Approaches for selecting objectives of Curriculum (in Tamil)
கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவுசெய்வதற்கான அணுகுமுறைகள் அறிமுகம் எவையேனும் ஒன்றைக் கையாளும் விதம் , ஏதேனுமொன்றினைப் பற்றி சிந்திக்கும் தன்மை அல்லது ஒரு விடயத்தினைச் செய்துமுடிக்கப் பயன்படுத்தும் முறையினை “ அணுகுமுறை ” எனக் கூறலாம் மேலும் ஒரு விடயத்தினைப் பற்றிய ஒருவரின் அணுகுமுறையில் அவர் கொண்டுள்ள அறிவு , திறன் , மனப்பாங்குகள் அவரது புலக்காட்சிகள் , விழுமியங்கள் மற்றும் உண்மை உலகினை அவர் நோக்கும் விதம் போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்தி அவரது அணுகுமுறையில் அவை பிரதிபலிக்கின்றன இவை நபருக்கு நபர் வேறுபடும் இந்த வகையில் ஓர் துறைசார்ந்த அணுகுமுறையினை விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு துறைசார்ந்த வகையில் எண்ணக்கருக்களை அறிஞர்கள் , துறைசார் வல்லுநர்கள் நோக்கும் விதம் , கையாளும் விதம் , சிந்திக்கும் விதம் போன்றன அத்துறைசார்ந்த அணுகுமுறை எனப்படுகின்றது எனவே மேற்கூறிய விதிகளுக்கமைய கலைத்திட்டக் குறிக்கோள்களைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற அணுகுமுறைகள் பற்றி ஒவ்வொன்றாக நோக்குவோம் . கலைத்திட...