Characteristics of Effective Teacher (Tamil)

 சிறந்த ஆசிரியரின் பண்புகள் 

 அறிமுகம்

ஓர் உயர்ந்த ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிப்பதை விரும்பவேண்டும் மேலும் தாம் சிறந்த கல்வியாளராக இருக்கவேண்டும் என்பதே பல ஆசிரியர்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. மாணவர்களுக்கு விவரங்களை தெரிவிப்பது மிக திருப்திகரமான செயலாகும். அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு அவர் கருத்துகளை புரிந்துகொள்ளுதல் மட்டுமின்றி அவற்றின் நடைமுறை பயன்களை தெரிந்துகொள்கின்றனர் என்பதை உறுதி செய்வது பயனுள்ள செயலாகும். கற்பிக்க பல முறைகளைப் பயன்படுத்தலாம் உமது கற்பித்தல் முறை உரிய தனித்தன்மை வாய்ந்தது என்ற போதிலும், மாணவர்களை ஈடுபடுத்தி ஆர்வத்தை தூண்டி கற்க வைத்தல் மிக முக்கியமானது. பலர் அந்த பாடத்தின் மீது தமக்குள்ள ஆழ்ந்த ஆர்வத்தால் கற்பிக்கின்றனர்.உமக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆர்வம் இருந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவர்;. அந்த ஆர்வம் அப்பாடத்தில் சிறந்து செயல்பட உதவும்.மற்றவர்கள் கல்வி அமைப்பில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் அவற்றிற்கு தீர்வு காணவும் கற்பிக்கலாம், எப்படி இருப்பினும் ஆசிரியர் கற்பித்தலை தவிர வேறு எதையும் செய்ய இயலாது. எனவே அநேக ஆசிரியர்கள் இதை தம் குறிக்கோளாக வைத்துக்கொள்கின்றனர். 

ஆர்வத்தை தூண்டுதல் 

ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வில் எல்லா பகுதிகளிலும் ஊக்குவிக்க முயல்கின்றனர். பல ஆசிரியர்களின் முக்கிய குறிக்கோள் தான் ஒரு முன்மாதிரியாக இருத்தல் ஆகும். முன்மாதிரி என்பவர் மாணவர்களை சிறந்தவர்களாக ஆக்க முயலும்படி ஊக்குவித்து அவர்களை அனுபவம் மூலமும் ஆர்வத்தின் மூலமும் அவர்களின் முழுத்திறனை பயன்படுத்தி சிறந்தவர்களாக ஆக்க உதவுவதுதான்.ஆசிரியர்கள் ஆர்வமற்ற மாணவனை கற்றலில் முழுமையாக ஈடுபட தூண்டலாம்.  அவர்களை ஊக்குவித்து பங்குபெறச் செய்யலாம். ஒரு உயர்ந்த ஆசிரியர் மாணவர்களை படிக்கச் செய்யலாம்,மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம் அறிவியலை அல்லது கணிதத்தை கேளிக்கையானதாக செய்யலாம், சரித்திரத்தை சுவையான கதைகளாக ஆக்கலாம். 

கற்றல்
கற்பித்தல் என்ற தொழிலில் ஒவ்வொரு நாளும் சில புதியவற்றை கற்றுக்கொள்ளல் நிகழ்கிறது. பல கல்வியாளர்கள் இதையே தம் தொழிலிலிருந்து தாம் பெறும் முக்கிய நலனாக காட்டுகின்றனர்.தொழில் நிலைப்பற்றி பார்க்கும்போது ஆசிரியராக பெறும் கல்வி இதற்கு முன் அறிந்திராத பல செய்திகளை கண்முன் காட்டுகிறது. கற்பித்தல் மூலம் ஆசிரியர்கள் தம்மைப் பற்றி வெகுவாக தெரிந்துகொள்கின்றனர். 

சிறந்த ஆசிரியரின் பண்புகளை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்.

  • ஆசிரியர் கற்பித்தலுக்கான காரணங்களை புரிந்துகொள்ளுதல்.  ஆசிரியரிடமும்;, மாணவரிடமும் நன்னடத்தையை உருவாக்குதல்.  
  • பொறுமை, விடாடுயற்சி இவற்றை இணைத்தல்.  
  • செயல்படக்கூடிய பாடத்திட்டத்தை அமைத்தல்.
  • கற்பிக்கும் திறன்களையும் மதிப்பிடும் திறன்களையும் முழுமையாக்குதல்.  
  • பாடசாலைக் கலாச்சாரத்தை நேர்மறையாக இணைத்தல்.
  • குழந்தைகளின் செயல்கள் நடத்தைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து. குழந்தைகளின் விளையாட்டை ஆர்வத்துடன் கவனித்தல்.
  • குழந்தைகளின் பேச்சுகள், செயல்கள் இவற்றை குறித்து வைப்பதாகும்.  
  • குறிப்புகளையும் புகைப்படங்களையும் கவனித்து அதன் முக்கியத்துவத்தை கண்டறிதல்.
  • குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின், குழந்தைகளின் கற்றல் பற்றி மிகஆர்வத்துடன் கலந்துரையாடுதல்.  
  • சக ஊழியர்களுக்கும், பிள்ளைகளின் குடும்பத்தினருக்கும், அவர்களின் கருத்துக்களை கேட்டல்.
  • மேலும் கற்றுக்கொள்ள தொழில் சம்பந்தப்பட்ட இலக்கியங்களைப் படித்தல், புகைப்படங்களை காட்டி தம்மைப் பற்றிய கதைகளை கூறி குழந்தைகளின் கருத்துகளை கேட்டல்.
  • புதிய விளையாட்டுகள், கற்றல் வாய்ப்புகள் இவற்றை ஊக்குவிக்க ஏற்ற சூழ்நிலையையும் பொருட்களையும் மாற்றி அமைத்தல்.
  • தன்னையே அறிதல்.  
  • தனது உள்ளத்தையும் மனதையும் தொடக்கூடிய விவரங்களை கண்டறிதல்.
  • குழந்தையின் கண்ணோட்டத்தை தேடுதல்.
  • உடல் மற்றும் சமூக உணர்ச்சி சூழலை ஆராய்தல்.
  • பல்வேறு விதமான நோக்கங்களை ஆய்வு செய்தல்.  
  • அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான, வாய்ப்புகளையும் நிகழ்வுகளையும் ஆராய்தல்.
  • ஆய்வு மனப்பான்மை கொண்ட ஆசிரியர் தாம் பாடம் நடத்திய போது எது சிறந்த விளைவுகளையும் ஏற்படுத்தியது எது பயன்படவில்லை என்பதை ஆய்வு செய்கிறார். ஒரு பாடம் நன்றாக நடத்தப்படாத போது அப்பாடத்தை அதே முறையில் திரும்ப கற்பிப்பது இல்லை. இது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. மேலும் அவர் அதிலிருந்து கற்றுக்கொள்கிறார்.
  • சிந்திக்கும் ஆசிரியர் தன் வகுப்புகளில் இயற்கையாக உள்ள மாற்றங்களை கண்டுகொள்கிறார். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர் குழுக்கள் அவருக்கு இருக்கும்போது) எல்லா வகுப்புகளையும் ஒரே மாதிரியாக கருதி ஒரே பாடத்தை நடத்துவதில்லை. 
  • ஆசிரியர் வகுப்பில் திட்டமிட்ட காலத்தை எடுத்துக்கொண்டு தன் பாடத்தின் திறனை தீர்மானித்து அதை மேலும் முன்னேற்ற தகுந்த நடவடிக்ககைளை எடுக்கிறார்.
  • ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுடைய வலிமையை அறிகிறார். கற்றலை மேம்படுத்த அவர்களின் வலிமைகள் ஆர்வம் காட்டக்கூடிய பகுதிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்கிறார்.
  • ஆசிரியர் தன் குறைகளை அறிந்து திட்டமிட்ட செயல்கள் மூலம் அவற்றை மேம்படுத்த டுயலுகிறார்.
  • ஆசிரியர் மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்,நிர்வாகிகள் ஆகியோரின் கருத்துகளை தெரிந்துகொள்கிறார். பயனுள்ள குறை கூறுதலை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
  • தான் மட்டும் தனியாக சிறப்பிக்க முடியாது என்பதை அறிகிறார்;. கற்பித்தல் ஒரு சிக்கலான செயல் என்பதால் மற்றவரின் உதவியை ஏற்றுக்கொள்கிறார்.
  • மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் அவர்கள் அதிலிருந்து பயன்பெறுவார் என்பதையும் உணர்ந்து தம் அநுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


 




Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)