Learning and Teaching (Tamil)
கற்றலும் கற்பித்தலும்
அறிமுகம்
கற்கால மனிதனாக தோன்றி நவீன கால மனிதனாக மாறிய மனிதன் ஒவ்வொரு நிலையிலும் கற்றதின் விளைவுதான் மாற்றங்கள் ஏற்படக் காரணமானது. கற்றல், அறிவு அல்லது நம் வாழ்க்கையை வளமாக்கும் திறன்களை பெற்றுள்ளது. கற்றல் என்பது ஒரு நடத்தை மாற்றச்செயலாகும். கற்றலின் கூறுகள் உற்சாகமூட்டக்கூடியாதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். கற்றல் என்பது பொருளுணர்ந்து கற்றல், பொருளுணராக் கற்றல், செயலில் கற்றல், சுயகற்றல் எனப் பல வகைகளைக் கொண்டுள்ளது.
கற்றல் என்றால் என்ன?
- படிப்பு, கற்றல் என்பது அனுபவம் அல்லது கற்பித்தல் மூலம் பெற்ற அறிவினையும், திறன்களையும் கொண்டுள்ளது.
- புதிய படிப்பு அல்லது அறிவை மேம்படுத்துத்தலையும் படிப்பதன் மூலம் புத்துயிரையும் உண்டாக்குகிறது.
- அறிவார்ந்த பயன்பாட்டின் எந்தத்துறைகளிலும் திட்டமிடப்பட்ட படிப்பால் பெறப்பட்ட அறிவு
- நடைமுறைபயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் நடத்தையை மாற்றியமைத்தல்
- சுயக்கற்றலை அளவிட முடியாது, ஆனால் அதன் முடிவுகளை அறியலாம்
- கற்றல் ஒரு தனிப்பட்ட தழுவலின் முக்கியத்துவமாகும்.
- படிப்பு, பயிற்ச்சியை கற்பித்தல் மூலம் அறிவைப் பெறுவதற்கான ஒரு செயல்பாடு
- அறிவு மற்றும் திறன்கள், கற்றலில் இருந்து பெற்றது.
கற்றலின் வரைவிலக்கணங்கள்
- கற்றல் நம் வாழ்க்கையை வளப்படுத்தும் அனைத்து திறமைகளையும், திறன்களையும், பெற்றிருக்கிறது. இது ஒரு புத்தகம் அல்லது ஒரு ஆசிரியரால் கற்பிக்கப்பட வேண்டியதில்லை, மாறாக நம்முடைய சொந்த ஆய்வு மூலமாகவோ, பகிர்வு மூலமாகவோ,அல்லது அறிவுரைகளாலோ அதைப் பெறலாம் – ஆன்ஜெலா சிங்கிள்
- காலப்போக்கில் ஒரு நபர் நடத்தை அல்லது மனப்பாங்கில் கற்றல் என்பது ஒப்பீட்டளவில் நிரந்தர மாற்றமாகும் - சின்ஸ்டிங் சின் சாங்
- பல்வேறு தூண்டுதல்களுக்கு புதிய பதில்களை பெறுவது – ஏரிக் பிளாக்பர்ன்
- கற்றல் அனுபவங்கள், நம்மைச்சுற்றியுள்ள உலகின் வளர்ச்சியையும் புதிய புரிதலையும் கொண்டுள்ளது. – கிரிஸ்டி மெக்ரத்
- கற்றல் ஒரு நடத்தை மாற்றமாகும் - பரிகாப்பு பன்ஜ்போர்ன்
- கற்றல் என்பது ஒரு செயல் இது நிலையானது அல்ல ஒரு நபர் புதிய தகவல்கலை பெறுவதை நிறுத்துவதில்லை இது அவர்களுடைய மனதில் சுறுசுறுப்பையும் கவனத்தையும் கொண்டிருக்கிறது ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் உணர்ச்சி முனைப்புடையதாக உள்ளது – வெரோனிகா வெரோனிகா
- நமக்கு வழங்கப்பட்ட தகவல்களை பெறுவதற்கும், பயன்படுத்துவதற்கும் நம் வாழ்நாள் முழுவதும் கற்றல் தேவைப்படுகிறது. ஆசை இருக்கும் வரை கற்றுக்கொள்ளும் திறன் முடிவில்லாதது. – தாமஸ் கோரல்ஸ்
- நடத்தை மேம்பாட்டினையும் வெளிப்புற ஒருங்கிணைப்பையும் ஒருங்கிணைத்து அறிவதே கற்றல் ஆகும் - அபிசாபெர்ட்
- அனுபவத்திலிருந்து வரும் அனுபவத்தின் ஒப்பீட்டளவில் கற்றல் என்பது நிரந்தரமான மாற்றமாகும் - ஸ்டீபன் பீ கௌன்
- சிந்தனை அல்லது பிற உணர்ச்சிகளில் தூண்டுதல் காரணமாக ஏற்படும் ஒரு மாற்றம் - ஸ்கொட்மில்லர்
கற்றலின் அடிப்படை கோட்பாடுகள்
கற்றல் என்பது அனுபவம் கூடிய கற்றலின் அடிப்படைச் கோட்பாடுகள் வளர்ச்சி
உண்மையில் கற்றல் என்பது வளர்ச்சியின் வடிவம். இது தவிர்க்க முடியாத இயற்கையாகும். வளர்ச்சியின் காரணிகளை கற்பதற்கு இது இயக்கத்தையும், அழுத்தத்தையும் அளிக்கும். தினசரி செய்கைகளால் குழந்தை மனதளவிலும் உடலளவிலும் வளர்கிறது. பெஸ்டலாசி (Pestalozzi) மரத்தின் மூலகமாகவும், புரோபெல் (Froebel) தோட்டத்தின் மூலமாகவும், மேரிட்டா ஜான் (Marietta John) தேவதாரு கிளை மூலமாகவும் கற்றலை உணர்த்த முற்படுகின்றனர். எனவே கற்றல் என்பது அனுபவம் மூலமாக வளர்வது ஆகும்.
கற்றல் என்பது ஒரு பொருத்தப்பாடு
சூழலுக்கு ஏற்றவாறு நம்மை சரிசெய்வதற்கு கற்றல் என்பது ஓர் அடிப்படை முயற்சியாகும். புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு தனியாள் தன்னை போதுமான அளவு சரிசெய்வதற்கு கற்றல் உதவுகிறது. கேட்ஸ் (Gates), மற்றவர்களின் கூற்றுகளின்படி “கற்றல் என்பது நடத்தையில் ஒரு முற்போக்கான மாற்றத்தை உருவாக்கும் வகையில் சூழலுக்கு ஏற்ற வெற்றிகரமான முன்னிலையும,; ஒரு தனியாளின் பயனுள்ள மாற்றத்திற்கான அடுத்தடுத்த முயற்சிகள்”. கற்றலின் நோக்கத்தில் திட்டவட்டமான பொருத்தப்பாடு மட்டுமே பள்ளி கற்றலில் இடம்பெறும்
கற்றல் என்பது ஒரு அமைப்பின் அனுபவம்
கற்றல் என்பது புதிய அனுபவத்தின் கூடுதலாகவும் இல்லாமல் பழைய அனுபவத்தின் முழுமையாகவும் இல்லாமல், பழைய மற்றும் புதிய அனுபவங்களின் தொகுப்பாய் நல்ல அனுபவத்தின் புதிய முறைகளை ஏற்படுத்துவதாகும். இறுதியில் நிறைவுபெறும் செயலாகவும் இந்த அமைப்பின் அனுபவம் அதிகமான தேவையில்லாத பழக்கங்களை தவிர்க்கும். சரியான முறையில் உண்மைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு பிறகு அதற்கான கற்றலும் இடம் பெறும்.
கற்றல் என்பது தேவை
உண்மை கற்றல் அனைத்தும் ஒரு தேவையின் நோக்கமாகும். எப்பொழுது ஒரு மாணவன் தனது கற்றலை பயனள்ளதாக எண்ணுகிறானோ அப்பெழுதே அது பூர்த்தியாகிறது. பாடத்துடன் தொடர்பில்லாத பொருள் மறக்கும், தொடர்புடைய பொருள் மறக்காது.
கற்றல் என்பது நுண்ணறிவு
அர்த்தமில்லாதவற்றை திரும்ப, திரும்ப செய்தல் நிரந்தர கற்றலை உருவாக்காது. உள்ளார்ந்த பார்வையை பெறும்போதும் அதன் செயல்முறைகளை புரிந்துகொள்ளும்போதும் கற்றல் இடம்பெறுகிறது. புரிந்துகொள்ளுதல் மற்றும் நுண்ணறிவே கற்றலில் நீடித்த விளைவை தரும்.
கற்றல் என்பது ஒரு செயல்
ஒருவரின் அடிப்படை பொதுவான தேவைகளை சந்திக்கும் இயற்கையின் வெளிப்பாடே கற்றலாகும். சரியான கற்றல் அனைத்துமே சுயகற்றலாகும். எனவே கற்றல் செயல்முறையில் ஒருவர் ஆற்றலுடன் பங்கேற்கவேண்டும். பங்களிப்பு செய்வது மட்டுமே பயனுள்ள கற்றலாகும். கற்றலில் அனைத்து முற்போக்கான முறைகளும் டால்டன் (Dalton) திட்டம், திட்ட முறை, மாண்டிசோரி முறை, கிண்டர்கார்டன் இவை அனைத்துமே அடிப்படை கல்வியில் கற்றலின் பண்புகளை அழுத்தத்துடன் வெளிப்படுத்துகின்றன.
கற்றல் என்பது தனியாள் சமூகம் சார்ந்தது
கற்றல் என்பது தனியாள் செயல்பாட்டைவிட அதிகமானது. இது சமூக செயல்பாடும் கூட. குழந்தைகளிடம் பெரிய செல்வாக்கு மற்றும் அவர்களது ஒழுக்கத்தில் சமூக அமைப்புகளான குடும்பம், ஜாதி, கூட்டம், பாடம், இனம் போன்ற நிறுவனங்கள் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நினைவில்லாததை விட நினைவோடு ஒரு குழுவின் மனது, தனியாளின் மனதை பாதிக்கிறது
கற்றல் என்பது ஒரு எதிர்பார்க்கமுடியாத செயல்
மனிதனின் கற்றல் என்பது ஒரு மனித செயலாகும். இதை மனித இனத்தின் மீது திணிக்க முடியாது. பொதுவாக, அதிகமான மக்கள் சாதாரண எதிர்பார்ப்புகளுடன் வாழ்கின்றனர். ஆனால் ஒரு குழந்தையால் இயலாதபோது ஆசிரியர் அக்குழந்தை கற்க தாயராகும் வரை காத்திருந்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்கின்றனர் இது கற்றலின் பண்புகளை செயல்படுத்துவதாகும்.
கற்றல் என்பது சுற்றுபுறச் சூழலின் விளைபொருள்
கற்றல் வெற்றிடமாய் இல்லாமல் சுற்றுச்சூழலுடன் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. கற்பித்தலின் சாத்தியங்களில் சுற்றுச்சூழல் ஆரோக்கியமானதாகவும், வளமுள்ளதாகவும் இருக்கும். இது கற்றலை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மாற்றுவதாகும்.
உண்மை கற்றல் கற்போரின் நடத்தையை மாற்றும்
உண்மை கற்றல் கற்போரின் ஒழுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு அனுபவமும் கற்போரின் மனதையும், கற்போரின் ஒழுக்கத்தையும்; மாற்றுகிறது. சுருக்கமாக கூறினால் இது கற்றலின் இலக்காகும்.
கற்றல் என்பது முழுமையானது
மனித உயிரினங்கள் முழுமையாக செயல்படுகின்றன. முழுமை என்பது பிளவில் இருந்து வரும் தனித்துவம். இது வாழ்வின் முக்கிய மத்திய கோட்பாடாகும்.
நுண்ணறிவால் தொடர்ந்து கற்றல்
சில நேரங்களில் நுண்ணறிவு என்பது “புரிதலின் பிரதிபலிப்பு” இது ஒரு சூழல்களில் அர்த்தமில்லாத உண்மைகளில், திடீரென அர்த்தம் கொள்ளுதலில், பிரச்சனையின் தீர்வில், அல்லது ஒரு இலக்கின் வழியில் இருந்து வெளிப்படும். நுண்ணறிவை பெறும் திறன் என்பது ஆர்வம், முன்னறிவு, நுண்ணறிவையும் சார்ந்ததாகும். ஒரு மந்தமான குழந்தையின் பிரச்சினையில் ஆசிரியர்கள் அக்குழந்தையின் சூழ்நிலையை புரிந்துகொள்ளவும் அர்த்தத்தை கிரகிக்கவும் எப்போதும் உதவுவதைவிட, அதிகமாகவும் உதவவேண்டும்.
கற்பித்தல்
அறிமுகம்
“கல்வி என்பது மனிதரிடம் முன்பே உள்ள முழுமையை வெளிப்படுத்துதல்” என சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நிகழும் ஒரு கருத்து பரிமாற்றம் ஆகும். அது தொடர்ந்து நிகழும் செயலாகும்.
கற்பித்தல் வரைவிலக்கணங்கள்
கேஜின் கருத்துப்படி கற்பித்தல் என்பது வேறுஒரு நபரின் நடத்தைத் திறனில் மாற்றத்தை ஏற்படுத்துவதை குறிக்கோளாக கொண்ட இரு நபர்களுக்கிடையே நிகழும் தாக்கம் ஆகும்.
எட்மண்ட் அமிடான் கூற்றுப்படி கற்பித்தல் என்பது ஒரு ஊடாடும் செயல்முறையாகும். குறிப்பாக வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நிகழும் பேச்சு என்றும் மேலும் சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் கற்பித்தல் ஏற்படுகிறது.
ப்ரூ பேசர் கூற்றுப்படி கற்பித்தல் என்பது சூழ்நிலையை கட்டுப்படுத்தி மாற்றி அமைத்தலுடன் அதை வெற்றிக் கொள்ளல் எனக் கருதுகிறார்”.
ஸ்கின்னர் கற்பித்தல் என்பது வலுப்படுத்துவதற்கான நிகழ்வுகளை ஏற்படுத்துதலாகும்
ரேயான் கற்பித்தல் என்பது மற்றவரின் கற்றலுக்கு வழிகாட்டுதல் தொடர்பான செயற்பாடுகளாகும்”.
“ஆபட்மெமோஹன் கற்பித்தல் என்பது மற்றவர்கள் கற்க உதவுதல்”.
கற்பித்தல் என்றால் என்ன?
- ஒரு ஆசிரியரின் தொழில் அல்லது பணி
- கற்பித்தல் என்பது கற்பிக்கப்படும் ஒன்று.
- ஒரு நபரால்,மதத்தால் கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் கருத்துகளாகும்.
- கற்பிக்கும் ஒரு நபரின் செயல் அல்லது தொழிலாகும்.
- கற்பித்தல் என்பது மாணவரின் தேடுதல் நிலையை எளிதாக முன்னேற்றம் செய்யும் முறை மேலும் அது எந்த சூழ்நிலையையும் எளிதில் வெற்றிக் கொள்ள உதவுவது.
- கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நிகழும் கருத்து பரிமாற்றம்.அவரவர் தம் நன்மைக்காக அதில் பங்கு கொள்கின்றனர்.இருவரும் தாம் அடைய வேண்டிய குறிக்கோள்கள்,வழிமுறைகளை இவற்றைப் பெற்றுள்ளனர்.
- மற்றவர்களுக்கு கல்வி அளிக்க உதவும் எல்லா செயல்களும் கற்பித்தலில் அடங்கும். கல்வியை அளிக்கும் நபர் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். சிறந்த அறிவை மாணவர்களுக்கு அளிக்க ஆசிரியர் மாறுபட்ட முறைகளை பயன்படுத்துகிறார்.மாணவர்களை புரிந்து கொள்ளச் செய்ய சிறப்பாக முயல்கிறார். மாணவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதே அவர் கடமையாகும்.
- கற்பித்தல் என்பது மாணவர்களின் தேவைகள்,அனுபவங்கள் உணர்ச்சிகள் இவற்றை கவனிக்கும் முறை மேலும் குறிப்பிட்ட முறையில் தலையிட்டு குறிப்பிட்டவற்றை கற்க செய்தல்.
கற்பித்தலின் பண்புகள்
- கற்பித்தலின் முக்கிய அம்சம் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளித்தல்
- கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நிகழும் தொடர்பு ஆகும்.
- கற்பித்தல் மாணவர்களுக்கு, அறிவை சிறப்பான முறையில் அளிக்கும் ஒரு கலை ஆகும்.
- பல்வேறு பாடங்களில் பல்வேறு தலைப்புகளில் உள்ள உண்மைகளை கற்பிக்கும் ஓர் அறிவியலே கற்பித்தல் ஆகும்.
- கற்பித்தல் தொடர்ந்து நிகழும் செயல் ஆகும்.
- தாம் கற்பிக்கும் பாடப் பொருளைப் பற்றி ஆசிரியருக்கு முழு நம்பிக்கை இருக்கும்போது அவர் சிறப்பாக கற்பிக்க முடியும்.
- கற்பித்தல் மாணவர்களை மேலும் மேலும் சிந்திக்க ஊக்குவிக்கிறது. கற்பித்தல் முறையாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது.
- கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துதல், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் முறையில் ஆசிரியர் கருத்துகளைக் கற்பிக்கிறார்.
- சமுதாயத்திலும் அதன் சுற்றுச்சூழலிலும் தன்னைச் சரிசெய்து கொள்ள மாணவர்களுக்கு உதவும் ஒரு உபகரணமே கற்பித்தல் ஆகும்.
- கற்பிக்கும் பாடப்பொருளை தூண்டக்கூடியதாகவும், கவரக்கூடியதாகவும் செய்யும் திறனாகும்.
- மாணவர்களின் புரிந்துகொள்ளும் நிலைக்கேற்ப அவர்களை ஈடுபடச் செய்தல்
- பாடப்பொருளை தெளிவாக விளக்கும் திறன்
- எதை புரிந்து கொள்ள வேண்டும்,எந்த அளவிற்கு, ஏன் என்பதை தெளிவுப்படுத்த முடிவு செய்தல்
- மாணவர்கள் மீது அக்கறை, மதிப்பினை காண்பித்தல்
- சுதந்திரத்தை ஊக்குவிக்க முடிவு செய்தல்.
- புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள்,புதிய முறைகள் இவற்றைப் பயன்படுத்தும் திறன்
- மாணவர்கள் தீவிரமாகவும், பொறுப்பாகவும,; ஒத்துழைப்புடனும் கற்க உகந்த கற்பிக்கும் முறைகள், கற்றல் செயல்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல்.
- நம்பகமான மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்துதல்
- பாடப்பகுதியை முடிக்க வேண்டும் என்பதையே எண்ணாமல் முக்கியமான கருத்துக்களையும் மாணவர்கள் அவற்றை மாணவர்கள் தவறாக புரிந்துகொள்ளுதலில் இவற்றின் கவனம் செலுத்துதல்
- மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி உயர்ந்த ரக மதிப்பீடு அளித்தல். மாணவர்களிடமிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும,; தம் கற்பித்தல் விளைவுகளைப் பற்றி அறிந்து அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றிய ஆவல்.
Comments
Post a Comment