Approaches for Selecting Curriculum Objectives (Tamil)

கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவுசெய்வதற்கானஅணுகுமுறைகள்       

அறிமுகம்   

எவையேனும் ஒன்றைக் கையாளும் விதம், ஏதேனுமொன்றினைப் பற்றி சிந்திக்கும் தன்மை அல்லது ஒரு விடயத்தினைச் செய்துமுடிக்கப் பயன்படுத்தும் முறையினை அணுகுமுறை எனக் கூறலாம் மேலும் ஒரு விடயத்தினைப் பற்றிய ஒருவரின் அணுகுமுறையில் அவர் கொண்டுள்ள அறிவு, திறன், மனப்பாங்குகள், அவரது புலக்காட்சிகள், விழுமியங்கள் மற்றும் உண்மை உலகினை அவர் நோக்கும் விதம் போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்தி அவரது அணுகுமுறையில் அவை பிரதிபலிக்கின்றன இவை நபருக்கு நபர் வேறுபடும் இந்த வகையில் ஓர் துறைசார்ந்த அணுகுமுறையினை விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு துறைசார்ந்த வகையில் எண்ணக்கருக்களை அறிஞர்கள், துறைசார் வல்லுனர்கள் நோக்கும் விதம், கையாளும் விதம், சிந்திக்கும் விதம் போன்றன அத்துறைசார்ந்த அணுகுமுறை எனப்படுகின்றது எனவே மேற்கூறிய விதிகளுக்கமைய கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற அணுகுமுறைகள் பற்றி ஒவ்வொன்றாக நோக்குவோம்

 கலைத்திட்ட அணுகுமுறை

பொதுவாக அணுகுமுறை என்பது எவையேனும் ஒன்றைக் கையாளுகின்ற விதம் மற்றும் ஏதேனுமொன்றினை பற்றி சிந்திக்கும் தன்மை அல்லது ஒன்றைச் செய்து முடிக்கப் பயன்படுத்தும் முறையினை அணுகுமுறை எனக் குறிப்பிடலாம். கலைத்திட்ட அணுகுமுறை தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். அந்தவகையில் கலைத்திட்டம் என்பது கலைத்திட்டத்தினைக் கையாளும் விதம் அல்லது கலைத்திட்டத்தினை திட்டமிடல் அல்லது உருவாக்கல், வடிவமைத்தல் அல்லது அமுலாக்கும் முறைகள் அல்லது அது பற்றி சிந்திக்கும் முறையினைக் கலைத்திட்ட அணுகுமுறை எனலாம்.
 
கலைத்திட்ட அணுகுமுறை என்பதற்கு Ornstein மற்றும் Hunkins வரைவிலக்கணத்தை முன்வைத்துள்ளார். அதாவது கலைத்திட்ட அடிப்படைகள் ( அதாவது தத்துவங்கள் வரலாறு பற்றிய நோக்கு உளவியல் மற்றும் கற்றல் கோட்பாடுகள் பற்றிய நோக்கு மற்றும்; சமூக எழுவினாக்கள் பற்றிய நோக்கு ) மற்றும் கலைத்திட்ட ஆட்சிப் பரப்புக்கள் (அதாவது துறையொன்றின் பொதுவான மற்றும் முக்கியமான அறிவு) மற்றும் கலைத்திட்டம் தொடர்பான கோட்பாடு மற்றும் நடைமுறைத் தத்துவங்கள் போன்றவற்றை  ஒருவர் முழுமையாக (holistic ) நோக்கு நிலையினை அல்லது ஒருவரின் பேர் நோக்கு நிலையினை (meta orientation) பிரதிபலிப்பதே கலைத்திட்ட அணுதுமுறை எனப்படுகிறது.

கலைத்திட்ட அணுகுமுறையானது கலைத்திட்ட விருத்தி மற்றும்; வடிவமைப்பு பற்றிய ஒருவரது நோக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்த கலைத்திட்ட அணுகுமுறையில் அதாவது கலைத்திட்டத் திட்டமிடலில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களது வகிபங்கு மற்றும் கலைத்திட்ட நிபுணர்களின் வகிபங்கு மேலும் கலைத்திட்டத்தின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் மற்றும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகளும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இத்தகைய அணுகுமுறைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது எனலாம். இந்த வேறுபாடுகள் பல்வேறு அணுகுமுறைகளைத் தோற்றுவித்துள்ளது எனலாம்.

எனவே கலைத்திட்டத்துடன் தொடர்புடைய நபர்கள் கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி அமுலாக்கம், மதிப்பிடல் போன்றவற்றில் ஒன்று அல்லது பல அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகிறது.
 
கலைத்திட்டக் குறிக்கோள்

கலைத்திட்டக் குறிக்கோளானது பல்வேறு சொற்களால் கல்வியியலாளர்களால் வகைக்குறிக்கப்படுவதைக் காணலாம். அதாவது போதனைசார் குறிக்கோள்கள், நடத்தைசார் குறிக்கோள்கள,; அடைவுசார் குறிக்கோள்கள், கற்றல் விளைவுகள் எதிர்பார்க்கப்பட்ட வருவிளைவுகள், விருப்பமான வருவிளைவுகள், நடத்தை வருவிளைவுகள் மற்றும் கற்றல் இலக்குகள் ஆகும்.

கல்வியியலாளர்கள் பல்வேறு விதமாகக் குறிப்பிட்டாலும் ஒவ்வொன்றுக்கும் தனியான விளக்கங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக போதனைசார் குறிக்கோள் எனும் போது ஆசிரியர் ஆனவர் தனது கற்பித்தல் நிலைமையின் போது தன்னை வழிப்படுத்துவதற்கான குறிக்கோள்களைக் குறிக்கும். அதே போல நடத்தைசார் குறிக்கோளானது மாணவரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பிரயோகத்தினது குறிக்கோளினைக் குறிக்கும்.
 
கலைத்திட்டக் குறிக்கோளை தெரிவு செய்வதற்கான அடிப்படைகள்/நிபந்தனைகள்

1) கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவு செய்தல் ஆனது முக்கியமானது எனலாம். அதாவது கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவு செய்யும் போது தத்துவக் காரணிகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது கலைத்திட்டத்தில் தத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் குறிக்கோள்கள் மாணவர்கள் சமூக ஒழுக்கங்களையும், சமூக மாற்றங்களையும் கற்றுக் கொள்வதனை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
கலைத்திட்டக் குறிக்கோள் தயாரிக்கும் போது மாணவணிற்கு ஏற்கனவே பாடத்தைப் பற்றிய அறிவு எவ்வளவு காணப்படுகிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

2) கலைத்திட்டக் குறிக்கோளைத் தெரிவு செய்யும் போது உளவியல் கோட்பாடுகளுக்கும் முக்கியமான அடிப்படையாக உள்ளது எனலாம். அதாவது கலைத்திட்ட நோக்கம் குறிக்கோள்களினூடாக மாணவர்களிடம் உடல், உள ஆற்றல்கள், சமூக மனவெழுச்சித் திறன்கள், மொழித் திறன்கள், தொடர்பாடல் திறன்கள் ,ஒழுக்க விருத்தி, சுய ஊக்கல், ஆளுமை, புலக்காட்சி, எண்ணக்கரு விருத்தி ஏற்படுகிறது. மேலும் கற்றலுக்கு வழிகாட்டவும் கற்றல் அனுபவங்களைத் தெரிவு செய்யவும் கலைத்திட்டக் குறிக்கோள் அடிப்படையாகும்.

3) கலைத்திட்டக் குறிக்கோளை அடைய உதவக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைதல் வேண்டும். மேலும் கற்போன் எதிர்கொள்கின்ற சவால்களை சமாளிக்கக் கூடியதாகவும் காணப்படல்.

4) மாணவர்களது விருப்பம் தேவைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் கலைத்திட்டக் குறிக்கோள்கள் சமூகத்துடன் தொடர்புடையதாகக் காணப்பட வேண்டும.;; உயர்மட்ட சிந்தனைகளை நோக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அகலமான அறிவு, விருப்பம,; தேவை ஆகியவற்றை வழங்குவதாக காணப்பட வேண்டும்.

5) கலைத்திட்டம் ஆனது பாடத்தினை வகைகுறிக்கின்ற அறிவுத் தொதியைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். அதாவது கலைத்திட்டக் குறிக்கோள் ஆனது மாணவர்களது அறிவுசார் தொகுதியுடன் தொடர்பாக அமைதல் வேண்டும். கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தீர்மானிக்கும் போது தெரிவின் போது மாணவரினது இயல்பகள், திறமைகள், முதிர்ச்சி, அபிவிருத்தி வாய்ப்புக்கள் என்பன தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்றவாறு கலைத்திட்டக் குறிக்கோள்கள் பொருந்துகின்றனவா என நோக்க வேண்டும். 

உதாரணமாக:- மாணவர்களது வயது மட்டத்துக்குப் பொருத்தமான செய்யக் கூடிய செயற்பாடுகளையும் செய்ய முடியாத செயற்பாடுகளையும் வேறுபடுத்தி அறிதல்.

6) நடைமுறையில் உள்ள கல்விச் சீர்திருத்தத்திலும் கலைத்திட்டக் குறிக்கோளை தெரிவு செய்வதில் கல்விச் செயன்முறையின் நோக்கம் விருத்தி செய்யப்பட வேண்டியது எது எவ்வாறு பாட உள்ளடக்கத்தை தெரிவு செய்வது எவ்வாறான கற்பித்தல் முறைகளைப் பிரயோகிப்பது என்பவற்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
 
கலைத்திட்டக் குறிக்கோள் தெரிவிற்கான அணுகுமுறைகள்
 
1. நடத்தை சார் அணுகுமுறை  

நடத்தை சார் அணுகுமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கலைத்திட்ட குறிக்கோளானது பின்வரும் பண்புகளை கொண்டதாக அமையும். கலைத்திட்டத்தின் விருத்திக்கு பயன்படும் வகையில் காணப்படும். கட்டமைக்கப்பட்ட ஓர் திட்டமிடலுக்கு ஏற்ப கலைத்திட்ட குறிக்கோள் காணப்படும். இணங்காணப்பட்ட குறிக்கோளுக்கு ஏற்ப கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், செயற்பாடு என்பன வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். குறிக்கோளுக்கு ஏற்ப கற்றல் பேறுகள் தரப்பட்டடு அவை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படும். இவ்வாறான பண்புகளை கொண்டதாக நடத்தை சார் அணுகுமுறைக்கு அமைவாக உருவாக்கப்படும் கலைத்திட்ட குறிக்கோள் கொண்டிருக்கும். ஏனவே தொகுத்து நோக்கும் போது சகல நாட்டுக் கலைத்திட்ட குறிக்கோளை தெரிவு செய்வதில் மிக முக்கியமானதாகவும் ஏறத்தாழ பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்ற அனுகுமுறையாக நடத்தை சார் அணுகுமுறை காணப்படுகின்றது.

 2. முகாமைத்துவ அணுகுமுறை

கலைத்திட்ட குறிக்கோளை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மற்றொரு அணுகுமுறையாக முகாமைத்துவ அணுகுமுறை காணப்படுகின்றது. இவ் அணுகுமுறையானது பாடசாலையை ஒர் சமூகத் தொகுதியாக கருதுகின்றது. இவ் அணுகுமுறை 1950 மற்றும் 1960 காலப்பகுதியில் செல்வாக்கு பெற்றதாக காணப்படுகின்றது. நடத்தை சார் அணுகுமுறையை போன்றே இவ் அணுகுமுறையும் திட்டம், நியாயிப்பு அடிப்படைகள், தர்க்க ரீதியான படிமுறைகளை கொண்டதாக காணப்படுகின்றது. முகாமைத்துவ அணுகுமுறையின் படி கலைத்திட்ட குறிக்கோளானது நிறுவன மற்றும் செயற்பாட்டு ரீதியாக அமைந்ததாக தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. அதாவது மாணவர்களிடையே முடிவெடுக்கும் திறன், தலைமைத்துவ பண்பு, கூட்டாக செயற்படுதல் போன்ற பண்புகளை வளர்த்தெடுக்கும் வகையில் கலைத்திட்ட குறிக்கோள்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

முகாமைத்துவ அணுகுமுறையின் மூலம் கலைத்திட்ட குறிக்கோளானது மாற்றங்களையும் புத்தாக்க விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அதாவது கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கலைத்திட்ட குறிக்கோள்களும் மாற்றமடைய வேண்டும் என்பதுடன் புதிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் கலைத்திட்ட குறிக்கோள்கள் இருக்க வேண்டும் என முகாமைத்துவ அணுகுமுறை வலியுறுத்துகின்றது. எனவே தொகுத்து நோக்கும் போது மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையிலும் நிறுவன மற்றும் செயற்பாட்டு விடயங்களை உள்ளடக்கிய வகையிலும் புதுமைகளை கொண்டதாகவும் கலைத்திட்ட குறிக்கோளானது தெரிவு செய்யப்பட வேண்டும் என முகாமைத்துவ அணுகுமுறை குறிப்பிடுகின்றது.

 3. முறைமை அணுகுமுறை அல்லது தொகுதி அணுகுமுறை

கலைத்திட்ட குறிக்கோள் தெரிவிற்கான அணுகுமுறைகளுள் தொகுதி அணுகுமுறையும் முக்கியமானதாகும். இதனை முறைமை அணுகுமுறை என்றும் அழைப்பர். அதாவது பொறிமுறையொன்றின் பாகங்களாக அல்லது ஒரு வலைப்பின்னலினை ஒன்றோடொன்று இணைக்கும் கூறுகளாக இணைந்து செயலாற்றும் விடயங்களின் தொகுப்பினை தொகுதி எனலாம். அதேபோன்று முழுப் பாடசாலையின் மாவட்டமட்டத்தின் அல்லது பாடசாலையின் பகுதிகள் ஒன்றோடொன்று எங்கனம் இணைந்து செயலாற்றுகின்றன என்ற அடிப்படையில் இந்த அணுகுமுறை காணப்படுகிறது. பாடசாலையொன்றில் உள்ள அமைப்பு விளக்கப்படம் ( organizational chart ) தொகுதி அணுகுமுறையிலே அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விளக்கப்படம் பாடசாலைப் பணியாளர்களின் வரிசை, தொடர்பு , பாடசாலையின் தீர்மானங்கள் எங்கனம் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் எடுத்துக் காட்டும். அத்துடன் பாடசாலையொன்றின் கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி, அமுலாக்கம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் இந்த அமைப்பு வரைபடத்தில் உள்ளவாறு தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் அதனை தொகுதி அணுகுமுறையிலான கலைத்திட்டம் எனலாம்.
 
4. கல்விசார் அணுகுமுறை

கலைத்திட்ட குறிக்கோள் தெரிவிற்கான அணுகுமுறைகளுள் கல்விசார் அணுகுமுறையும் ஒன்றாகும். அந்தவகையில் இவ்வணுகுமுறையை மரபுரீதியான அல்லது அறிவு மைய அணுகுமுறை எனவும் அழைப்பர். கலைத்திட்ட எண்ணக்கருக்களை, அதன் போக்குகளை ஆராயவும் தொகுக்கவும் இவ்வணுகுமுறை முற்படுகிறது. அத்துடன் கலைத்திட்ட திட்டமிடலில் கோட்பாடுகளையும் இது முக்கியப்படுத்துகிறது. Dewey (1916), Morrison (1926), Bode (1927)ஆகியோர்களின் தத்துவ மற்றும் அறிவுசார்ந்த பங்களிப்புக்களின் செல்வாக்கினை இந்த அணுகுமுறை கொண்டுள்ளது. கலைத்திட்டத்தின் வரலாற்று விருத்தி, கலாசாரக் கேள்விகள், தத்துவக் கருத்துக்கள் ஆகியவற்றையும் கலைத்திட்டத்தில் உள்ள பிரச்சினை, போக்குகளை பகுப்பாய்வு செய்து தொகுக்க இவ்வணுகுமுறை முற்படுகிறது.
 
5. மனிதத்துவ அணுகுமுறை

இது விஞ்ஞான ரீதியற்ற முறையில் உள்ளடக்கப்படுகிறது. சமூகத்தில் வாழக்கூடிய மனிதனுடைய தேவைகள் மற்றும் சூழ்நிலைகள் என்பவற்றை முன்னுரிமைப்படுத்தி கலைத்திட்ட குறிக்கோள்களை வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அணுகுமுறையாக உள்ளது.
 
முடிவுரை

எனவே நாம் மேலே நோக்கிய கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவுசெய்தற்காகப் பயன்படுத்தப்படுகின்ற அணுகுமுறைகள் என்றால் என்ன? அவ்வாறான அணுகுமுறைகள் எவை? அவற்றை தெரிவு செய்வதற்கான அடிப்படைகள்,அவற்றி;ன் பிரிவுகள் மற்றும் இறுதியாகக் கலைத்திட்டக் குறிக்கோள் தெரிவிற்கான அணுகுமுறைகள் என்பவற்றினைப் பற்றி எமது குழுவினரால் போதிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவே எதிர்கால ஆசிரியர்கள் என்ற வகையில் நாமும் இக்கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவுசெய்வதற்கான அணுகுமுறைகளினை விளங்கி அவ் அணுகுமுறைகளின் வழியே எமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வோமாக.
 


 


Comments

Post a Comment

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)