Aims, Goals and Objectives of Curriculum (in Tamil)
கலைத்திட்ட நோக்கங்கள், இலக்குகள் மற்றும்குறிக்கோள்கள் அறிமுகம் கற்றல் என்பது இலக்குகளை கொண்டு செயற்பாடு. இனங்காணப்பட்ட குறிப்பிட்ட இலக்குகளை அடையுமாறு ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களைத் தூண்டிய வண்ணம் உள்ளனர். அதீத இலக்குகளை நோக்கி மாணவர்கள் தூண்டப்படும் பொழுதே அவர்கள் மனப்பதகளிப்புக்கு தள்ளப்படுகின்றனர். கல்வி இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக கலைதிட்டம் அமைகின்றது. ஒருபுறம் கோட்பாட்டு பரிமாணங்களையும் மறுபுறம் நடைமுறை பரிமாணங்களையும் உள்ளடக்கிய இயங்கு வடிவமாக இது அமைகின்றது. மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல், அனுபவங்களை ஒழுங்கமைத்தல், முதலியவை கலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி என்று அனைத்தையும் கருத்தில் கொண்டே கலைத்திட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. இத்தகைய கலைதிட்டம் பொருத்தமான குறிக்கோள்கள், நோக்கங்கள், இலக்குகள் என்பவற்றை கொண்டு அமைகின்ற போதே வெற்றிகரமானதாக அமைகின்றது. 1. ...