Evaluation of Learning (Tamil)
கற்றலில் மதிப்பீடு
கல்வியில் நாம் மனிதர்களை அதாவது மாணவர்களையோ அல்லது ஆசிரியர்களையோ அளவிடவோ மதிப்பிடவோ முடியாது. நாம் அவர்களின் குணம் பண்புகள் அவர்கள் கற்று தேர்ந்ததற்கான அறிவு, நேர்மை, விடாமுயற்சி, கற்பிக்கும் கற்கும் திறன் போன்றவற்றை அளவிடவோ மதிப்பிடவோ செய்யலாம்.
மதிப்பீட்டின் வரைவிலக்கணங்கள்
மதிப்பீடு செய்பவரின் பின்னணி மற்றும் பயிற்சி அடிப்படையில் பல உற்றுநோக்கியறிதல்களால் எடுக்கப்படும் ஒரு தீர்வு மதிப்பீடு ஆகும் கில்பர்ட் சேக்ஸ்
மதிப்பீடு என்னும் செயல் தகவல்களை விரித்துரைப்பது, பெறுதல், வழங்குதல் முடிவுகளை மாற்றியமைத்தல் தீர்மானித்தல் ஆகும். ஸ்டபீல்பீம்
மதிப்பீடு என்பது நடைமுறைப்படுத்துபவரின் முடிவுகள் அடங்கிய செயல்களை திருப்தியாக உள்ளதா என ஆய்வு செய்து அதனுடைய சிறப்புகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சார்ந்த நோக்கங்கள் வரைவுப்படுத்துவது ஆகும். டக்மேன் 1975
கற்றலில் அளவீட்டின் முக்கியத்துவம்
மாணவர்கள் எப்படி கற்பது, கற்க ஊக்கப்படுத்துவது ஆசிரியர் எவ்வாறு கற்பிப்பது போன்றவற்றிற்கு அளவிடுதல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கற்றலில் மதிப்பீடு :-
திட்டமிடவும், அறிவுறுத்தி வழிகாட்டவும் உட்காட்சி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலின்படி வழிகாட்டவும், திட்டமிடவும் மேலும் போதிய பின்னூட்டத்தை வழங்கவும் மதிப்பீடு ஆசிரியர்களுக்கு பயன்படுகிறது.
மதிப்பீடாக கற்றல் :-
மாணவர்கள் தாங்கள் எப்படி கற்கிறோம் என்ற விழிப்புணர்வை மேம்படுத்திக் கொண்டு மேலும் கற்றலில் முன்னேற தகவமைத்துக் கொண்டு கற்றலில் அதிக பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளுதலாகும்.
கற்றலுக்கான மதிப்பீடு :-
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விரிவான கல்விக்கான சமுகத்தின் குறிப்பிட்ட நேரத்தில் அடைவும் அதன் வெற்றியை கொண்டாடவும், திட்ட தலையீடு மற்றும் தொடர் வளர்ச்சியை ஆதரித்தல் போன்றவற்றை கற்றலுக்கான மதிப்பீடாக அறியலாம்.
மதிப்பீடு என்பது அதனுடைய தேவைக்கேற்ப திட்டமிடலாகும். மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டிற்காக கற்றல் அனைத்தும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் அதை சரியான முறையில் சமநிலைப் படுத்தும் வகையில் பங்காற்கின்றன. விளக்கம் மற்றும் தேவையின் நோக்கத்திற்காக சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் பயன் மதிப்பீட்டின் முக்கிய பகுதியாகும்.
மதிப்பீடானது கற்றல் செயல்முறையுடன் பிணைக்கப்பட்டதாகும். அது அறிவுறுத்தல் மற்றும் கலைத்திட்டத்துடன் ஒன்றையொன்று வலுவாக இணைத்துள்ளது. கலைத்திட்ட வெளிப்பாடான அடைவை நோக்கி ஆசிரியர்களும் மாணவர்களும் பணிசெய்யும்போது மதிப்பீடானது அறிவுறுத்தல்;, அடுத்த நிலைக்கு செல்ல மாணவர்களை வழிநடத்தல், அவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கண்காணித்தல் போன்றவற்றில் நிலையான பங்கினை வகிக்கின்றன. வகுப்பறை மதிப்பீடு திட்ட செயல்பாடுகள் மற்றும் தகுந்த மதிப்பீடு செய்வதற்கான தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் தனி மாணவர்களின் தேவைக்காகவும் ஆசிரியர்கள் பலவகையான செயல்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.
வளர்ச்சிகால மற்றும் முழுமைக்கால மதிப்பீடு
வளர்ச்சி கால மதிப்பீடானது கற்றலுக்கான மதிப்பீடாகும் என கல்வியாளர்கள் வரையறுக்கின்றனர். மேலும் மதிப்பீட்டின் முடிவுகளானது கற்பித்தல் நுணுக்கங்களை வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
முழுமைகால மதிப்பீடு : மதிப்பீடு கற்றல் என்று கூறப்படுகிறது. ஏனெனில் குறிப்பிட்ட கால அளவிற்குள் கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்து அதன் முடிவுகளை வெளிப்படுத்துவது முழுமைக்கால தொகுத்தறி மதிப்பீடாகும்.
வளர்ச்சி கால மற்றும் முழுமை கால மதிப்பீடு வரையறுத்தல்
வளர்ச்சி கால மதிப்பீடு
ஒரு கல்வி நிலையத்தில் ஒரு பாட செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு முறை வளர்ச்சி நிலை என்றழைக்கப்படுகிறது.
கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கற்றல் முன்னேற்றத்தை வழிநடத்தவும் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு வெற்றி தோல்விகள் பற்றி தொடர்ந்து பின்னூட்டம் தரவும் வளர்நிலை மதிப்பீடு பயன்படுத்தப்படுகிறது. – என்.ஆர்.கிராண்லண்டு.
முழுமைகால மதிப்பீடு
மாணவர்களுக்கு ஒரு பருவ முடிவில் ஓராண்டு படிப்பு முடிந்தபின் அவர்களின் கற்றல் அடைவை உறுதிப்படுத்தும் வகையில் மதிப்பெண்களையோ பண்புகளைக் குறிக்கும் எழுத்துக்களையோ தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு முறைக்கு முற்றுநிலை மதிப்பீடு என்று பெயர்.
தொடர் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் பருவ இறுதியில் அல்லது கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களின் கற்றல் அடைவை சோதிப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.கல்வியாண்டு முடியும் கால கட்டத்தில் மாணவர்கள் எந்த அளவு விரும்பத்தக்க கற்றல் விளைவுகளைப் பெற்றிருக்கின்றனர் என்பதை அளவீடு செய்வதற்கு முற்றுநிலை மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
- வியர்ஸ்மா ரூ கர்ஸ் எஸ்.ஜி.
மதிப்பிடுதலின் கோட்பாடுகள்
- மதிப்பீடு என்று சரியான முறைப்படுத்தப்பட்ட அமைப்பு மற்றும் ஏற்புடைமையுடையதாகவும் அதோடு தொடர்புடைய அடிப்படை விதிகள் மூலம் மாணவர்களின் உள்ளார்ந்த நோக்கம் மற்றும் அடைவுகளை வெளிக்கொண்டுவர பொருத்தமான நிலைகளை கொண்டிருக்க வேண்டும்.
- மதிப்பீடு பற்றிய தகவல்கள் வெளிப்படையான அணுகக்கூடிய மற்றும் வெளிப்படையான தெளிவான துல்லியமான, நிலையான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களையும், மதிப்பிடும் பணிகளை வெளிப்படுத்த வேண்டும்.
- மதிப்பிடுதலில் நம்பகத்தன்மை உடையதாகவும் தகுந்த இடைவெளிவிட்டு ஒரே குழுவுக்கு நடத்தும் போது முரண்பட்ட முடிவுகளைத் தரக்கூடாது.
- நம்பகத்தன்மை செயல்களான அமைத்தல், மதிப்பெண் தருதல், தரநிலை மற்றும் நிலையான நம்பகத்தன்மையுடன் மதிப்பீடு அமைய வேண்டும்.
திட்ட வடிவமைத்தலில் மதிப்பீடு திட்ட வடிவமைத்தலின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நேரடியாக திட்டத்திற்கான நோக்கம் மற்றும் கற்றல் விளைவுகளோடு தொடர்புடையது. - மதிப்பிடப்பட்ட வேலை அளவு நிர்வகிக்கப்பட வேண்டும். மதிப்பீடு செய்ய திட்டமிடுதல் மற்றும் கால அளவு ஆகியவை சாதகமான நம்பகமான விவரங்களை மதிப்பிடல் அளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மதிப்பீடுகளிலும் அதன் நோக்கங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தி அதற்கான ஒவ்வொரு திட்டங்களிலும் வளர்ச்சிகால மற்றும் முழுமைகால மதிப்பீடு முறை சேர்க்கப்பட வேண்டும்.
- மதிப்பிடுதலில் ஆசிரியரது கொள்கைகள் மற்றும் யுத்திகள் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
- மாணவர்களை மதிப்பிடுதலில் தங்கள் பொறுப்புகளையும் பணிகளை மதிப்பிடுதலில் ஈடுபடுத்த வேண்டும்.
மாணவர்கள் கற்றல் மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையின் கோட்பாடுகள்
1. மாணவர் கற்றல் மதிப்பீடு கல்வி மதிப்புகளுடன் தொடங்குகிறது:
மதிப்பீடு என்பது முடிவு அல்ல. கல்வி முன்னேற்றத்திற்கான ஒரு சொல், பயனள்ள நடைமுறை என தொடங்குகிறது. மாணவர்களுக்கு மதிப்பு கற்றல் வகைகளையும் அவற்றை அடைவதற்கு உதவ மதிப்பிடுவதற்கு தேர்வு செய்தல், கல்வி நோக்கங்களை மதிப்பீடுகளையும் பற்றிய கேள்விகளுக்கு மதிப்பு சார்ந்த அணுகுமுறைகளும் கவனித்தலை மேம்படுத்துவதற்கான செயல்முறையை அளவிட மதிப்பு கல்வி ஒரு பயிற்சியாக இருக்கும்.
2. மதிப்பீடு என்பது பல்வகைப்பட்ட, கற்றல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் வெளிப்படுத்தப்படும் அறிவை பிரதிபலிக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கற்றல் என்பது ஒரு சிக்கலான செயல். இது மாணவர்களுக்கு தெரிந்தவற்றை மட்டுமல்ல அறிவையும், திறமையையும் மட்டுமல்ல வகுப்பிற்கு அப்பாற்பட்ட கல்வியையும் வெற்றிக்கு வழிநடத்தும் மனநிலையின் மனோபாவங்களையும் உள்ளடக்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஒருங்கிணைப்பு மாற்றம் வளர்ச்சி வெளிப்படுத்த காலப்போக்கில் அவற்றை பயன்படுத்தி உண்மையான செயல்திறன் உட்பட பல்வேறு முறைகள் மதிப்பீடு செய்ய பயனுள்ளதாக அமையும்.
3. மதிப்பீடு செயல்திறனை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் தெளிவான வெளிப்படையாக கூறப்பட்ட நோக்கங்களை கொண்டிருக்கும் போது சிறந்ததாக இருக்கும்.
மதிப்பீடு ஒரு இலக்கு சார்ந்த செயல்முறை ஆகும். இது கல்வி நோக்கங்களுக்காகவும் வெளிப்பாடுகளுக்குமான கல்வி செயல்திறனை ஒப்பிடுவதாகும். இத்திட்டம் பாடத்திட்டத்தில் ஆசிரியர்களின் நோக்கங்களை கொண்ட நிறுவனங்களின் பணியிலிருந்து பெறப்பட்டவை ஆகும். மாணவர்களின் சொந்த இலக்குகளை அறிந்து செயல்முறையாக திட்டம் வகுக்கும் போது அதன் நோக்கம், சிறப்பம்சம், உடன்பாடு மற்றும் என்ன நோக்கத்திற்காக என்ன தரநிலைகள் பொருந்தும் என்பதை பற்றிய தெளிவான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். மதிப்பீடு எங்கே, எப்படி திட்ட இலக்குகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கவனம் செலுத்த தெளிவான, பகிரப்பட்ட, செயல்படுத்தக்கூடிய இலக்குகள் மதிப்பீட்டின் செயல்திறனை மேம்படுத்துவதாக அமையும்.
4. மதிப்பீடு விளைவுகளின் மீது கவனம் செலுத்துகிறது. ஆனால் அந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் அனுபவங்களுக்கு ஏற்ப மதிப்பீடு இருக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியின் விளைவுகளை தெரிந்து கொள்வதால் முடிவுகள் பற்றிய தகவல்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அந்த விளைவுகளை மேம்படுத்துவதற்கு, பாடத்திட்டங்கள் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் முயற்சிகள் குறிப்பிட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
5. மதிப்பீட்டில் மாணவர்களின் அத்தகைய அறிவுசார்ந்த நிலைகளை கற்றுக்கொள்ளவும், தங்கள் கற்றலை முழுமையாக மேம்படுத்திக் கொள்ள மதிப்பீட்டு விளைவுகள் கவனம் செலுத்துகிறது.
கல்வி சமுகம் முழுவதும் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் மதிப்பீடு பரந்த முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்கிறது.
மாணவர் கற்றல் ஒரு பரந்த மறுசீரமைப்புக்கான வழி. இதனால் மதிப்பீடு முயற்சிகள் சிறிய அளவில் இருக்கும் போது கல்வி சமூகத்தில் மக்களை ஈடுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் ஆசிரியர் முக்கியமானதாகும். மதிப்பீடானது பள்ளிகளுக்கு வெளியில் இருக்கும் தனிநபர்களையும் உள்ளடதாகும்.
6. மதிப்பீடு என்பது ஒரு பெரிய தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும் போது அதன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.
மதிப்பீடானது தானாக மாறும் தன்மை கொண்டது. கல்வி செயல்பாட்டில் தலைமைப்பணியை வளர்ப்பதே இதன் முக்கிய இலக்காகும். கற்றல், கற்பித்தலில் தரம், திட்டமிடல், நிதிநிலை அறிக்கை, முடிவெடுக்கும் திறன் போன்றவை தலைமைப் பண்பிற்கான அடிப்படை கூறுகளாகும். மேலும் மதிப்பீடு கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் முயற்சிகளாக கருதப்படுகிறது.
7. மதிப்பீட்டு கல்வியாளர்களின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
கல்வியை பங்கிட்டுக் கொள்வது என்பது கல்வியின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வழிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஆதரவளிப்பதாக அல்லது அதை நம்பியுள்ள மக்களுக்கு, மாணவர்களும் சமுதாயமும் கல்வியாளர்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய முயற்சியின் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்கு பொருத்தமான கடமை இருக்கிறது.
Comments
Post a Comment