Jean Piaget’s Cognitive-Development Theory (Tamil)

 ஜீன் பியாஜேயின் அறிவு வளர்ச்சிக் கோட்பாடு

 அறிமுகம்

பியாஜேயின் அறிவு வளர்ச்சி கொள்கையின்படி குழந்தைகள் தம் உலகை ஆராய்ந்து, மாற்றி அமைக்கும்போது, தம்(அறிவை) கருத்துக்களை உருவாக்குகின்றனர். பியாஜேயின் கருத்துப்படி, மூளை வளர்ந்து, அனுபவங்கள் விரிவடையும் போது, ஒவ்வொன்றும், வேறான சிந்திக்கும் முறைகள் பெற்ற நான்கு நிலைகளை கடக்கின்றன கீழே கொடுக்கபபட்டுள்ள படம் - 2 பியாஜேயின் நிலைகளை சுருக்கமாக விளக்குகின்றன.

 

 
 பியாஜேயின் அறிவு வளர்ச்சிப் படிநிலைகள் 
1. புலன் இயக்க நிலை (பிறப்பு முதல் 2 வயது வரை)
Sensorimotor stage (Birth-2 years)  
 
குழவிகள் (Infants), தம் கண்கள், காதுகள், கைகள், வாய் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சிந்திக்கின்றனர் இதனால் பொருள்களை பெட்டிகளுக்குள் வைத்தல், எடுத்தல் போன்ற இயக்க செயல்களில் ஈடுபடும் வழிகளை (Solving sensorimotor problems) கண்டு பிடிக்கின்றனர்.
 
2. செயலுக்கு முற்பட்ட நிலை (2 வயது முதல் 7 வயது வரை) 
    Preoperational stage (2 -7 years) 
 
பாடசாலை செல்வதற்கு முன் உள்ள நிலையில் உள்ள குழந்தைகள், தம் உணர்வு மூலம் வந்த கண்டுபிடிப்புகளை, செய்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் இந்த நிலையில் மொழி வளர்ச்சி, கற்பனைத் திறன் ஏற்படுகிறது ஆயினும் அவர்களின் சிந்தனை, மற்ற இரு நிலைகள் போல ஆக்க பூர்வமானதாக இல்லை.

3. புலனீடான செயல் நிலை/பருப்பொருள் நிலை (7 வயது முதல் 11 வயது வரை)
Concrete operational stage (2-7 years) 
 
குழந்தைகளின் சிந்தனை தர்க்க ரீதியாகவும் (Logical), நன்கு அமைக்கப்பட்டதாகவும் உள்ளது. பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகள், தனக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் பொருட்களின் ஒரு பண்பினை மட்டுமே ஒரு சமயத்தில்  உணரவியலும்; எனவே பொருட்களின் உருவம், இடம் மாறினாலும் அவற்றின் அளவு குறையாது என்னும் கருத்து உணரப்படாது. பொருட்களை அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் படிப்படியாக அமைக்கின்றனர் ஆயினும் அவர்களின் சிந்தனை வயது வந்தோரின் புத்திக் கூர்மையைவிட குறைவாக உள்ளது அது கருத்து வடிவத்தில் இல்லை.
 
4. முறையான செயல் நிலை / கருத்தியல் நிலை (11 வயதிற்கு மேல்)
 Formal operational stage (11 years onwards) 
 
 கருத்துக்களை சிந்திக்கும் திறன் கொண்ட வளரிளம் பருவத்தினர் (Adolescents), பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, ஒரு கருதுகோளில் தொடங்கி, யூகித்து,  மாற்றங்களை தனிமைப்படுத்தி, இணைத்து, எந்த முடிவுகள் சரியானவை என கண்டறிகின்றனர் வாய்மொழி கருத்துக்களின் உண்மையை உலக சூழ்நிலைகளுடன் ஒப்பிடாமல் மதிப்பிடும் திறன் பெறுகின்றனர்.
 

பியாஜேயின் கருத்துக்கள், ஆசிரியர், பெற்றோர், குழந்தைகளுடன் செயல்படும் மற்ற எல்லோருடைய குழந்தைகளை கவனித்தல், அவர்களின் சூழலுக்கேற்ப நடந்துகொள்ளுதல் ஆகியவற்றை மாற்றியுள்ளது. குறிப்பாக பியாஜேயின் கருத்துக்கள், பள்ளியில் கற்பித்தலில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள், பியாஜேயின் கருத்துக்கள் மற்ற நாட்டு குழந்தைகளுக்கும் பொருந்துகிறது என ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன, குறிப்பாக தொடக்க நிலையிலுள்ளவர்களைப் பற்றிய கருத்துக்கள் பொருத்தமாக இருந்தன அவருடைய சில கண்டுபிடிப்புகள், கருத்துக்கள், திறனாய்வு செய்யப்பட்ட போதிலும், ஜீன் பியாஜேயின் கருத்துக்கள் குழந்தைகளின் நடத்தை பற்றிய ஆய்வுக்கு முன் மாதிரியாக இருந்தது பொதுவாக அறிவு வளர்ச்சியை புரிந்து கொள்ள  ஒரு தொடக்க நிலையாக பியாஜேயின் கோட்பாடுகள் உள்ளன. 


 




 




 

 

Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)