடம், உடலியல், அறிவியல் பாடங்களை பரிந்துரைக்கின்றது.

கலைத்திட்ட உருவாக்கத்தில் உண்மைவாதம்…

தொழில்கல்வி கலைத்திட்டம் -

யதார்த்தவாதத்தை (உண்மைவாதம்) அடிப்படையாக கொண்ட கலைத்திட்டத்தில் கைவினைப்பொருள், வேளாண்மை போன்றவற்றை கற்ற கலைத்திட்ட அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கற்க பரிந்துரைக்கின்றது. இது நடைமுறை வாழ்க்கைக்கு தயார்படுத்துவதை நோக்காக கொண்டது

மொழியறிவு –

உண்மைவாதமானது கலைத்திட்டத்தில் தொழில் ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தாய்மொழியை கற்பிக்கும் ஊடகமாக விளங்குகின்றது. சமூக தொடர்புகளை படிப்பதில், எழுதுவதில் மற்றும் நடத்துவதில் கற்பவர்களுக்கு உதவுகிறது.

நடைமுறை ஆய்வுகள் 

கலைத்திட்டத்தில் கூடுதல் செயற்பாடுகளுடன் வாசிப்பு, எழுதுதல், வரைதல், புவியியல் கணிதம் ஆகியவற்றை சேர்ப்பதில் யதார்த்தவாதம் முக்கியம் பெறுகிறது. யதார்த்தவாதமானது கலைத்திட்ட சிக்கல்களை ஒழுங்கமைப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையான உடல் செயற்பாடு  என்பவற்றிற்கும் அடிப்படையாக அமைகிறது.

யதார்த்தவாதமானது கலைத்திட்ட சிக்கல்களை ஒழுங்கமைப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையான உடல் செயற்பாடு என்பவற்றிற்கும் அடிப்படையாக அமைகிறது. மேலும் யதார்த்தவாதமானது கலைத்திட்டத்தில்,
உண்மை நிலைகளை அடிப்படையாக கொண்டது. 

கலைத்திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்டது. அத்தோடு வாழ்க்கை பயனுள்ள திறன்கள், முறைசாரா திட்டங்கள் பல்நோக்கு கலைத்திட்டதினை உருவாக்குவதனை நோக்காக கொண்டதாக இவ்யதார்த்தவாதம் அமைகிறது.

உண்மைவாதமானது கலைத்திட்டத்தின் மூலம் குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்கு தயார்படுத்துகிறது. உண்மைவாதத்தின் படி கலைத்திட்டமானது அத்தியாவசிய பாடங்கள், மொழி மற்றும் தொழில் பாடங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

உண்மைவாத கலைத்திட்டத்தின் பாதகங்களாக..

தத்துவவியலின் உண்மைவாதத்தை அடிப்படையாக கொண்டு கலைத்திட்டம் உருவாக்குவதில் சாதகம் போன்று பாதகங்களும் காணப்படுகின்றன.

உண்மைவாத கலைத்திட்டம் உண்மை தேவை உணர்வுகளை மாத்திரம் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இது கற்பனையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதில்லை. இக்கலைத்திட்டம் அறிவியல் அடிப்படையாக கொண்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

இதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கலைத்திட்டம் கலை, இலக்கியங்களை புறக்கணிக்கிறது.


கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் பயன்கொள்வாதத்தின் பங்களிப்பு

பயன்கொள்வாதம் என்பது ஒரு கல்வி தத்துவமாகும். இது கல்வி என்பது வாழ்க்கை மற்றும் வளர்ச்சியை பற்றியதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு நடைமுறை விடயங்களை கற்பிக்க வேண்டும். மேலும் சிறந்த மனிதர்களாக வளர ஊக்குவிக்க வேண்டும். பயன்பொள்வாத கலைத்திட்டம் என்பது செயல்முறை, அனுபவம், அறிவு என்பவற்றை அடிப்படையாக கொண்டது. மாணவர்களின் கேள்விகள் மற்றும் தேவைகளை அடிப்படையாக கொண்டு கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. கலைத்திட்ட மேம்பாட்டுதுறையில் பின்வரும் கொள்கைகளை பயன்கொள்வாதிகள் பரிந்துரைக்கின்றனர்.

1. பயன்பாட்டின் கொள்கை –
இக்கொள்கையின் படி அந்த பாடங்கள் செயற்பாடுகள் மற்றும் அனுபவங்கள் மட்டுமே கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவை மாணவர்களின் தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் வயது வந்தோரின் வாழ்க்கையின் எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். மொழி, உடல் நலம், உடற்பயிற்சி, வரலாறு, புவியியல், அறிவியல், வேளாண்மை மற்றும் சிறுமிகளுக்கான வீட்டு அறிவியல் ஆகியவை கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

2. ஆர்வத்தின் கொள்கை –
இந்த கொள்கையின் படி குழந்தை ஆர்வம் காட்டும் நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்கள் மட்டுமே கலைத்திட ;டத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஜோன் டூயியின் கூற்றுப்படி இவ்வார்வங்கள் 04 வகைப்படும்.
•உரையாடலில் ஆர்வம்
•விசாரணையில் ஆர்வம்
•கட்டுமானத்தில் ஆர்வம்
•படைப்பு வெளிப்பாட்டில் ஆர்வம்
இந்த வகையான ஆர்வங்களை கவனத்தில் கொண்டு கலைத்திட்டத்தில் படித்தல், எழுதுதல், எண்ணுதல், கலை, கைவினை-வேலை, இயற்கை அறிவியல் மற்றும் எளிய இயற்கையின்நடைமுறை வேலைகள் ஆகியவை இருக்க வேண்டும்.

3. அனுபவத்தின் கொள்கை –
நடைமுறை கலைத்திட்டத்தில் மூன்றாவது கொள்கை குழந்தையின் செயற்பாடு, தொழில் மற்றும் அனுபவம், இவ்ற்றையும் நெருக்கமாக ஒன்றிணைக்க வேண்டும். கலைத்திட்டத்தில் சமூக மற்றும் நோக்கமான அணுகுமுறைகளை வள்ர்ப்பதற்கான அசல் சிந்தனையும் சுதந்திரத்தையும் ஊக்குவிக்கும் இத்தகைய கற்றல் அனுபவங்கள் இருக்கவேண்டும்.

4. ஒருங்கிணைப்பின் கொள்கை –
கலைத்திட்டம் பாடங்கள் மற்றும் செயற்பாடுகளின் ஒருங்கினைப்பை குறிக்கிறது. பயன்கொள்வாதிகள் நெகிழ்வான மாறும் மற்றும் ஒருங்கிணைந்த கலைத்திட்டத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.

பயன்கொள்வாதமும் கற்றல் கற்பித்தல் கொள்கைகளும்..

பயன்கொள்வாத்தில் கற்பிக்கும் முறையின் முழு முக்கியத்துவமும் மாணவர்கள் மீது தான் கவனம் செலுத்துகிறது. மாணவர்களின் பாடத்தின் தன்மை ஆற்றலுடன் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்க கூடியதாக இருக்க வேண்டும். கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் ஆக்கப்பூர்வமான மற்றும் நோக்கமான செயல்பாடுகளை பயன்கொள்வாத கலைத்திட்டம் வழங்குகிறது.

மாணவர்கள் தங்களது ஆர்வங்கள், மனப்பான்மை மற்றும் திறன்களுக்கு ஏற்ப செயல்பட மற்றும் நடந்து கொள்ள உண்மையான அனுபவங்களை பெற கலைத்திட்டம் உதவ வேண்டும். கலைத்திட்ட முறை என்பது கல்வியில் பயன்கொள்வாத தத்துவத்தின் பங்களிப்பு ஆகும்.

“அனைத்து கற்றலும் செயலின் விளைப ;பொருளாக வரவேண்டும். கற்றல் ஒரு நபரை ஆக்கபூர்வமாகவும் நம்பிக்கையுடனும் ஆக்குகிறது”.
                                                                                                                                - ஜோன் டூயி

கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் இருப்புவாதத்தின் பங்களிப்பு

இருப்புவாதம் என்பது இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய வாதமாகும். இது கலைத்திட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. இந்த தத்துவத்தின் கொள்கைகளில் மக்கள் தேர்வுகள், அவர்கள் யார் என்பதை வரையறுக்கின்றனர். இந்த தத்துவத்தின் பிற கொள்கைகள் தனித்துவம், தேர்வு சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட பூர்த்தி என்பவற்றை விளக்குகின்றது. தேர்வு என்பது பெரும்பாலும் சுயநிறைவிற்கு வழிவகுக்கின்றது. கல்வியில் இருத்தலியல் பாடத்திட்டங்களில் மாணவர்கள் படிக்கும் விடயங்களில் படிப்பு தேர்வை வலியுறுத்துகின்றது. 

கலைத்திட்டமானது ஒரு வலுவான கூறு. இது மனித நேயத்தின் பிற வடிவங்கள், சுய வெளிப்பாடு மற்றும் தனிப்பட்ட தேர்வுக்கு பங்களிக்கும் அனுபவங்கள் என்பவற்றை உள்ளடக்க வேண்டும். இந்த தத்துவத்திற்கு பல ஆதரவுகள் உள்ளன. அவர்களில் மாக்சீன் கிரீன், ஜார்ஜ் கென்லர் மற்றும் வான் கிளிவ் மோரிஸ் ஆகியோர் அடங்குவர். இந்த தத்துவம் பாரம்பரிய கல்வியாளர்களிடையே செல்வாக்கற்றது. ஏனெனில் இது சில நேரங்களில் குழு எதிர்பார்ப்பு மற்றும் ஸ்தாபன நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

இருப்பியல்வாத தத்துவத்தை வகுப்பறையில் பயன்படுத்துதல்..

கல்வியாளர்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டும் -
இருப்பியலில் கல்வியாளர்களின் பங்கு ஒரு பிள்ளைக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வழிகளை தேடுவதால் அவர்களை வளர்ப்பது மற்றும் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் வேறு செயல்களை காணலாம். கல்வியின் முடிவில் பிள்ளைகள் தங்களது வாழ்க்கைக்கு ஏற்றவாறு வாழ விரும்புகின்றனர்.

மாணவர்கள் மீது வாழ்வதற்கான வழியை கட்டாயப்படுத்தக்கூடாது –
அதாவது பெண்கள் பெண்களைப் போலவும் ஆண்கள் ஆண்களைப் போலவும் நடிக்க ஆசிரியர்கள் முயற்சிப்பதில்லை.

ஆசிரியர்கள் மாணவர்களை தனிப்பட்ட தேர்விற்கு ஊக்குவித்தல் வேண்டும் -
திட்ட அடிப்படையிலான கற்றல், பேச்சுவார்த்தை, மாணவர் தலைமையிலான கற்றல் பொறுப்பாக முடிவெடுக்க ஊக்குவித்தல்.

மாணவர்கள் தங்கள் தேர்வுகள் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து
கொள்ளல்-
மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் முடிவுகளை எடுக்கலாம். அவை எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இருத்தலியலில் கல்வியாளர்கள் அவர்கள் எடுத்த முடிவுகள் அந்த முடிவுக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்.

மாணவர்கள் சூழ்நிலையை பொருட்படுத ;தாமல் தங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்-
பல குறைபாடுள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு வருகையில் ஒரு இருப்பியல்வாதி ஒரு பிள்ளைக்கு அவர்கள் செய்யும் தேர்வுகள் மூலம் துன்பத்தை எப்போது சமாளிக்க முடியும் என்பதை தெரிவிப்பார்.

கல்வியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லையற்ற தேர்வுகள் குறித்து
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு உண்மையான சுய வெளிப்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் -
நம்பகமான மாணவர் சுய வெளிப்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும். கலை நடத்தை அல்லது பள்ளி வேலை மூலம் பிள்ளைகள் தங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் போது நம்பிக்கையாக செயற்படுத்துவர்.


முடிவுரை

இன்றைய கல்வியல் கலைத்திட்டமானது அடிப்படையான விடயமாக நோக்கப்படுகிறது. இதன்படி கலைத்திட்டத்தின் ஆரம்பமானது கல்வியின் அடித்தளமாக விளங்குகின்ற தத்துவத்தின் இருந்து தோன்றப்பட்டது. தத்துவத்தின் படி கலைத்திட்டமானது பிரதான நான்கு பகுதிகளைக் கொண்டு நோக்கப்படுகிறது. அந்தவகையில் இலட்சியவாதம், உண்மைவாதம், பயன்கொள்வாதம் மற்றும் இருப்பியல்வாதம் ஆகியன கவைத்திட்டத்தில் பங்களிப்பு செய்த விதங்களை இச்செயற்றிட்டம் உள்ளடக்கியதுடன் விரிவாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இலட்சியவாதமானது மிகவும் பழைமையான தத்துவ சிந்தனையாகும்.இது யதார்த்தங்களை தவிர்த்து பிள்ளைகளின் அடுத்த உலகிற்கு தயார்படுத்துகின்றது. உண்மைவாதமானது வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்ப்பதற்கான கல்விசார் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. கற்றல்-கற்பித்தல் செயன்முறையில் ஆக்கபூர்வ தன்மையை எடுத்துக்காட்டுகின்ற தத்துவமாக பயன்பாட்டுவாதம் விளங்குகிறது. மேலும் இருப்புவாதமானது தேர்வு சுதந்திரத்தை கூறுகின்றது. இவ்வாறாக தத்துவமானது கலைத்திட்டத்திற்கு அத்தியவசியமான ஒரு அடித்தளமாக விளங்குகின்றது.


Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)