Curriculum Implementation

 கலைத்திட்ட அமுலாக்கம் 

மாணவர்களின் நடத்தையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கலைத்திட்ட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட கலைத்திட்டமானது அதன் இலக்குகளை அடைய வேண்டுமானால் அக்கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக கலைத்திட்டத்தின் அடுத்த படியான மதிப்பீடானது மேற்காள்ளப்பட்டு அவற்றினை மேலும் விருத்தி செய்ய முடியும்.

பல கலைத்திட்ட  வல்லுநர்கள் கலைத்திட்ட  வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் என்பதை ஒப்புக்கொண்டாலும், கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமுலாக்கமானது ஒரு பெரிய கல்வி சவாலாக மாறியுள்ளது. கலைத்திட்டத் திட்டமிடல் செயல்பாட்டில் அமுலாக்கலை வேறாரு படியாக பலர் கருதுகின்றனர். எனவே, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிலைகளிலிருந்து உண்மையான அமுலாக்கும் நிலைக்கு எளிதாக தொடர முயற்சிக்கிறார்கள்

புல்லன் மற்றும் பொம்ஃப்ராட் (1977) "புதுமையைக் கலைத்திட்டத்தின் மூலமாகத் திறம்பட செயல்படுத்த நேரம், தனிப்பட்ட தொடர்பு மற்றும் சேவையில் பயிற்சி மற்றும் மக்கள் சார்ந்த ஆதரவு தேவை" என்று குறிப்பிடுகின்றனர்.

லீத்வுட் (1982), ஏனைய கலைத்திட்ட  வல்லுநர்களைப் போலவே, நடைமுறையில் உள்ள கலைத்திட்டத்தின் நடைமுறைகளையும் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்கள் அல்லது மாற்ற முகவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சியாக கலைத்திட்ட அமுலாக்கல் செயல்படுத்துவதாக கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பல படிகளில் நிகழ்கிறது மற்றும் இம்மாற்றத்தினை அடைய போதுமான காலம் தேவைப்படும் என்று குறிப்பிடுகின்றார்.

ஆர்ன்ஸ்டீன் மற்றும் ஹன்கின்ஸ் (1988) இந்த அவதானிப்புகளை தொகுத்து, கலைத்திட்ட  செயற்பாட்டுச் சுழற்சியில் ஒரு தனி அங்கமாக அமுலாக்கம் காணப்படுவதோடு இதனை தர்க்கரீதியாக பரிசோதித்து செயல்படுத்துவதுடன் தனிநபர்களின் அறிவு, செயல்கள் மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார். 

கலைத்திட்டத்தினால் எதிர்பார்த்த மாற்றங்கள் பொதுவாக இரண்டு வழிகளில் இடம்பெறலாம்.

மெதுவான மாற்றம்: உதாரணமாக, கலைத்திட்ட  பாட உள்ளடக்கத்தில் சிறிய மாற்றங்களைச் சேர்க்கும்போது, நூலகத்தில் சில புத்தகங்களைச் சேர்க்கும்போது அல்லது அலகுத் திட்டத்தைப் புதுப்பிக்கும்போது போன்றவையாகும்

விரைவான மாற்றம்: இது கலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் கணினிகள் போன்ற பாடங்களை கலைத்திட்டத்தில் புதிய அறிவு அல்லது சமூகப் போக்குகளின் விளைவாக உள்வாங்கும் போது.

கலைத்திட்ட அமுலாக்கலில் எதிர்ப்பு உருவாவது என்பது பொதுவானதாகக் காணப்படுகிறது. எதிர்ப்பு உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மக்கள் தங்களுக்கு இடையேயும், மாற்றத்திற்கான முயற்சிகளுக்கும் இடையில் காணப்படும்; உள-சமூக தடைகள், மரபுகள் ஆகியன தடையாகக் காணப்படுகின்றன. 

ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் சமூகத்தின் பாரம்பரியமான கட்டமைப்புகள்:- உதாரணமாக, ஒரு அதிகாரத்துவமாக தற்போதைய நிறுவன அமைப்பில் பலர் மகிழ்ச்சியடைவதாக எண்ணல்.

மாற்றத்தின் விரைவுத்தன்மையும் காரணமாக அமைகின்றது அதாவது ஒரு வருடம் ஏதாவது செயல்படுத்தப்பட்டால், மற்றொரு கண்டுபிடிப்பு தோன்றும்போது அது பெரும்பாலும் நிராகரிக்கப்படும் என்று நினைப்பதன் விளைவாக மாற்றத்திற்கு உள்ளாக முயற்சி செய்யாமை.

அறிவுத் தேடலில் ஆர்வமின்மை காரணமாக புதுமை பற்றி ஏற்றுக் கொள்ளமை

ஊக்கமின்மையும் ஒரு காரணமாக பலர் மாற்றத்தை எதிர்ப்பதாகத் தெரிகிறது, ஏனென்றால் அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கு மதிப்புள்ள ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்று கருதுகிறார்கள். 

கலைத்திட்டத்தின் மூலமான மாற்ற எதிர்ப்பை எதிர்கொள்ள பின்வரும் வழிகளைக் கருத்தில் கொள்ளலாம்.

கலைத்திட்ட  அமுலாக்கம் கூட்டுறவு முயற்சியாக இருக்க வேண்டும்:- கலைத்திட்ட  மேம்பாடு மற்றும் செயல்பாட்டின் முக்கிய அம்சங்களுடன் கலைத்திட்ட  மாற்றத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொள்ளும் மக்களை ஈடுபடுத்துவது அவசியம். ஒரு திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதில் மக்கள் பங்கேற்கும்போது அவர்கள் அதைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுகிறார்கள் மற்றும் அதன் குறிக்கோள்களுக்கும் மற்றும் அதன் தத்துவ அடிப்படையிலும் செயற்படுவதற்கு முற்படுவார்கள்.

எந்தவொரு புதிய யோசனைக்கும் எதிர்ப்பு இயற்கையானது:- கலைத்திட்ட  தயாரிப்பாளர்கள் அதை முன்கூட்டியே எதிர்பார்க்க வேண்டும், அதன்படி அதைக் கையாள்வதற்கான நடைமுறைகளைத் தயாரிக்க வேண்டும்.

புதுமைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை:- ஒரு புதிய கலைத்திட்டம் குறிப்பிட்ட நேரம் மற்றும் சூழலுக்கான பதிலாக வெளிப்படுகிறது. காலம் கடந்து சூழல்கள் மாறும்போது, பிற மாற்றங்கள், சில நேரங்களில் புதிய எதிர்பாராத நிகழ்ச்சிகள் கூட உருவாக்கப்படலாம். இங்கே நிலையானது 'மாற்றம்'. ஆகும் அனைத்து திட்டங்களும் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும்.

பொருத்தமான நேரம்:- ஒரு கண்டுபிடிப்பின் வரவேற்பை அதிகரிக்க இது ஒரு முக்கியமாகும். கலைத்திட்டத்தில் மாற்றம் தேவையா இல்லையா என்பதை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள திட்டத்தில் மக்கள் திருப்தி அடைந்து, மாற்றத்திற்கான தேவை குறைவாக இருந்தால், நாம் ஒரு பெரிய கலைத்திட்ட  மாற்றத்தை முயற்சிக்கக்கூடாது. மேலும், ஊழியர்கள் ஒரு பெரிய திருத்தத்தை முடித்திருந்தால் அல்லது ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கியிருந்தால், அதே நபர்களை மற்றொரு பெரிய கலைத்திட்ட  மேம்பாட்டு முயற்சியில் ஈடுபடுத்தாமல் இருப்பது சிறந்தது.

மாற்றத்தை ஏற்படுத்த பொதுவாக பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உத்திகளை பின்பற்றப்படுகின்றன.

திட்டமிடல்:- திட்டமிட்ட மாற்ற செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் சமமான சக்தியையும் ஒரு குறிப்பிட்ட முறையிலும் செயல்படுவார்கள். செயல்பாட்டைக் கையாள்வதற்கான துல்லியமான நடைமுறைகளை அவர்கள் கண்டறிந்து பின்பற்றுகிறார்கள்.

சக்தி/வற்புறுத்தல்: இலக்குகளை நிர்ணயிக்கும் ஒரு குழுவால் இது நிர்ணயிக்கப்படுகிறது. இக்குழுவானது முக்கிய சக்தியைக் கொண்டுள்ளதுடன் சமமற்ற சக்திச் சமநிலையினை ஏற்படுத்த செயற்பட வேண்டி இருக்கும்.

தொடர்பு:- இது பரஸ்பர இலக்கு அமைத்தல் மற்றும் குழுக்களிடையே மிகவும் சமமான வலுப் பங்கீடால் வகைப்படுத்தப்படுகிறது. 

அனுபவப்பகுத்தறிவு:- அனுபவப்பகுத்தறிவு உத்திகள், மாற்றத்தின் தேவை மற்றும் அதை செயல்படுத்துவதற்கான திறனைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

நெறிமுறை மறு கல்வி (Normative-reeducation): இந்த உத்திகள் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பொதுவாக சமூகத்தின் நுண்ணறிவு. இருந்தால் எந்த சமூகமும் மாறும் அதைப் பகுத்தறிவுடன் அணுகி, மதிப்புகள், அணுகுமுறைகள், மனப்பாங்குகள்; மற்றும் திறன்கள் ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டும். 

அமுலாக்கல் திட்டமிடலைச் செயற்படுத்தல்

பொதுவாக கலைத்திட்டத் திட்டமிடலை விட ஒரு கலைத்திட்ட அமுலாக்கலைத் திட்டமிடுவது அவசியம். கலைத்திட்ட வெற்றியானது இத்திட்டமிடலில் தங்கியுள்ளது. 

அமுலாக்கல் திட்டமிடல் பின்வரும் காரணிகளில் கவனம் செலுத்துகின்றது

மக்கள் (கற்றவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பலர்);

திட்டங்கள்  மற்றும்

செயல்முறைகள்.

இவற்றினை அடிப்படையாக வைத்து பல அமுலாக்கல் மாதிரிகைகள் உருவாக்கம் பெற்றுள்ளன.

ORC மாதிரிகை

'ORC' என்ற எழுத்துக்கள் 'மாற்றத்திற்கான எதிர்ப்பை வெல்வது' என்பதைக் குறிக்கிறது. இந்த மாதிரிகையானது கலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றியானது ஆசிரியர்கள், மாணவர்கள்; மற்றும் சமுதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

நாம் மாற்றத்தை விரும்பினால், மக்களின் தவறான எண்ணங்கள், அவர்களின் தவறான புரிதல்கள் அல்லது இது போன்ற பிற காரணிகளை; நிவர்த்தி செய்ய வேண்டும். கலைத்திட்டம், சாத்தியமான மற்றும் பொருத்தமான இடங்களில், அவற்றின் மதிப்புகள், அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியது என்பதை நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். அமைப்பிற்குள் உள்ள நபர்களை உரையாற்றும் போது, விரும்பிய முடிவை பெற கீழ்படிந்தவர்கள் கட்டளையிடப்படுவதை விட உந்துதல் பெற வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கலைத்திட்டம் உருவாக்குபவர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து கையாள வேண்டும். இவை நான்கு தளங்களின் ஊடாக நோக்கப்படுகிறது.

அக்கறையின்மை:- இந்த கட்டத்தில், ஆசிரியர்கள் தமக்கும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுக்கு இடையிலான உறவை உணராதது. உதாரணமாக, ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தால், இந்த கட்டத்தில் ஒரு ஆசிரியர் இந்த முயற்சியைப் பற்றி அறியாமலும் இருக்கலாம். அதை அறிந்திருந்தாலும் அது அவருக்கு சம்பந்தப்பட்ட ஒன்றாக கருதாமல் இருப்பது ஆகும். ஆசிரியர் மாற்றத்தை எதிர்க்க மாட்டார், ஏனென்றால் அந்த மாற்றத்தை அவரது சொந்த தனிப்பட்ட அல்லது தொழில்முறை களத்தில் செல்வாக்கு செலுத்துவதாக உண்மையில் உணராததே காரணமாக அமைகிறது.

தனிப்பட்ட அக்கறை:- இந்த கட்டத்தில், ஆசிரியர் தனது தனிப்பட்ட நிலைமை காரணமாக புதிய மாற்றங்களிற்கு உட்படுவார். புதிய திட்டம் ஏற்கனவே ஒரு உள்ள திட்டத்துடன் எவ்வாறு உடன்படுகிறது என்பதில் கவனம் செலுத்தி அவற்றின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

பணி தொடர்பான அக்கறை:- இந்த நிலை புதுமையின் உண்மையான பயன்பாட்டுடன் தொடர்புடையது. இந்த கட்டத்தில் ஆசிரியர் புதிய திட்டத்தை அடைய தேவையான நேரம், தேவையான வளங்கள், பின்பற்ற வேண்டிய உத்திகள் போன்றவற்றில் அக்கறை காட்டுவார்.

தாக்கம் தொடர்பான அக்கறை :- இந்த கட்டத்தில் ஆசிரியர் புதிய மாற்றம் மற்றவர்களை எவ்வாறு வளப்படுத்தும் என்பதில் அக்கறை காட்டுவார்.

LOC மாதிரிகை

'LOC' என்பது 'தலைமை-தடைக் கோர்ஸ்' மாதிரியின் சுருக்கமாகும். இந்த மாதிரி ஊழியர்களின் எதிர்ப்பை மாற்றுவதற்காக தரவு சேகரிப்பு மேற்கொண்டு அவற்றினைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமாக தடையை எதிர்கொள்ள முடியும் எனக் குறிப்பிடுகிறது.

பின்வரும் ஐந்து நிபந்தனைகளை உறுதி செய்வதன் மூலமாக

நிறுவன உறுப்பினர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

நிறுவனத்தில் உள்ள நபர்களுக்கு பொருத்தமான திறன்கள் கொடுக்கப்பட வேண்டும்

பொருத்தமான வளங்களை வழங்குவதன் ஊடாக

நிறுவன ஒழுங்கமைப்பு மாற்றியமைக்கப்படுவதன் ஊடாக

மாற்றத்தில்  பங்கேற்பாளர்கள் நேரத்தைச் செலவழிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்

கலைத்திட்ட அமுலாக்கத்தின் போது வெளிப்படும் தடைகள் எவ்வாறானதாக அமையும் அவற்றினை எவ்வாறு கையாளலாம் என்பதனை கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் நன்கு அறியும் போது வெற்றிகரமாக கலைத்திட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும். 


Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)