Erikson’s Psycho - Social Theory (Tamil)

 எரிக்சனின் உள சமூகக் கோட்பாடு 

 அறிமுகம்

பிராய்டை (Freud’s) பின்பற்றிய பலர் அவருடைய கருத்துக்களில் பயனுள்ளவற்றை எடுத்து அவருடைய தொலைநோக்கை (Vision) மேம்பாடு அடையச் செய்தனர்; இவர்களில் மிக முக்கியமானவராகிய எரிக் எரிக்சன் (Erik Erikson, 1902 – 1994 ) குழந்தைகளின் ஒவ்வொரு நிலைகளிலும் வளர்ச்சி பற்றிய கருத்தை விரிவாக்கினார்; எரிக்சன், தன்முனைப்பு (Ego) மற்ற தூண்டுதல்களுக்கு மேல், வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் குழந்தையை, திறன்கள் நோக்கங்கள் பெற்று சமூகத்தில் செயல்பட்டு பயன் அளிக்கக் கூடியவராக செய்கிறது என்பதை வலியுறுத்துகிறார். ஒரு அடிப்படை உளவியல் - சமூகபோராட்டம் (Basic psycho - social conflict) தொடர்ந்து எதிரானதிலிருந்து நேரானதாக மாற்றி தீர்க்கப்படுவது ஒவ்வொரு நிலையிலும் பயனுள்ள அல்லது பொருத்தமற்ற விளைவுகளை தீர்மானிக்கிறது படம் - 1 இல் காட்டியுள்ளபடி எரிக்சனின் முதல் ஐந்து நிலைகள் பிராய்டின் நிலைகளுக்கு ஒப்பாக உள்ளன ஆனால் எரிக்சனின் மூன்று இதர நிலைகளான, முன்முதிர் பருவம் (Young adulthood) நடுமுதிர் பருவம் (Middle adulthood) பின்முதிர் பருவம் (Old age)ஆகியவற்றைச் சேர்த்துள்ளார் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் வளர்ச்சியின் தன்மையை புரிந்து கொண்டவர்களில் இவர் முதன்மையானவர்.

 

 

 

முடிவுரை (Conclusion

உளவியலில் சிறந்த சிந்தனையாளர்கள், குழந்தை வளர்ச்சியின், வௌ;வேறு நிலைகளை விளக்கவும் ஆய்வு செய்யவும், வௌ;வேறு கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர் இந்த எல்லா கருத்துக்களும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், அவை, குழந்தையின் வளர்ச்சி (Child development) பற்றி புரிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகித்தன. குழந்தைகளின் வளர்ச்சி, நடத்தை, சிந்தனை இவற்றைப் புரிந்து கொள்ள, பல்வேறு கோட்பாடுகளையும், நோக்குகளையும் கல்வியியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)