Curriculum Implementation
கலைத்திட்ட அமுலாக்கம் மாணவர்களின் நடத்தையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கலைத்திட்ட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட கலைத்திட்டமானது அதன் இலக்குகளை அடைய வேண்டுமானால் அக்கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக கலைத்திட்டத்தின் அடுத்த படியான மதிப்பீடானது மேற்காள்ளப்பட்டு அவற்றினை மேலும் விருத்தி செய்ய முடியும். பல கலைத்திட்ட வல்லுநர்கள் கலைத்திட்ட வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் என்பதை ஒப்புக்கொண்டாலும், கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமுலாக்கமானது ஒரு பெரிய கல்வி சவாலாக மாறியுள்ளது. கலைத்திட்டத் திட்டமிடல் செயல்பாட்டில் அமுலாக்கலை வேறாரு படியாக பலர் கருதுகின்றனர். எனவே, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிலைகளிலிருந்து உண்மையான அமுலாக்கும் நிலைக்கு எளிதாக தொடர முயற்சிக்கிறார்கள் புல்லன் மற்றும் பொம்ஃப்ராட் (1977) "புதுமையைக் கலைத்திட்டத்தின் மூலமாகத் திறம்பட செயல்படுத்த நேரம், தனிப்பட்ட தொடர்பு மற்றும் சேவையில் பயிற்சி மற்றும் மக்கள் சார்ந்த ஆதரவு தேவை" என்று குறிப்பிடுகின்றனர். லீத்வுட் (1982), ஏனைய கலைத்திட்ட வல்லுநர்களைப் ...