Skinner’s Operant Conditioning Theory (Tamil)
ஸ்கின்னரின் செயல்பாட்டு நிபந்தனைக் கோட்பாடு
அறிமுகம்
ஸ்கின்னர் ஒரு அமெரிக்க உளவியல் அறிஞர் ஆவார். இவர் எந்த ஒரு தூண்டலும் ஒரே மாதிரியான துலங்களை ஏற்படுத்துவதில்லை, மாறாக வேறுவேறான துலங்களை வெளிப்படுத்துகின்றன என்று கூறினார். ஒரே ஓசையை கேட்டவுடன் பல உயிர்களை வௌ;வேறான துலங்களை வெளிக்காட்டுகிறது. ஓசையை கேட்டால் மனிதன் கண்ணை சிமிட்டுகிறான், காதுகளை பொத்திக்கொள்கிறான், எலி நாக்கால் முகத்தை நக்குகிறது, நாய் குரைக்கிறது, பறவைகள் தரையையோ, மரத்தையோ கொத்தும். இவை ஒரே தூண்டலுக்கு வேறுவேறான துலங்கல்கள் வெளிப்படுவதை உணர்த்தும். ஒருவர் ஒரு துலங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக பாராட்டையோ, பரிசையோ பெற்றால், துலங்கள் பரிசைப் பெறுவதற்கான கருவியாக அமைவதால் இக்கற்றல் கோட்பாட்டை கருவிசார் நிபந்தனைக் கற்றல் கோட்பாடு என்றும் அழைக்கலாம்.
ஸ்கின்னரின் பரிசோதனை
ஸ்கின்னர் ஒரு பசிகொண்ட எலியை தன் சோதனைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு சிறிய பெட்டியில் பசி கொண்ட எலி விடப்பட்டது. ஒரு கம்பியை அமுக்கினால் பெட்டியின் மேல் இருந்து ஒரு துவாரம் திறக்கப்பட்டு உணவுத் துண்டுகள் பெட்டியின் கீழே விழுமாறு பெட்டி அமைக்கப்பட்டது. பசியால் எலி அங்கும் இங்கும் ஓடியது. எதேச்சையாக கம்பியை அமுக்கியவுடன் உணவுத்துண்டு கீழே விழுந்தது. உணவினை ருசித்த எலி மீண்டும் மீண்டும் கம்பியை அமுக்கி உணவுத் துண்டைப் பெற்று உண்டது. கம்பியை அமுக்குவது போன்றவை மட்டுமின்றி சிக்கலான நடவடிக்கைகளையும் ஸ்கின்னர் சோதனையிட்டார். இசைக்கேற்ப எலியை நடனம் ஆடச் செய்தார். பின்னர் அந்த தூண்டல் நிறுத்தப்படும் போது துலங்களானது வலுவிழந்து மறந்து போகும் என்பதை விளக்கினார்.
கல்வியில் செயல்பாட்டு நிபந்தனைக் கோட்பாட்டின் பயன்பாடு
கற்றல் செயலில் கற்பவரின் திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தூண்டல் பொருளை மாற்றியமைத்தல் திட்டமிட்டுக் கற்றல், கணினிப்பொறி வழிக் கற்றல், கற்பித்தல் கருவிகளை, கற்றலில் தூண்டல் கருவியாக பயன்படுத்த காரணமாக அமைந்தது செயல்பாட்டு நிபந்தனைக் கோட்பாடேயாகும்.
ஆசிரியர் கற்பித்தலில் திறம்படச் செயல்படவும், குறிப்பிட்ட கற்பித்தல் நோக்கத்தை அடையவும், தேர்ச்சிக்கான கற்றலை ஏற்படுத்தவும் நடத்தை மாற்ற உத்திகளை கையாள வேண்டும் என அறிவுத்தியது செயல்பாட்டு நிபந்தனைக் கோட்பாடேயாகும்.
செயல்பாட்டு நிபந்தனை என்பது ஒரு மீள வலியுறுத்தற் செயற்பாடாகும். மீளவலியுறுத்தலானது தூண்டியை விட துலங்கலுடன் நேரடியாகத் தொடர்புபட்டது.இக்கோட்பாடானது துலங்கல் கிடைக்காத பட்சத்தில் பயனற்றதாகக் காணப்படும்
செயற்பாட்டு நிபந்தனையானது ஒரு கற்றல் விசையாகும். இதன் மூலமாக விரும்பிய துலங்கலைப் பெற்றுக் கொள்வதற்கு துலங்களைத் தொடர்ந்து மீளவலியுறுத்தலானது உடனடியாக தூண்டிக்கு வழங்குவதன் ஊடாக விரும்பிய துலங்கலை வலிதாக்க முடியும்.
இக்கோட்பாடடில் கற்றல் குறிக்கோள்கள் பகுதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்ச்சியான மீளவலியுறுத்தல் வழங்குவதன் ஊடாக முழுமையான கற்றல் குறிக்கோளினை அடைய முடியும்.
இக்கோட்பாட்டின் முக்கிய அம்சமாக மீளவலியுறுத்தல் காணப்படுகிறது. மீளவலியுறுத்தலை ஸ்கின்னர் இரண்டு வகையாப் பிரித்தார். நேரான மீளவலியுறத்தல் இதன் மூலமாக கற்றல் விளைவினை அதிகரிக்க முடியும் இதற்காக பாராட்டுதல், மாணவர்களிற்கு தரம் வழங்கல், பரிசு வழங்கல் செயற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம் என்றும் அதே போல் மறையான மீளவலியுறுத்தல்களான பொருத்தமான தண்டனைகள் ஊடாகவும் கற்றல் விளைவுகளை அதிகரிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment