Role of ICT in Teaching ( Tamil)

 கற்பித்தலில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வகிபாகம்

கற்பித்தல் என்பது கற்றலில் தாக்கத்தை தந்து கற்போர் மனதில் தாகத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆணிவேராக அமைவது காட்சிப்படுத்தல் மற்றும் படைத்தல் என்பனவாகும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுடப் அறிவு மற்றும் கணினி செயற்பாட்டுத் திறன் என்பன அதன் முக்கிய கருவிகளாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மாணவர்களின் கற்றலை எளிதாக்கி கற்பித்தலை ஏற்றமுற செய்கின்றது.  மேலும் கல்வித் துறையில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முறைமையானது நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதன் மூலம் கல்வித்துறை வளர்ச்சி அடைந்து வருகின்றது. அதாவது கல்விப் பரப்பு, ஆசிரியர் பயிற்சி. தொழிற் புலமை, அபிவிருத்தி, செலவுச்சிக்கனம், மாணவர்களின் ஈடுபாடு, கல்வி முறைமை ஆகியன மேம்பட்டு வருகின்றன. அது போல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வழிக் கற்பித்தல் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. தேர்ந்த ஆசிரியர் ஒருவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வழியிலான கற்பித்தலை மேற்கொள்ளும் போது மாணவர்களின் கற்றல் விருப்பமானதாகவும் எளிமையானதாகவும் நிகழ்கின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வழி கற்பித்தலில் பல சவால்கள் இருப்பினும் அவற்றை வெற்றி கொண்டு வினைத்திறனான கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் போது மாணவர்களை இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு தயார் செய்ய உதவுகிறது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஆதி காலத்திலிருந்தே மனிதன் தரவுகளைக் தயார் செய்து தகவல்களைப் பெறுவதையும் பரிமாறிக் கொள்வதையும் செய்து வருகின்றான். அப்போது பல இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் தொழில்நுட்பவியலின் முன்னேற்றத்துடன் தகவல்களை தயார் செய்தலும் பரிமாறுதலும் மிக எளிய விடயங்களாக அமைந்துள்ளன. தரவுகளைத் தயார்செய்து தகவல்களாக மாற்றுவதற்கும் அவற்றை பரிமாறிக் கொள்வதற்கும் தொழில்நுட்பவியல் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது. இது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் எனப்படும். வௌ;வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னனுத் தொடர்பு மூலம் பிறருக்கு அனுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்தல், பரிமாறிக் கொள்ளுதலே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சி, தொலைபேசி, செயற்கைக் கோள், கணினி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் படக்காட்சி மூலம் கலந்தாய்வு, ஈமெயில் உள்ளிட்ட கருவிகள், சேவைகளும் இதில் அடங்கும். தகவல் பரிமாற்ற காலத்திற்கு தகுந்தாற்போல் கல்வியை வழங்க, நவீன தகவல் தொடர்பாடல் தொழிநுட்பங்களை பயன்படுத்துவது அவசியமாகும். 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் கற்பித்தல் கருவிகளாக செயற்படும் விதம்

இன்றைய நவீன கல்விமுறையில் கற்பித்தல் சாதனங்களாக பல தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகினற்து. அந்த வகையில் அச்சுத்துறை, வானொலி, தொலைக்காட்சி, கணினி, இணையம் ஆகியவற்றின் மூலம் இவை தொடர்கின்றது. கற்பித்தல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. தற்போதைய மாணவர்கள் இளம்பராயத்திலே தொழில்நுட்ப முறைகளையும், உபகரணங்களையும் கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டியுள்ளது. செல்போன் மடிக்கணினி, ஐபேட், தொலைபேசி, இணையத்தளம் போன்றவற்றின் பயன்பாட்டில் முன்னேற்றத்திற்கு விரைவாக வருகின்றனர். அதுபோல் ஆசிரியர்களும் னுபைவையட றுழசடன எனும் தொழில்நுட்ப உலகுக்குள் குடிபெயர்ந்து வரவேண்டி யுள்ளனர். அதனால் மாணவர்களின் கல்வித்தேவையானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மையமாக வைத்தே செயற்பட வேண்டிய தேவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது.  

மேலும், கற்பிக்கும் உபகரணங்கள், Audio, Video, இணைய வடிவிலான கருவிகள், மென்பொருள்கள் மற்றும் அவற்றின் ஊடகங்கள், கல்வி சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் என்ற வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இன்றைய காலகட்டங்களில் இணைய வழிக்கல்வி என்பது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.  

கணினி அடிப்படையிலான பயிற்சி [ Computer Based Training (CBT) ] இணைய அடிப்படையிலான பயிற்சி [ Web Based Training (WBT) ], கற்றல் முகாமைத்துவ முறை [ Learning Management System (LMS)] தொலைக்கல்வி முறை [ Distance Education System (DES)] போன்ற வழிகளின் மூலம் மாணவருக்கு தாம் விரும்பும் சந்தர்ப்பங்களில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொழில்நுட்ப சாதனங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளானது அதிலுள்ள பாடநெறிகள் பல்வகைப்பட்ட பல்லூடகக் கருவிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளமையால் கற்றல் கற்பித்தலில் மிகச் சிறந்த பயன்களை வழங்குகின்றது. சொற்களால் முன்வைக்க முடியாதவற்றை உருவங்கள், அசைவூட்டங்கள், ஒளிப் படக்காட்சி (Videos) மூலம் முன்வைக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் கற்றல் முகாமைத்துவ முறை(LMS)யானது கல்வி  முகாமைக்கும், உயர் கல்வி முகாமைக்கும் பயன்படுத்தப்படுகினற்து. அத் தொகுதியுடன் இணைவதற்கு இணைய வசதிகள் வேணடும். மேலும் பாடசாலை அல்லது நிறுவனம் வலைத்தளத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர் தகவல்கள், ஆசிரியர்களின் தகவல்கள், மதிப்பீடு, வினாவிடைகள், மாற்றங்கள், நிர்வாகம், திட்டங்கள், செயற்பாடுகள், படங்கள், ஒப்படைகள் மேற்பார்வை போன்ற பாடசாலையின் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும். 

மேலும் இன்று வகுப்பறைகளில் கணினி, இணையக் கல்வியில் பல்வேறு விதமாக ஈடுபடுத்தப்படுகின்றது. அதாவது, கணினி தொடர்பான நிகழ்த்துகைகள் (Presentation) ஒளியுருக்காட்சிகள் (Video), கணினி தொடர்பான நிர்மாணிப்புக்கள் (படங்களையும் ஒளியுருக்களையும் தயார் செய்தல்), சஞ்சிகைகள், கட்டுரைகள், ஆவணங்கள் ஆகியவற்றை தயாரித்தலும் அச்சிடுதலும், கல்விசார் விளையாட்டுக்கள், வகுப்பறையில் இணையத்தினூடாக கல்வி தகவல்களை சேகரித்தல், அதாவது Youtube Videos சமூக வலைத்தளங்கள் ஊடாக உதாரணமாக இன்று அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் Whatsapp, Facebook போன்ற சமூக வலைத்தளங்கள்  ஊடாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவை கணினி ஊடாக அல்லது கணினி வசதியல்லாத மாணவர்கள் பெற்றோரின் உதவியுடன் அவர்களின் கண்காணிப்பிலுள்ள தொலைபேசி வாயிலாக கல்வி தொடர்பான விடயங்களை சேகரித்துக் கொள்ளலாம். இவை மேலதிக நேர கற்பித்தலுக்கும் உதவி புரிகின்றது. எனவே யாதாயினும் ஓர் இடத்தில் யாதாயினும் ஓர் நேரத்தில் கல்வியைப் பெறல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக கற்பித்தல் செயற்பாடுகள் இலகுவாக மேற்கொளள்லாம். மேலும் அறிவகம் www.nenasala.lk www.e-thaksalawa.moe.gov.lk வலைப்பாடசாலை www.edulanka.lk போன்ற இணையத்தளங்கள் மூலம் கற்றல் கற்பித்தலுக்கான தகவல்கள், பாட நூல்கள், ஆசிரியர்அறிவுறுத்தற் கையேடு, பாடப் பயிற்சிகள், முன்னோடி வினா பத்திரங்கள், கல்வி தொடர்பாக நாளாந்த செய்திகள் போன்ற பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். 

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சாதனஙக்ளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்ளும் வழிமுறைகள்

குறிப்பிட்ட பாடத்திற்கு காணொளிகள் மற்றும் வர்ணக்காட்சிகளை பயன்படுத்த முடியும்.    

 தகவல் தொடரபாடல் சாதனங்களைக் கொண்டு இணையப் பாவனையுடன் கற்பிக்கும் போது குறிப்பிட்ட பாடம் தொடர்பாக மாணவர்களுக்கு காணொளிகளையும் வர்ணப்படங்களையும் எடுத்துக் காட்டாக காண்பித்து கற்பிக்க முடியும். இதன் போது மாணவர்கள் கற்றல் நோக்கத்தை சிறப்பாக அடைவதோடு வினைத்திறனான கற்பித்தல் செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியும்.

மாணவர்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முறைகளை பயன்படுத்த முடியும்.  மாணவர்களுக்கு ஆசிரியரிடம் ஏதாவது சந்தேகம் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுமிடத்து அவர்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளச் செய்வதனூடாக மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் சந்தேகங்களையும் கேட்டறிவதுடன் ஆசிரியர் குறிப்பிட்ட மாணவனுக்கு விளங்கக் கூடிய வகையில் விளக்க முடிவதோடு வினைத்திறனான கற்பித்தலையும் மேற்கொள்ள முடியுமாக இருத்தல்.  

வலைத்தளங்களை மூலம் கற்றல் வளங்களை பெற்றுக் கொள்ளுதல். இங்கு மேலதிக பயிற்சிகள், மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றை சில வலைத்தளங்களினூடாகப் பெற்று கற்பதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலமாக கற்பித்தலை வினைத்திறனாக மேற்கொளள் முடியும். எடுத்துகக் hட்டாக சில வலைத்தளங்களை குறிப்பிட முடியும். 

இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குதல்.   கற்பிக்கும் போது புதிதாக வெளி வந்த விடயங்களை கற்பிக்க வேணடும். அவ்வாறு கற்பிக்கும் போதே மாணவர்கள் புதியவற்றை அறிந்து சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக காணப்படுவார்கள். அத்துடன் ஆசிரியர்கள் update உடையவர் என்பதால் மாணவர்கள் பாடத்தில் கூடிய கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவார்கள். இதன் மூலம் வினைத்திறான முறையில் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொளள் முடியும்.

Smart board  களைப் பயன்படுத்தல்   மாணவர்களுக்கு கற்பிக்கும் போது படங்களை வரைவதற்கும் பாடங்களை விளக்கவும் இதனை பயன்படுத்துவதன் மூலம் வினைத்திறனான கற்பித்தலை மேற்கொள்ள முடியும். 

e – Readers  முறையை மாணவர்கள் பயன்படுத்த வழிகாட்டுதல்.    மாணவர்கள் e – Readers மூலம் வாசிப்பதற்கு வழிகாட்டப்படுவதன் மூலம் மாணவர்கள் குறித்த ஒரு பாடம் தொடர்பான விடயங்களை வாசிக்கத் தூண்டப்படுகின்றனர் இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிப்பதோடு ஆசிரியரால் வினைத்திறனான கற்பித்தலையும் மேற்கொளள் முடியும்.

Virtual Reality      இதன் மூலம் மாணவர்களை நேரடியான ஒரு இடத்திற்கு கொண்டு சென்று கற்பிக்க வேண்டிய பாடங்களை கற்பிப்பதன் மூலம் வினைத்திறான கற்பித்தலை மேற்கொளள் முடியும். இங்கு 3D வடிவம் பயன்படுத்தப்பட்டு மாணவர்கள் குறிப்பிட்ட இடத்தில் உண்மையாக இருப்பதைப் போன்ற காட்சி இதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றது.
உதாரணம்: அடர்ந்த காட்டினுள் சென்று மிருகங்களை நேரடியாகப் பாரக்;க முடியாது. எனவே உண்மையான அனுபவத்தை வழங்க இம்முறையை பயன்படுத்தி வினைத்திறனான கற்பித்தலை மேற்கொள்ளல்.

e – book      இதன் மூலம் மாணவர்கள் இலத்திரனியல் ரீதியாக புத்தகங்களைப் பெற்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதனால் வினைத்திறனான கற்பித்தல் வழிவகுக்கப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை சுமக்க வேண்டிய அவசியமிவ்லை. எனவே மாணவர்கள் சலிப்படையாது இதன் மூலம் புத்தகங்களை பெற்று கற்பதற்கு வழிவகுப்பதால் வினைத்திறன் மிக்க வகையில் கற்பித்தலையும் வகுப்பறை முகாமைத்துவத்தையும் மேற்கொள்ள முடியும்.

பல புதிய நுட்பமுறைகளை கற்றல்-கற்பித்தலில் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக நோக்குவோம். அந்தவகையில் வகுப்பறையில் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் சாதனங்களின் உடனான கற்றலின் போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றான கவனச் சிதைவை தடுக்கும் வகையிலாக Bio Feedback என்ற முறையை இன்று சில நாடுகள் செய்து வருகின்றன. இதற்கு குறிப்பிட்ட வன்பொருட்கள் தேவையாகும். கணினியோடு இணைக்கப்பட்ட ஒலிவாங்கியை தலையில் அணிந்துகொணடு; கற்றலில் ஈடுபடுவர். மூளையின் அலைவரிசையில் ஒலிவாங்கி பொருத்தப்பட்டுள்ளதை கணினிக்குத் தெரியப்படுத்தும் போது மாணவனுக்கு கவனச்சிதறல் ஏற்படும் போது கணினியில் அத்தகவல் தெரியும். கவனம் மாறும் போது மாணவனே தன்னை சோதித்து கவனம் மாறாது கற்றலில் ஈடுபடலாம். 

இணையத்தில் கட்டுரை, மொழிப்பயிற்சி, கருத்தறிதல், இலக்கியம் போன்ற பாடங்களை தேர்வு செய்யப்பட்டு வகுப்புவாரியாக கணினியில் TSC எழுத்துருக்களால் பாடங்கள் அச்சிடப்பட்டு படங்களும் வண்ணங்களும் சேர்க்கப்பட்டு பல்லூடகப் பாடங்களாக வடிவமைக்கப்படும், இணையப்பாடங்களை ஒரு கணினி நிறுவனம் இயங்கு எழுத்துருக்களாக(Dynamic fonts) மாற்றியமைக்கும். இவ்வாறு அமைப்பதால் மாணவர்கள் தமிழ் எழுத்துருக்களை காண்பதில் சிக்கலிருக்காது. இதன்பின் இணையப்பக்கத்தை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறு காணமுடியும். பாடங்களைக் கற்பித்தல், குறிப்புக்கள் வழங்குதல், பயிற்சிக்கான வினாக்கள் அனைத்தும் கணினி இணையப்பக்கத்திலேயே அமைந்திருக்கம். அவற்றை மாணவர்கள் தமக்கு தகுந்த நேரத்தில் கற்க முடியும். இதில் ஏற்படும் ஐயங்களைப் போக்கிக் கொள்ள மாணவர்கள் ஆசிரியரக்ளுடன் மின்னஞ்சல் மூலமாகத் தமிழிலேயே தொடர்பு கொள்ளலாம்.

கணினியில் புலமை பெற்ற ஆசிரியர்களால் மட்டும் இணையத்தில் பாடங்களை தயாரித்துக் கல்வித் தளங்களைச் செயல்படுத்திய நிலைமை மாறி தற்போது Hot Potatoes என்ற மென்பொருளின் மூலம் கணினியில் அடிப்படைத்திறன் பெற்ற யாராலும் சிறப்பாக ஊடாட்டு பயிற்சிகளை தயாரிக்க முடியும். மிக வேகமாக வளர்ந்துவரும் e-learning துறையை இன்றைய சூழலில் கற்பித்தலுக்குரிய நுட்பங்களை பயிற்சிகள் மூலம் ஆசியர்களுக்கு தரப்பட்டு, தரப்படுத்திய கற்பித்தலுக்கு (Standardized Teaching) தயார் செய்ய வேண்டும். கணினி தொழில்நுட்ப வசதியை வளமான கல்வி சூழலாக்க தேவையான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் களப் பயணங்களை மேற்கொளவ்து கற்பித்தலை வினைத்திறனாக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ (Google street view) மற்றும் கூகிள் மெப் (

Google Map போன்றவற்றை வகுப்பறையில் இருந்தவாறே ஆறுகள், காடுகள் மற்றும் பிரசித்தமான இடங்கள் போன்றவற்றை பார்வையிடவும் ஆராய்வதற்கும் இவை வழிகாட்டக் கூடியவைகளாக காணப்படுகின்றன.  மாணவர்கள் பாடப்புத்தகத்திற்கு அப்பாலான மெய்நிகர் அமைப்பினை வழங்குவதனால் கற்றலை வினைத்திறனாக்குகின்றன.

GPS மற்றும் GIS தொழிநுட்பங்களை பயன்படுத்தி புவி பற்றிய முழுமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கலாம். GPS தொழிநுட்பம் மூலம் பெறப்பட்ட தகவல்களை GIS மூலம் இலகுவாக பெற்று மாணவர்களையும் இவற்றை பயன்படுத்த வழிகாட்டல். இது புவியியல் பாடத்தில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.

முகநூல் புத்தகத்தில் வகுப்பு ரீதியாகவோ அல்லது பாடரீதியாகவோ குழுக்களை ஆரம்பித்து அக் குழுக்களிடம் பாடம் தொடர்பான தலைப்புகளை வழங்கி கலநது;ரையாடல்களை செய்தல் மற்றும் விவாதங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களின் பால் தூண்டுவதன் ஊடாக மாணவர்களின் கற்றல் மேம்படுவது மட்டுமன்றி அறிவு விருத்தி மற்றும் ஏனைய செயற்பாட்டு விருத்தி என்பன ஏற்படுகிறது. மேலும் வகுப்பறை கலண்டர்களைப் பயன்படுத்தி முக்கியமான விடயங்களை இற்றைப்படுத்தி வகுப்பறைக்கெனற் பகிரப்படக்கூடிய ஒன்லைன் கலண்டரை (Online calendars உருவாக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரிர்கள் எளிதில் அணுகக் கூடியவாறு முக்கிய நிகழ்வுகள் திகதிகளை இடுவதன் மூலம் கற்பித்தலை வினைத்திறனாக்குவதுடன் இதனை பெற்றோர் அதிபர் ஏனைய ஆசிரியர்கள் பார்வையிடுவதும்  இலகுவாக அமையும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாடானது வினைத்திறனாக மேற்கொள்ளும் போது கற்றலில் விளைதிறனான பெறுபேறுகளை பெற முடியும். அதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். அனைத்து ஆசிரியர்களும் கணினி தொடர்பான அடிப்படை அறிவை பெற்றவர்களாகவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களை முறையாக இயக்குவதற்கான அறிவை பெற்றவர்களாகவும் காணப்பட வேண்டும். எனவே பாடசாலை நிர்வாகமும் கல்வி நிறுவனங்களும் இவ்விடயத்தை கவனத்திற் கொண்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக  கிடைக்கப்பெறும் நன்மைகளை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகைகளைச் செய்ய வேணடும்.
 


 

Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)