Activity Based Learning (Tamil)
செயல்வழி கற்றல்
அறிமுகம்
செயல்வழி கற்றல் என்பது பொதுவாக, மாணவர்களுக்கு வழிகாட்டல் முறை மூலம், கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது. இக்கற்றலானது, மாணவர்கள் பொருள்பட கற்கக்கூடிய சூழலையும், சிந்தனை செய்யும் திறனையும் உருவாக்குகின்றது.
இதன் வரைவிலக்கணங்களாக
செயல்வழி கற்றல் என்பது செயல்களை மாணவர்கள் ஈடுபாடுடன் செய்வது மற்றும் செய்கின்ற செயலை சிந்திப்பது (Bonwell & Eiser, 1991, P.2)
“வகுப்பில் பாட சம்பந்தமாக கவனிப்பது, பார்பது மற்றும் குறிப்பு எடுப்பது ஆகும்.” (Felder & Breat (2009)
கற்பனை சூழல்களில் கற்காமல் நிஜ வாழ்வில் சிந்திக்கும் திறன்களையும் அவர்களுக்கான சவால்களையும் செயல்வழிக்கற்றல் இணைக்கிறது. இது வாய்ப்புகளின் முழு நன்மைகளையும் கற்றலில் பின்வருமாறு வழங்குகிறது.
- தன்னிச்சையான விளையாட்டு
- திட்டமிட்ட, தேவையுடைய விளையாட்டு
- விசாரணையும், தேடலும்
- நிகழ்வுகளும், வாழ்க்கை அனுபவங்களும்
- கவனமாக கற்றல் மற்றும் கற்பித்தல்
செயல்வழிக் கற்றலின் கொள்கைகள்
கல்வி உளவியலார்களும், ஆசிரியர்களும் கற்றலின் பல கொள்கைகளை அடையாளம் கண்டுள்ளனர், மேலும் கற்றல் செயல்முறைகளுக்கு பொதுவாக பொருந்தும் வகையில் இவற்றை கற்றல் சட்டங்கள் என குறிப்பிடுகின்றோம். இக்கொள்கைகளை கண்டுபிடித்து சோதித்து நடைமுறை சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
1. கற்கும் கற்பிப்பாளரின் செயல்திறன் அமைப்பு
நன்கு அறிந்திருக்கும் கோட்பாடு, மாணவர்கள் ஏற்கனவே அறிந்த செயலுடன் புதிய தகவல்களை இணைக்கும் உண்மையை உள்ளடக்கியது. இங்கே புதிய மற்றும் பழைய தகவல்கள் மனதில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. பழைய தகவல்கள் தவறானது என்றால் புதிய தகவல்களை கற்கும் போது சமரசம் செய்துகொள்வதும், தவறான அல்லது முழுமையற்ற மாதிரிகள் சரிசெய்யப்பட்ட கருத்தியல் மாற்றத்தின் ஒரு செயல்முறையாக கற்க முடியும்.
2. பிரதிபலிப்பு - மாணவன் எதைத் கற்றானோ அதன் பிரதிபலிப்பை காணக்கூடியதாக இருக்கின்றது.
3. ஆசிரியர் மாணவர் இடைவினை - மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான இலக்குகள் மற்றும் முறைகள் பற்றிய தொடர்பாடல் காணப்படும்.
4. திறனாய்வு - பாடப்பொருளை கற்றுக்கொள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பல்வேறு வழிகளையும், முறைகளையும் அறிவதன் ஊடாக வழிகளையும், முறைகளையும் ஆசிரியர்களால் வழிப்படுத்தலாம்.
5. சிக்கலான சூழல் - மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைக் கொண்டு கற்றல் பணிகளை ஒப்பீடுவதோடு பிரதிபலிப்பு பகுப்பாய்வு செய்கின்றனர்.
6. இயக்கப்படும் சூழ்நிலை - கற்றல் பணியை தொடங்குவதற்காக நிலைமைகளின் தேவையை கருத்தில் கொள்ளப்படுகிறது.
7. ஈடுபாடு - கற்றலுக்கான வழிகாட்டுதல் என்பது உண்மையான வாழ்வின் பணிகளை பிரதிபலிப்பதற்கான செயல்கள் ஆகும்.
8. நல்ல பயிற்சியானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே தொடர்புகளை ஊக்குவிக்கிறது.
மாணவர்களின் ஊக்கத்திற்கும், ஈடுபாட்டிற்கும் முக்கிய காரணம், அடிக்கடி மாணவர் ஆசிரியர் வகுப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்பு கொள்வதாகும். ஆசிரியர்களின் அக்கறையானது மாணவர்களுக்கு கடினமான நேரத்தில் உதவுவதோடு, தொடர்ந்து பணியாற்றவும் உதவுகிறது.
9. நல்ல பயிற்சி மாணவர்களுக்கிடையே ஒப்படைப்பு மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குகிறது.
ஒரு தனியாள் பந்தயத்தைவிட குழு முயற்சியே கற்றலை மேம்படுத்தும். நல்ல கற்றல், நல்ல சேவை கூட்டு முயற்சிகள் மற்றும் சமூகம் போன்றது, போட்டியில்லாதது, தனித்தன்மை வாய்ந்தது. மற்றவர்களுடன் சேர்ந்து சேவை செய்வது கற்றலின் ஈடுபாட்டை அதிகரிக்கும்.
10. நல்ல பயிற்சியானது உடனடி கருத்தை தரும்.
நமக்கு தெரிந்ததைத் தெரிந்துகொள்வதும், தெரியாததை அறிவது என்பதும் நம்முடைய கற்றலின் மையமாக உள்ளது. இருக்கும் அறிவு மற்றும் திறனை மாணவர்கள் மதிப்பிடுவதிலும் பின்னர், வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் செயல்திறனின் கருத்தினைப் பெறவும், அவற்றை அடிக்கடி செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றது. இதன் பிரதிபலிப்புகளானது உடனடி விளைவுகளைத் தருவதாக அமையும்.
11. பணிக்கான நேரத்தை வலியுறுத்துகிறது.
நேரமும், ஆற்றலும் கற்றலை சமப்படுத்துகிறது. கற்றலின் பயனானது மாணவனுடைய சிக்கலையும், ஒரே தொழிலையும் தேர்ந்தெடுக்க பயன்படுகிறது. நேரத்தின் உண்மையான அளவை ஒதுக்கிடுவது என்பது மாணவர்களுக்கு பயனுள்ள கற்றலையும், ஆசிரியர்களுக்கு பயனுள்ள கற்பித்தலையும் தருகிறது.
12. நல்ல பயிற்சி உயர்ந்த எதிர்ப்பார்பின் தொடர்பாகும்
புதிய தொழில்நுட்பங்கள் வெளிப்படையாகவும், திறமையாகவும் உயர்ந்த எதிர்பார்ப்புகளை தொடர்புபடுத்தும். குறிப்பிடத்தக்க உண்மை வாழ்வின் பிரச்சினைகள், முரண்பட்ட கண்ணோட்டங்கள், அல்லது முரண்பாடான தகவல்கள் கற்றலின் சவால்களை மாணவர்களிடம் இயக்க அவர்களது அறிவாற்றல் திறன்களை பகுத்தல் தொகுத்தல் அவற்றை பயன்படுத்தி மதிப்பீடு செய்யும்.
13. பல்வேறு திறன்கள் மற்றும் கற்றலின் வழிகளை நல்ல பயிற்சி வழிகாட்டும்.
பல்வேறு மாணவர்கள் பல்வேறு திறன்களையும், நடையுடைபாவனைகளுடன் பாடசாலைக்கு வருகின்றனர். நுண்ணறிவுடைய மாணவர்கள் ஆய்வகங்களிலும், ஓவிய அறைகளிலும் தங்களுடைய நேரங்களை பயன்படுத்துகின்றனர் கோட்பாட்டின் அனுபவத்தை விட செய்முறை பயிற்சி அனுபவங்களே நம்பிக்கையைத் தரும். மாணவர்கள் தாங்கள் செய்யும் வேலைகளில் அவர்களின் திறன்களும் கற்றலும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தேவைப்படுகிறது. பின்பு அவர்கள் புதிய வழிகளில் கற்க தள்ளப்படுகின்றனர். அதனால் இந்த புதிய கற்றல் சுலபமாக வராது.
செயல்வழிக் கற்றலுக்கான உபாயங்கள்
1. மாணவர்களிடையே நினைவுகளைப் பகிர்தல் : ஒத்த வயதுடைய மாணவர்கள் தங்களிடையே வினாக்களைக் கேட்கிறார்கள் பிறகு தங்கள் எண்ணங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்பு அவற்றிற்கான பதில்களைச் சிந்திக்கின்றனர்.
2. கதாபாத்திரமாக செயல்படுதல்
ஒவ்வொரு மாணவனும் ஒரு தனி காதாபாத்திரமாகவே மாறி நடித்து பாடப் பொருள்களை எளிதாக கற்றுக்கொள்ளுதல்.
3. வரம்பு எல்லையை கண்டுபிடித்தல்
கற்றலுடன் இணைந்து செயல்படுகின்ற ஒரு குழு விவாத முறையாகும்.
4. ஒத்தவயதுடையவர்களின் மீள் பார்வை:
தன்னுடன் பயிலும் மாணவர்கள் எழுதிய பாடப்பொருளை மீள்பார்வை செய்து கருத்துக்கூறல்.
5. கலந்துரையாடல்
ஒரு வெற்றிகரமான விவாதம் சரியான கேள்விகள் உருவாவதால் அமைகிறது. உயர்சிந்தனை உருவாக்கக்கூடிய வினாக்களை கேட்பதற்கு விவாதத்தில் வழிவகை செய்யும்.
6. உண்மையான தகவல்களை பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்.
மாணவர்கள் உண்மையான பலவகையான தகவல்களை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார்கள்.
7. விளையாட்டு வழிக் கற்றல்
மாணவர்களுக்கிடையே போட்டி, பயிற்சி மூலம் கற்றலை வளர்த்தல். அல்லது கணினிவழித் தூண்டுதல் மூலமாகவும் கற்றல் செயல்பாடுகளை அதிகப்படுத்தலாம்.
செயல் வழிக்கற்றல் நுட்பத்தின் நோக்கமானது மாணவர்கள் எளிமையாக கற்க உதவுகிறது. இந்த கற்றலானது வழக்கமான வகுப்பறையின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு இன்றி இருக்கும். மேலும் செயல்வழிக் கற்றல் பயிற்சி மூலம் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன்களையும் மற்றும் பாடப்பொருள் பற்றிய அறிவையும் ஆசிரியர் பின்னூட்டமாக பெறுகிறார்.
Comments
Post a Comment